இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
imaippozhuthum ennai kaivida maatteer
ஒரு நாளும் விட்டு விலகமாட்டார் -2
oru naaLum vittu vilaha maatteer
நீர் கைவிடா கன்மலையே
neer kaividaa kanmalaiyaE
நித்தமும் காப்பவரே -2 -இமைப்பொழுதும்
niththamum kaappavaraE
நீரே என் அடைக்கலம் என் கோட்டை என் கேடகம்
neeraE en adaikkalam en kOttai en kEdaham
நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன் -2
naan nambum deivam entru solluvaEn
வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
vEdanudaiya kaNNikkum paazhaakkum koLLai nOikkum
தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர் -2-நீர் கைவிடா
thappuviththu sirahaal moodi maraikkireer
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
karththar en meippar naan thaazhchchiyadaiyaEn
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர் -2
pulluLLa idangaLil ennai meikkireer
அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை கொண்டு போய்விடுகிறீர்
amarntha thaNNeer aNdaiyil ennai koNdu pOi viduhireer
ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர் -2 -நீர் கைவிடா
aaththumaavai thEtri thirupththiyaai nadaththuhireer
சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்தி
saththurukkaL munbaai oru panthi aayaththappaduththi
என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர் -2
en thalaiyai eNNaiyaal abishEhiththeer
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
jeevanuLLa naaLellaam nanmaiyum kirubaiyum ennai thodarum
உம் வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் -2-நீர் கைவிடா
um veettilaE neediththa naatkaLaai nilaiththiruppaEn
பயமில்லை பயமில்லை எந்தன் குடும்பம் உந்தன் கையில்
bayamillai bayamillai enthan kudumbam unthan kaiyil
பயமில்லை பயமில்லை என் எதிர்காலம்(வாழ்க்கை)உந்தன் கையில் -2
bayamillai bayamillai en yethirkaalam(vaazhkai) unthan kaiyil
என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
ennai paluha seiyveer peruh seiyveer
நீண்ட ஆயுள் தந்து காப்பீர் (3)
neeNda aayuL thanthu kaappeer
குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்
kudumbaththai pEzhaikkuL vaiththu kaappaatruveer
என் குடும்பத்தை வேலி அடைத்து(பேழைக்குள் வைத்து) காப்பாற்றுவீர் -2-நீர் கைவிடா
en kudubaththai vEli adaiththu(pEzhaikkuL vaiththu) kaappaatruveer