மின்னும் தாரகை சூழவே
minnum thaarahai soozhavaE
விண்ணகம் போற்றவே
viNNaham pOtravaE
தூயவள் சேயுடன்
thooyavaL sEyudan
காட்சி தரும் வேளையில்
kaatchi tharum vELaiyil
மூவுலகும் வாழ்த்தவே
moovulahum vaazhththavaE
தூய சுதன் தோன்றினார்
thooya suthan thOntrinaar
பனிவிழும் ராவினில்
panivizhum raavinil
கடுங்குளிர் வேளையில்
kadungkuLir vELaiyil
கன்னிமரி மடியில் …..
kannimari madiyil
விண்ணவர் வாழ்த்திட (2)
viNNavar vaazhththida
ஆயர்கள் போற்றிட
aayarhaL pOtrida
இயேசு பிறந்தாரே …
yEsu piranthaaraE
ராஜன் பிறந்தார் -2 , நேசர் பிறந்தாரே -2….
raajan piranthaar nEsar piranthaaraE
மின்னிடும் வானக தாரகையே
minnidum vaanaha thaarahaiyaE
தேடிடும் ஞானியர் கண்டிடவே …
thEdidum gnaniyar kaNdidavaE
முன்வழி காட்டிச் சென்றதுவே (2)
mun vazhi kaatti sentrathuvaE
பாலனைக் கண்டு பணிந்திடவே …
paalanai kaNdu paNinthidavaE
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை -பனி
mahizhnthaar puhazhnthaar maNNOrin ratchaharai
மகிமையில் தோன்றிய தவமணியே
mahimaiyil thOntriya thavamaNiyaE
மாட்சிமை தேவனின் கண்மணியே …
maatchimai dEvanin kaNmaNiyaE
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே (2)
maantharkku meetpinai vazhangidavaE
மானிடனாக உதித்தவரே …
maanidanaaha uthiththavaraE
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை -பனி
paNivOm puhazhvOm maNNOrin ratchaharai