ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
oru naaLum enai maravaa deivam neeraE
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் -2
naantriyOdu ummai thuthikkiraEn
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே -2 -ஒரு நாளும்
nantri yEsuvaE ennaaLum yEsuvaE
வருடங்கள் காலங்களாய்
varudangaL kaalangaLaai
என்னை வழுவாமல் காத்தீரையா -2
ennai vazhuvaamal kaaththeeraiyaa
உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர்
um valla karaththaal neer ennai thaangineer
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் -2 -நன்றி
um sirahaalaE moodi kaaththitteer
வாக்குத்தத்தம் தந்தவரே
vaakkuththaththam thanthavaraE
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே -2
unthan vaakkil uNmai uLLavaraE
யார் மறந்தாலும் நான் மறவேனே
yaar maranthaalum naan maravEnaE
என்ற வாக்கெனக்கு அளித்தவரே -2-நன்றி
entra vaakkenakku aLiththavaraE
எதிர்காலம் உம் கையிலே
yethirkaalam um kaiyilaE
எந்தன் பயம் யாவும் நீங்கியதே -2
enthan bayam yaavum neengiyathaE
நீரென் பக்கத்தில் நான் பயப்படேனே
neer en pakkaththil naan bayappadEnaE
என் துணையாக இருக்கின்றீரே -2-நன்றி
en thuNaiyaaha irukkinteeraE