விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
viNNilum maNNilum ummaiyallaamal
ஆசைகள் இல்லையையா
aasaihaL illaiyayya (2)
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
thaNNeerai thEdum maanhaL pOla
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ummaiyaE vaanjikkiraEn
ஆசையெல்லாம் நீர்தானே
aasaiyellaam neer thaanaE
வாஞ்சையெல்லாம் நீர்தானே -2
vaanjaiyellaam neer thaanaE
உலகத் தோற்றம் முன்னே என்னைக் கண்டீரையா -2
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம் -2
உம் அன்பு உயர்ந்ததையா – ராஜா -ஆசையெல்லாம்
பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரையா -2
மறந்திடவில்லை
கைவிடவில்லை -2
என்னை விட்டு விலகவில்லை – நீர் -ஆசையெல்லாம்
ஆயுள் காலமெல்லாம் இயேசுவே நீர் போதுமே -2
மண்ணில் வாழ்ந்திடும்
நாட்களெல்லாம் -2
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை -ஆசையெல்லாம்