நீரின்றி வாழ்வேது இறைவா
neerintri vaazhvEthu iraivaa
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா -2
um ninaivintri mahizhvEthu dEvaa
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் -2
ulahaththil nooraaNdu naan vaazhntha pOthum
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் — நீரின்றி
um illaththil vaazhum oru naaLaE pOthum
பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
pala kOdi vaarththaihaL naan kEtta pOthum
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் -2
yEsuvaE neer pEsum oru vaarththai pOthum
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே -2
Oraayiram jeevan uyir vaazhumaE
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே — நீரின்றி
um vaarththaiyil uNdu arputhamaE
கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
kallukkuL thEraiyai vaiththavar neer
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் -2
atharkuLLum jeevanai thanthavar neer
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா -2
ummaiyantri aNuvEthum asaiyaathaiyaa
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதையா — நீரின்றி
um thuNaiyintri uyir vaazha mudiyaathaiyaa
எத்தனை நன்மைகள் செய்தீரையா
eththanai nanmaihaL seiytheeraiyaa
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா -2
athil yetherkkentru nantri solli thuthippaEn iyyaa
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் -2
aththanaiyum solla vENdum entraal
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா — நீரின்றி
aayiram aaNduhaL pOthaathaiyaa