மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
mahimai mEl mahimai adainthiduvaEn
மறுரூபமாவேன் மனமதிலே
maruroopamaavaEn manamathilaE
மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் முகமே -2
mahizhnthidavaE tharisikkavaE paran muhamaE
உந்தன் பாதம் என்னை பலியாய்
unthan paatham ennai paliyaai
உண்மை மனதுடன் ஒப்படைத்தேன் -2
uNmai manathudan oppadaiththaEn
ஏற்றுக் கொண்டருளும் தேவ பெலன் விளங்கும்
yEtru koNdaruLum dEva belan viLangum
தேற்றி உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால் -மகிமை
thEtri uyirppiththidum tham aaviyinaal
தேவ சாயல் தேவ சமுகம்
dEva saayal dEva samuham
தேவ பிள்ளைகள் அடையும் பாக்கியம் -2
dEva piLLaihaL adaiyum baakkiyam
எந்தன் வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்
enthan vaanjaiyithaE entru sErnthiduvaEn
என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால்-மகிமை
ennai nirappidumaE tham aaviyinaal
ஜீவ ஜலமே பொங்கி வருதே
jeeva jalamaE pongi varuthaE
ஜீவ ஊற்றுகள் திறந்தனவே -2
jeeva ootruhaL thiranthanavaE
தம் கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்
tham karam pidiththaEn angu vazhi nadaththum
தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால்-மகிமை
thaagam theerththiduvaEn tham aaviyinaal
பாதம் ஒன்றே போதும் என்றேன்
paatham ontraE pOthum entraEn
பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன் -2
pEsum aaNdavar thoniyum kEttaEn
இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே
inba vaakkuhaLaE enthan pOjanamaE
என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால்-மகிமை
ennai belappaduththum tham aaviyinaal
திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன்
divya guNangaL naadi jebiththaEn
தூய வாழ்க்கையின் தேவை அதுவே -2
thooya vaazhkkaiyin thEvai athuvaE
தேவ சேவையிலே பாடு சகித்திடவே
dEva sEvaiyilaE paadu sahiththidavaE
தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால்-மகிமை
thaarum porumai belan tham aaviyinaal
ஆவி ஆத்மா தேகம் முழுதும்
aavi aathmaa thEham muzhuthum
அன்பர் இயேசுவின் சொந்தமாமே -2
anbar yEsuvin sonthamaamaE
பூரணம் அருளும் ஆயத்தபடுத்தும்
pooraNam aruLum aayaththappaduththum
பாடிப் பறந்திடுவேன் தம் ஆவியினால் -மகிமை
paadi paranthiduvaEn tham aaviyinaal