Showing posts with label 01-31-21. Show all posts
Showing posts with label 01-31-21. Show all posts

NeeraE en belan | நீரே என் பெலன்

நீரே என் பெலன் 
neeraE en belan
நீர் என் அடைக்கலம்                    (2)
neer en adaikkalam
ஆபத்துக் காலத்தில் என் துணை 
aabaththuk kaalaththil en thuNai
சுற்றி நின்று என்னை காக்கும் கன்மலை 
sutri nintru ennai kaakkum kanmalai

யாக்கோபின் தேவனே என் அடைக்கலம் 
yaakkObin dEvanaE en adaikkalam
யெகோவா தேவனே என் பலம் -2
yEhOvaa dEvanaE en palam
   கலக்கமில்லை பயங்களில்லை வாழ்விலே 
   kalakkamillai bayangaLillai vaazhvilaE
   நான்  இருப்பதோ கர்த்தரின் கரத்திலே -2 -நீரே 
   naan iruppathO karththarin karaththilaE

அமர்ந்திருந்து  தேவனை நான் அறிகிறேன் 
amarnthirunthu dEvanai naan arihiraEn
அவர் கரத்தின் வலிமை நித்தம் பார்க்கிறேன் -2
avar karaththin valimai niththam paarkkiraEn
  தாய்ப் பறவை செட்டை  கொண்டு மூடியே 
  thaai paravai settai koNdu moodiyaE
  கண்மணி போல் என்னை பாத்து காக்கிறீர் -2 -நீரே 
  kaNmaNi pOl ennai paathu kaakkireer

பசும்புல் வெளியில் என்னை தினம் மேய்க்கிறீர் 
pasum pul veLiyil ennai thinam mEikkireer
அமர்ந்த தண்ணீர் ஊற்றில் தாகம் தீர்க்கிறீர் -2
amarntha thaNNeer ootril thaaham theerkkireer
  சத்துருவின் கண்கள் காண எண்ணெயால் 
  saththuruvin kaNhaL kaaNa eNNaiyaal
  என் தலையை அபிஷேகம் செய்கிறீர் -2 -நீரே 
  en thalaiyai abishEham seiyhireer




Nantri balipeedam kattuvOm | நன்றி பலிபீடம் கட்டுவோம்

நன்றி பலிபீடம் கட்டுவோம்
nantri palipeedam kattuvOm
நல்ல தெய்வம் நன்மை செய்தார் -2
nalla deivam nanmai seiythaar
  செய்த நன்மை ஆயிரங்கள்
  seiytha nanmai aayirangaL
  சொல்லிச் சொல்லி பாடுவேன் -2
  solli solli paaduvaEn

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே -2
nantri thahappanaE nanmai seiytheeraE

ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
jeevan thanthu neer anbu koorntheer
பாவம் நீங்கிட கழுவி விட்டீர் -2
paavam neengida kazhuvi vitteer
  உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
  umakkentru vaazha piriththeduththu
  உமது ஊழியம் செய்ய வைத்தீர் -2-நன்றி தகப்பனே 
  umathu oozhiyam seiyya vaiththeer

சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
sirantha muraiyilaE kural yezhuppum
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே -2
siluvai raththam neer sinthineeraE
  இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
  raththa kOttaikkuL vaiththu koNdu
  எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் -2 -நன்றி தகப்பனே 
  yethiri nuzhaiyaamal kaaththuk koNdeer

இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
iruLin athikaaram ahatri vitteer
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் -2
yEsu arasukkuL sErththu  vitteer
  உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
  umakku sonthamaai vaangi koNdu
  உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் -2 -நன்றி தகப்பனே 
  urimai soththaaha vaiththuk koNdeer

புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
puthiya udanpaattin adaiyaaLamaai
புனித இரத்தம் ஊற்றினீரே -2
punitha raththam ootrineeraE
  சத்திய ஜீவ வார்த்தையாலே
  saththiya jeeva vaarththaiyaalaE
  மரித்த வாழ்வையே மாற்றினீரே -2 -நன்றி தகப்பனே 
  mariththa vaazhvaiyaE maatrineeraE

எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை
yethiraai vaazhnthu vantha ivvulahai
ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால் -2
oppuravaakkineer um raththaththaal
  தூரம் வாழ்ந்து வந்த எங்களையே
  thooram vaazhnthu vantha engaLaiyaE
  அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால் -2 -நன்றி தகப்பனே 
  aruhil koNdu vantheer aaviyinaal

குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்
kutram seiythathaal mariththirunthOm
இயேசுவோடே கூட எழச்செய்தீர் -2
yEsuvOdaE kooda yezha seiytheer
  கிருபையினாலே இரட்சித்தீரே
  kirubaiyinaalaE ratchiththeeraE
  உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் -2 -நன்றி தகப்பனே 
  unnathangaLilaE utkaara seiytheer

பார்க்கும் கண்களை தந்தீரையா
paarkkum kaNhaLai thantheeraiyaa
பாடும் உதடுகள் தந்தீரையா -2
paadum uthaduhaL thantheeraiyaa
  உழைக்கும் கரங்களை தந்தீரையா
  uzhaikkum karangaLai thantheeraiyaa
  ஓடும் கால்களைத் தந்தீரையா -2 -நன்றி தகப்பனே 
  Odum kaalhaLai thantheeraiyaa

நல்ல குடும்பம் நீர் தந்தீரையா
nalla kudumbam neer thantheeraiyaa
செல்ல பிள்ளைகள் தந்தீரையா -2
chella piLLaihaL thantheeraiyaa
  அணைக்கும் கணவனை தந்தீரையா
  aNaikkum kaNavanai thantheeraiyaa
  அன்பு மனைவியை தந்தீரையா -2 -நன்றி தகப்பனே 
  anbu manaiviyai thantheeraiyaa

இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
irukka nalla oru veedu thantheer
வாழத் தேவையான வசதி தந்தீர் -2
vaazha thEvaiyaana vasathi thantheer
  கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
  kadumaiyaaha thinam uzhaikka vaiththeer
  கடனே இல்லாமல் வாழ வைத்தீர் -2 -நன்றி தகப்பனே 
  kadanaE illaamal vaazha vaiththeer





Raajaa neer seiytha nanmaigaL | ராஜா நீர் செய்த நன்மைகள்

ராஜா நீர் செய்த நன்மைகள்
raajaa neer seiytha nanmaihaL
அவை எண்ணி முடியாதையா
avai eNNi mudiyaathaiyaa
  ஏறெடுப்பேன் நன்றிபலி
  yEreduppaEn nantri pali
  என் ஜீவ நாளெல்லாம்  – நான்
  en jeeva naaLellaam -naan
நன்றி ராஜா இயேசு ராஜா -4
nanatri raajaa yEsu raajaa 

 அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி
athikaalai nEram thatti thatti yezhuppi
புது கிருபை தந்தீரையா -2
puthu kirubai thantheeraiyaa
  ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம்
  aanantha mazhaiyil nanaiththu nanaiththu thinam
  நன்றி சொல்ல வைத்தீரையா – 2  -நன்றி ராஜா 
  nantri solla vaiththeeraiyaa

வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
vEdhaththin rahasiyam arinthida purinthida
உம் வெளிச்சம் தந்தீரையா -2
um veLichcham thantheeraiyaa
  பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும்
  paatham amarnthu naan um kural kEtkum
  பாக்கியம் தந்தீரையா -2-நன்றி ராஜா 
  paakkiyam thantheeraiyaa

ஒவ்வோரு நாளும் உணவும் உடையும் தந்து
ovvoru naaLum uNavum udaiyum thanthu
பாதுகாத்து வந்தீரையா -2
paathukaaththu vantheeraiyaa
  உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
  udal suham thanthu oru kuraivintri
  வழி நடத்தி வந்தீரையா -2-நன்றி ராஜா 
  vazhi nadaththi vantheeraiyaa

துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
thunbaththin paathaiyil nadantha annaaLil
தூக்கிச் சென்றீரையா -2
thookki senteeraiyaa
  அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்
  anbar um karaththaal aNaiththu aNaiththu thinam
  அதிசயம் செய்தீரையா (ஆறுதல் தந்தீரையா) -2-நன்றி ராஜா 
  athisayam seiytheeraiyaa (aaruthal thantheeraiyaa) 

கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
kooppitta naaLil marumozhi koduththu
விடுதலை தந்தீரையா -2
viduthalai thantheeraiyaa
  குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி
  kuraihaLai neekki karaihaLai pOkki
  கூடவே வந்தீரையா -2-நன்றி ராஜா 
  koodavaE vantheeraiyaa




Ummai pOtri paaduvOm | உம்மை போற்றி பாடுவோம்

உம்மை போற்றி பாடுவோம்
ummai pOtri paaduvOm
எங்கள் உயர்ந்த கன்மலையே -2
engaL uyarntha kanmalaiyaE

பெருவெள்ளம் மதிலை மோதி
peruveLLam mathilai mOthi
பெருங்காற்றும் அடிக்கையில் -2
perungkaatrum adikkaiyil
  எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
  engaL puhalidamaE engaL thanjamaE
  பெருங் கன்மலையின் நிழலே -2 -உம்மை 
  perung kanmalaiyin nizhalaE 

செங்கடலும் பிளந்து போகும்
sengkadalum piLanthu pOhum
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் -2
yuththa sEnaiyum amizhnthidum 
  எங்கள் பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
  engaL parakkiramamaE engaL belanum neeraE 
  ஜெயம் எடுப்போம் உம்மாலே -2 -உம்மை 
  jeyam yeduppOm ummaalaE

எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
emmai uyarntha sthaanangaL mEl
வைத்து  வைத்ததும் நீரல்லவோ -2
vaiththu vaiththathum neerallavO
  கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
  kanmalai thEnum vadiyum eNNaiyum
  தருவது நீரல்லவோ -2 -உம்மை 
  tharuvathu neerallavO



YaakObin dEvan en dEvan | யாக்கோபின் தேவன் என் தேவன்

யாக்கோபின் தேவன் என் தேவன்
yaakObin dEvan en dEvan
எனக்கென்றும் துணை அவரே            (2)
enakkentrum thuNai avaraE
எந்நாளும் நடத்துவாரே
ennaaLum nadaththuvaaraE

ஏதுமில்லை என்ற கவலையில்லை 
yEthumillai entra kavalai illai
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை -2
thuNaiyaaLar ennai vittu vilahavillai 
  சொன்னதை செய்திடும்   தகப்பன் அவர் 
  sonnathai seiythidum thahappan avar
  நம்புவேன் இறுதிவரை -2 - யாக்கோபின்
  nambuvaEn iruthi varai

என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை 
en Ottaththil naan thanimai illai
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை -2
nEsiththavar ennai verukkavillai
  தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் 
  thahappan veettil koNdu sErththiduvaar
  நம்புவேன் இறுதிவரை -4 - யாக்கோபின்
  nambuvaEn iruthivarai


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)