இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
isravElin naathanaaga vaazhum yEha deivam
வழியும் சத்தியம் ஜீவனுமாம் தெய்வம்
vazhiyum saththiyam jeevanumaam deivam
மீட்பராக பூமியில் பிறந்தார் தேவ மைந்தன்
meetparaaha poomiyil piranthaar dEva mainthan
நித்திய ஜீவனாய் வாழும் தெய்வம்
niththiya jeevanaai vaazhum deivam
அப்பா பிதாவே தெய்வமே
appaa pithaavaE deivamaE
உம் திரு ராஜ்யம் வருகவே (2)
um thiru raajjiyam varuhavaE
உம் திரு சித்தம் பூமியில்
um thiru siththam poomiyil
என்றென்றும் நிறைவேற வேண்டுமே
entrentrum niraivEra vENdumaE
செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர்
sengadalil neer antru paathai vahuththeer
பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர்
paalaivanaththil antru mannaa pozhintheer
கொடும் வெயிலில் மேக குளிரானீர் (2)
kodum veyilil mEha kuLiraaneer
இருளில் அன்பின் தீபமாய்
iruLil anbin theepamaai
சீனாய் மலையின் மேலே நீர்
seenaai malaiyin mElaE neer
நீதியின் கட்டளை எடுத்துரைத்தீர் -அப்பா பிதாவே
neethiyin kattaLai yeduththuraiththeer
மனிதனாய் பூவில் அவதரித்தீர்
manithanaai poovil avathariththeer
எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர்
enakkaaha jeevan pali koduththeer
திரு உடலும் திவ்ய போஜனுமாய் (2)
thiru udalum thivya pOjanumaai
இவ்வுலகத்தின் ஜீவனாய்
ivvulahaththin jeevanaai
வழியும் சாத்தியமுமானவரே
vazhiyum saththiyamumaanavaraE
உம் திரு நாமம் வாழ்த்துகிறேன் -அப்பா பிதாவே
um thiru naamam vaazhththuhiraEn