உன்னதத்தில் உயர்ந்தவரே
unnathaththil uyarnthavaraE
உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே
uyar adaikkalaththil ennai vaiththeeraE
பரிசுத்தம் நிறைந்தவரே
parisuththam nirainthavaraE
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே
paavangaL pOkkida ummai thantheeraE
நீரே இன்றும் என்றும் பெரியவரே
neeraE intrum entrum periyavaraE
நீரே ஆராதிக்க சிறந்தவரே -2
neeraE Aaraathikka siranthavaraE
இயேசுவே இயேசுவே (2)
yEsuvaE yEsuvaE
நீர் என்னை சுமந்ததாலே
neer ennai sumanthathaalaE
தடைகளையும் நான் தாண்டி வந்தேனே
thadaihaLaiyum naan thaaNdi vanthaEnaE
திருக்கரம் தாங்கினதாலே
thirukkaram thaanginathaalaE
மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே -2-நீரே இன்றும்
madinthidaamal naan jeevikkintrEnaE
உலகத்தின் ஆழத்திலே
ulahaththin aazhaththilaE
மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே
moozhkidaathu ennai thappuviththeeraE
உந்தன் அன்பின் ஆழத்திலே
unthan anbin aazhaththilaE
இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே -2 -நீரே இன்றும்
innum moozhhi sella uLLam yEnguthaE