நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
nirmoolamaahaathiruppathu unthan maa kirubai
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் -2
mudivaE illaathathu unthan manathurukkam
கிருபை கிருபை
kirubai kirubai
மாறாத கிருபை -2
maaraatha kirubai
கிருபையினாலே இரட்சித்தீரே
kirubaiyinaalaE ratchiththeeraE
நீதிமானாக மாற்றினீரே – 2
neethimaanaaha maatrineeraE
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
uyirththezha seiytheer kiristhuvOdaE kooda
உன்னதங்களிலே அமரச்செய்தீர் – 2 -கிருபை
unnathangaLilaE amara seiytheer
கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
kirubaiyin mahimaikku puhazhchchiyaaha
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே – 2
sontha piLLaiyaai mun kuriththeeraE
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
parisuththa raththaththaal meetpaLiththeeraE
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே – 2 -கிருபை
paavam anaiththaiyum manniththeeraE
தேவனின் பலத்த சத்துவத்தாலே
dEvanin palaththa saththuvaththaalaE
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் – 2
narcheiythi arivikkum thiruththoNdanaanaEn
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
kirisththu yEsuvin aLavatra selvaththai
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் – 2 -கிருபை
arivikkintraEn naan kirubaiyinaal