thuthi thuthi en manamaE
துதிகட்குள் வசிப்பவரை
thuthihatkuL vasippavarai
எல்லா நாட்களும் செய்திடும்
ellaa naatkaLum seiythidum
நன்மைகளை நினைத்து
nanmaikaLai ninaiththu
நன்றியுடன் பாடு மனமே -அல்லேலூயா
nantriyudaan paadu manamaE -allEluyah
அன்னையைப் போல அவர்
annaiyai pOla avar
என்னை அரவணைத்தாற்றிடுவார் -2 (2)
ennai aravaNaithaatriduvaar
அவர் அன்புள்ள மார்பதனில்
avar anbuLLa maarpathanil
நான் இன்பமாக இளைப்பாறுவேன் – 3 -துதி துதி
naan inbamaaha iLaippaaruvaEn
சகாய பர்வதமே
sahaaya parvathamaE
வல்ல கோட்டையும் அரணுமாமே -2 (2)
valla kOttaiyum araNumaamaE
ஏதும் பயம் ஒன்றும் வேண்டாம் என்றார்
yEthum bayam ontrum vENdaam entaar
எந்த சேதமின்றி காக்க வல்லோர் -3 -துதி துதி
entha sEthamintri kaakka vallOr
கஷ்டங்கள் வந்திடவே
kashtangaL vanthidavaE
நல்ல கர்த்தராம் துணை அவரே -2 (2)
nalla kartharaam thuNai avaraE
துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
thushta yethirihaL naduvilavar
நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் -3 -துதி துதி
nalla panthi aayaththam seiyvaar
பாரங்கள் அமிழ்த்தினாலும்
paarangaL amizhththinaalum
தீரா வியாதியால் கலங்கினாலும் -2 (2)
theeraa viyaathiyaal kalanginaalum
அவர் காயத்தின் தழும்புகளால்
avar kaayaththin thazhumbuhaLaal
வியாதி தனை விலக்கிடுவார் -3 -துதி துதி
viyaathi thanai vilakkiduvaar
சிங்கமோ விரியன் பாம்போ
singamO viriyan paambO
பால சிங்கமோ வலு சர்ப்பமோ -2 (2)
baala singamO valu sarpamO
அதன் தலையதை நசுக்கிடவே
athan thalaiyathai nasukkidavaE
தக்க பெலன் தருபவரே -3 -துதி துதி
thakka belan tharubavaraE