raajaa neer seiytha nanmaihaL
அவை எண்ணி முடியாதையா
avai eNNi mudiyaathaiyaa
ஏறெடுப்பேன் நன்றிபலி
yEreduppaEn nantri pali
என் ஜீவ நாளெல்லாம் – நான்
en jeeva naaLellaam -naan
நன்றி ராஜா இயேசு ராஜா -4
nanatri raajaa yEsu raajaa
அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
athikaalai nEram thatti thatti yezhuppi
புது கிருபை தந்தீரையா -2
puthu kirubai thantheeraiyaa
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம்
aanantha mazhaiyil nanaiththu nanaiththu thinam
நன்றி சொல்ல வைத்தீரையா – 2 -நன்றி ராஜா
nantri solla vaiththeeraiyaa
வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
vEdhaththin rahasiyam arinthida purinthida
உம் வெளிச்சம் தந்தீரையா -2
um veLichcham thantheeraiyaa
பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும்
paatham amarnthu naan um kural kEtkum
பாக்கியம் தந்தீரையா -2-நன்றி ராஜா
paakkiyam thantheeraiyaa
ஒவ்வோரு நாளும் உணவும் உடையும் தந்து
ovvoru naaLum uNavum udaiyum thanthu
பாதுகாத்து வந்தீரையா -2
paathukaaththu vantheeraiyaa
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
udal suham thanthu oru kuraivintri
வழி நடத்தி வந்தீரையா -2-நன்றி ராஜா
vazhi nadaththi vantheeraiyaa
துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
thunbaththin paathaiyil nadantha annaaLil
தூக்கிச் சென்றீரையா -2
thookki senteeraiyaa
அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்
anbar um karaththaal aNaiththu aNaiththu thinam
அதிசயம் செய்தீரையா (ஆறுதல் தந்தீரையா) -2-நன்றி ராஜா
athisayam seiytheeraiyaa (aaruthal thantheeraiyaa)
கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
kooppitta naaLil marumozhi koduththu
விடுதலை தந்தீரையா -2
viduthalai thantheeraiyaa
குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி
kuraihaLai neekki karaihaLai pOkki
கூடவே வந்தீரையா -2-நன்றி ராஜா
koodavaE vantheeraiyaa