Konja kaalam yEsuvukkaaha | கொஞ்ச காலம் இயேசுவுக்காக

கொஞ்ச காலம் இயேசுவுக்காக
konja kaalam yEsuvukkaaha
கஷ்டப்பாடு சகிப்பதினால்
kashtappaadu sahippathinaal
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
innal thunbam inbamaai maarum
இயேசுவை நான் காணும் போது-2
yEsuvai naan kaaNum pOthu

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
avar paatham veezhnthu paNinthu
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
aanantha kaNNeer vadippaEn
  எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
  enthan Ottam jeyaththudan mudiyum
  அந்த நாடு சுதந்தரிப்பேன் -2-கொஞ்ச
  antha naadu suthantharippaEn

கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
kashtam kaNNeer niraintha ulagai
கடந்தென்று நான் மறைவேன் -2
kadanthentru naan maraivaEn
  ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
  jeeva ootrarukaE ennai nadaththi sentraE
  தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் -2 -அவர் பாதம்
  dEvan kaNNeerai thudaiththiduvaar

இந்த தேகம் அழியும் கூடாரம்
intha thEgam azhiyum koodaaram
இதை நம்பி யார் பிழைப்பார் -2
ithai nambi yaar pizhaippaar
  என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
  en pitha veettil vaasathalangaLuNdaE
  இயேசுவோடு நான் குடியிருப்பேன் -2 -அவர் பாதம்
  yEsuvOdu naan kudiyiruppaEn

கனவான்கள் பாக்கியவான்கள் 
ganavaankaL paakkiyavaankaL
கர்த்தருக்குள் மரிப்பவர்கள் -2
karththarukkuL marippavarkaL
  கிறிஸ்தென் ஜீவன் சாவு என் ஆதாயம் 
  kiristhen jeevan saavu en aathaayam
  காணுவேன் என் பிதா முகமே -2-அவர் பாதம்
  kaaNuvaEn en pithaa muhamaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)