Yehova roova en nalla meippan | யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்

யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
yEhOvaa roova en nalla meippan
தாழ்ச்சி எனக்கில்லையே
thaazhchchi yenakkillaiyaE
யேகோவா தேவன் என் நல்ல ஆயன்
yEhOvaa dEvan en nalla aayan
குறைவொன்றும் எனக்கில்லையே
kuraivontrum yenakkillaiyaE

ஆராதனை ஓ ஆராதனை
aaraathanai O aaraathanai
ஓ ஆராதனை உமக்கே
O aaraathanai umakkaE
ஆராதனை ஓ ஆராதனை
aaraathanai O aaraathanai
துதி ஆராதனை உமக்கே
thuthi aaraathanai umakkaE

புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்று
pulluLLa idangaLil meiththu sentru
என்னை போஷிக்கின்றீர்
ennai pOshikkinteer
அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி
amarntha thaNNeeraNdai ennai nadaththi
தாகம் தீர்க்கின்றீர்
thaaham theerkkinteer
  உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
  um naamaththinimiththam neethiyin paathaiyil
  நாள்தோறும் நடத்துகின்றீர் -2
  naaLthOrum nadaththuhinteer -ஆராதனை 

எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை
yethiriyin munnaE enakkoru panthiyai
ஆயத்தப்படுத்துகின்றீர்
aayaththappaduththuhinteer
பாத்திரம் நிரம்பிட எண்ணெயினாலே
paaththiram nirambida yeNNaiyinaalaE
அபிஷேகம் செய்கின்றீர்
abishEham seiyhinteer
வாழ்நாட்களெல்லாம் நன்மையும்
vaazhnaatkaLellaam nanmaiyum
கிருபையும் தொடர்ந்திடச் செய்திடுவீர்
kirubaiyum thodarnthida seiythiduveer -2 -ஆராதனை 

கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர்
katharina nEran ennaventru kEtka vantheer
எனைக்காணும் எல்ரோயியே
enaikkaaNum elrOyiyaE
கூப்பிட்டநேரம் உதவிட வந்தீர்
kooppitta nEram uthavida vantheer
எனைக் கேட்கும் எபிநேசரே
enai kEtkum ebinEsaraE
  தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
  thanimaiyil nadanthaEn thuNaiyaaha vantheer
  யோகோவா ஷம்மா நீரே -2
  yEhOvaa shamma neeraE
தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர் 
thanimaiyil nadanthaEn thuNaiyaah vantheer
யோகோவா அப்பா நீரே
yEhOvaa appaa neeraE  -ஆராதனை 


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)