கர்த்தனே எம் துணையானீர்
karththanaE em thuNaiyaaneer
நித்தமும் எம் நிழலானீர்
niththamum em nizhalaaneer
கர்த்தனே எம் துணையானீர்
எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
eththanai idar vanthu sErnthaalum
கர்த்தனே அடைக்கல மாயினார் -2
karththanaE adaikkalamaayinaar
மனுமக்களில் இவர் போலுண்டோ
manumakkaLil ivar pOluNdO
விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே
viN ulahilum ivar siranthavar
பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
paavi entrennai palar thaLLinaar
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் -2
aavi illai entrihazhnthum vittaar
ராஜா உம் அன்பு என்னைக் கண்டது
raajaa um anbu ennai kaNdathu
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
ummai pOl iyya engu kaNdathillai
சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
sutraththaarum kaalaththil kuLirnthittaar
நம்பினோரும் எதிராக வந்திட்டார் -2
nambinOrum yethiraaha vanthittaar
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
koLhai kooriyaE palar pirinthittaar
ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
iyyaa ummai pOl naan engum kaNdathillai
ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
aayiram naavuhaL neer thanthaalum
ராஜனே, உம்மைப் பாடக்கூடுமோ -2
raajanaE ummai paadak koodumO
ஜீவனை உமக்களிக்கின்றேனே
jeevanai umakkaLikkintraEnaE
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
ummai pOl iyyaa engum kaNdathillai