மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
mei baktharaE neer vizhiththezhumbum
சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;
santhOshamaai innaaLai vaazhththidum
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
intraikku lOha meetpar jenmiththaar
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
viNNOr ivvinthaiyai koNdaadinaar
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
karththaathi karththar maanidanaanaar
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்.
ratchaNya karththaavaaha thOntrinaar
இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
ithO narcheithi kELum intraikkaE
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
immaanuvEl thaaveethin oorilaE
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
poolOha meetparaaha piranthaar
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
ellOrukkum santhOsham nalhuvaar
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
entraE Or thoothan bethlEm meipparkkaE
இராவில் தோன்றி மொழிந்திட்டானே.
raavil thOntri mozhinthittaanaE
அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
annEram vaanOr koottam mahizhnthu
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
aanantha paattai paadiyum isainthu
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
viNNil karththaavukku maa thuthiyum
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
maNNil nallOrkku samaathaanamum
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
entrallEluuyah paadi vaazhththinaar
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.
deiveeha anbin maaNbai pOtrinaar
இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
ichcheithi kEtta meippar oorukku
அற்புத காட்சி காண விரைந்து,
arputha kaatchi kaaNa virainthu
யோசேப்புடன் தாய் மரியாளையும்
yOsEppudan thaai mariyaaLaiyum
முன்னணைமீது தெய்வ சேயையும்
munnaNai meethu deiva sEyaiyum
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
kaNdaE deivanbai eNNi pOtrinaar
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.
aananthamaai tham manthai kEhinaar
கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
kettuppOnOrai meetta nEsamaam
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
unnatha anbai sinthai seiyvOm naam
தம் ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
tham jenmamuthal saavu mattukkum
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
appaalan seiytha deiva vaazhkkaiyum
அன்போடு தியானம் செய்து வருவோம்,
anbOdu thiyaanam seiythu varuvOm
நம் மீட்பர் பின்னே செல்ல நாடுவோம்.
nam meetpar pinnaE sella naaduvOm
அப்போது வான சேனை போல் நாமும்
appOthu vaana sEnai pOl naamum
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
sangeetham paadalaam ekkaalamum
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
intha kembeera naaL piranthaar
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
annaaL nam mEl tham jOthi veesuvaar
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
nam raayan anbaal ratchip padainthOm
அவரின் நித்திய துதி பாடுவோம்.
avarin niththiya thuthi paaduvOm