Showing posts with label 08-07-22. Show all posts
Showing posts with label 08-07-22. Show all posts

ALLa aLLa kuraiyaatha anbu | அள்ள அள்ள குறையாத அன்பு

அள்ள அள்ள குறையாத அன்பு
aLLa aLLa kuraiyaatha anbu
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
rusikka rusikka thevittaatha anbu        (2)
சொல்ல சொல்ல முடியாத அன்பு -என்
solla solla mudiyaatha anbu -en
  இயேசுவின் இணையில்லாத அன்பு -2
  yEsuvin iNaiyillaatha anbu

பெயரைச் சொல்லி அழைத்த அன்பு
peyarai solli azhaiththa anbu
என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு -2
ennai uyarththi vaiththa unnatha anbu
  என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு -2 -அள்ள அள்ள
  ennai kavarnthu koNda yEsuvin anbu

என்னையும் அபிஷேகித்த அன்பு
ennaiyum abishEhiththa anbu
என்னை அதிசயமாய் நடத்தி வந்த  அன்பு -2
ennai athisayamaai nadaththi vantha anbu
  என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு -2 -அள்ள அள்ள
  ennai kavarnthu koNda yEsuvin anbu

என்னையும் நினைத்த அன்பு
ennaiyum ninaiththa anbu
என்னை கைவிடாமல் நடத்திய அன்பு -2
ennai kaividaamal nadaththiya anbu
  என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு -2 -அள்ள அள்ள
  ennai kavarnthu koNda yEsuvin anbu

ஊழியத்தை கொடுத்த அன்பு
Oozhiyaththai koduththa anbu
என்னை ஊழியனாய் மாற்றின அன்பு -2
ennai oozhiyanaai maatrina anbu
  என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு -2 -அள்ள அள்ள
  ennai kavarnthu koNda yEsuvin anbu



dEvaathi dEvan en sonthamaanaar | தேவாதி தேவன் என் சொந்தமானார்

தேவாதி தேவன் என் சொந்தமானார்
dEvaathi dEvan en sonthamaanaar
என்ன ஆனந்தமே
enna aananthamaE (2)
மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
mannaathi mannar ennai thEdi vanthaar
என்ன பேரின்பமே
enna pErinbamaE

சந்தோஷமே என் உள்ளத்தில்
santhOshamaE en uLLaththil
நதியாய் பாயுதே
nathiyaai paayuthaE (2)
சர்வ வல்லவர் இயேசுவே
sarva vallavar yEsuvaE
என் வாழ்வின் சொந்தமே
en vaazhvin sonthamaE

ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்
aanantha keetham en naavil thanthaar
என் இயேசு நல்லவரே
en yEsu nallavaraE (2)
இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி
ratchaNya keetham ennaaLum paadi
என் மீட்பரைப் போற்றுவேன் -சந்தோஷமே
en meetparai pOtruvaEn

கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார்
kattuhaLaiyellaam udaiththu vittaaraE
களிகூர்ந்து பாடிடுவேன்
kaLikoornthu paadiduvaEn (2)
கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்
kirubaihaL thanthaar vallamai thanthaar
எந்நாளும் நன்றி சொல்வேன் -சந்தோஷமே
ennaaLum nantri solvaEn

என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா
en aathma nEsar en yEsu raaja
என்றென்றும் என் சொந்தமே
entrentrum en sonthamaE (2)
எல்லையில்லாத தம் அன்பினாலே
yellai illaatha tham anbinaalaE
என்னையும் நேசித்தாரே -சந்தோஷமே
ennaiyum nEsiththaaraE



Enna en aanantham | என்ன என் ஆனந்தம்!

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
enna en aanantham enna en aanantham
சொல்ல கூடாதே -2
solla koodaathaE
  மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
  mannan kiristhu en paavaththai ellaam 
  மன்னித்து விட்டாரே -2
  manniththu vittaaraE
  
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
kooduvOm aaduvOm paaduvOm nantraai
மகிழ் கொண்டாடுவோம்! -2
mahizh koNdaaduvOm
  நாடியே நம்மைத் தேடியே வந்த
  naadiyaE nammai thEdiyaE vantha
  நாதனைப் போற்றிடுவோம் -2 -என்ன என் ஆனந்தம்
  naathanai pOtriduvOm
   
பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
paavangaL saabangaL kObangaL ellaam
பரிகரித்தாரே -2
parihariththaaraE
  தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
  dEvaathi dEvan en uLLaththil vanthu
  தேற்றியே விட்டாரே -2 -என்ன என் ஆனந்தம்
  thEtriyaE vittaaraE
   
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
atchayan patchamaai ratcippai engaLuk
அருளினதாலே -2
aruLinathaalaE
  நிச்சயம் சுவாமியை  பற்றியே சாட்சி
  nichchayam suvamiyai patriyaE saatchi
  பகரவேண்டியதே -2 -என்ன என் ஆனந்தம்
  pahara vENdiyathaE
    
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
veNNangi pon mudi vaaththiyam mEl veettil
ஜெயக்கொடியுடனே -2
jeyak kodiyudanaE
  மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
  maNNulahil vanthu viNNulahil sentra
  மன்னனைத் ஸ்தோத்தரிப்போம் -2-என்ன என் ஆனந்தம்
  mannanai sthOththarippOm

IsravElin naathanaaha vaazhum | இஸ்ரவேலின் நாதனாக வாழும்

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் 
isravElin naathanaaga vaazhum yEha deivam
வழியும் சத்தியம் ஜீவனுமாம் தெய்வம் 
vazhiyum saththiyam jeevanumaam deivam
மீட்பராக பூமியில் பிறந்தார் தேவ மைந்தன் 
meetparaaha poomiyil piranthaar dEva mainthan
நித்திய ஜீவனாய் வாழும் தெய்வம் 
niththiya jeevanaai vaazhum deivam

  அப்பா பிதாவே தெய்வமே 
  appaa pithaavaE deivamaE
  உம்  திரு ராஜ்யம் வருகவே           (2)
  um thiru raajjiyam varuhavaE
  உம் திரு சித்தம் பூமியில் 
  um thiru siththam poomiyil
  என்றென்றும் நிறைவேற வேண்டுமே 
  entrentrum niraivEra vENdumaE

செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர் 
sengadalil neer antru paathai vahuththeer
பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர் 
paalaivanaththil antru mannaa pozhintheer
கொடும் வெயிலில் மேக குளிரானீர்                (2)
kodum veyilil mEha kuLiraaneer
இருளில் அன்பின் தீபமாய் 
iruLil anbin theepamaai
சீனாய் மலையின் மேலே நீர் 
seenaai malaiyin mElaE neer
நீதியின் கட்டளை எடுத்துரைத்தீர்  -அப்பா பிதாவே 
neethiyin kattaLai yeduththuraiththeer

மனிதனாய் பூவில் அவதரித்தீர் 
manithanaai poovil avathariththeer
எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர் 
enakkaaha jeevan pali koduththeer
திரு உடலும் திவ்ய போஜனுமாய்                   (2)
thiru udalum thivya pOjanumaai
இவ்வுலகத்தின் ஜீவனாய் 
ivvulahaththin jeevanaai
வழியும் சாத்தியமுமானவரே 
vazhiyum saththiyamumaanavaraE
உம்  திரு நாமம் வாழ்த்துகிறேன்  -அப்பா பிதாவே 
um thiru naamam vaazhththuhiraEn


Nam paavam kazhuvidavaE | நம் பாவம் கழுவிடவே

நம் பாவம் கழுவிடவே 
nam paavam kazhuvidavE
கல்வாரி சிலுவையிலே 
kalvaari siluvaiyilE
  தேவ குமாரன் மரித்துயிர்த்தார் -2
  dEva kumaaran mariththuyirththaar

உனக்காகத் தானே காயப்பட்டார் 
unakkaahath thaanaE kaayappattaar
உனக்காகத் தானே பாடுகள் பட்டார் -2
unakkaahath thaanaE paaduhaL pattaar
  பாருலகை மீட்க பரலோகம் சேர்க்க 
  paarulahai meetka paralOham sErkka
  கோர சிலுவையிலே கொல்கொதாவிலே -2
  kOra siluvaiyilaE kolkothaavilaE
கொல்கொதாவிலே -நம்
kolkothaavilaE

ஈட்டியால் சேவகர்கள் குத்திடவே 
yeettiyaal sEvaharhaL kuththidavaE
செந்நீரும் தண்ணீரும் புறப்பட்டதே -2
senneerum thaNNeerum purappattathaE
  திரைசீலை கிழிந்திடவே கல்லறை திறந்திடவே 
  thiraiseelai kizhinthidavaE kallarai thiranthidavaE
  தேவனின் வாக்கு நிறைவேறுதே -2
  dEvanin vaakku niraivEruthaE
நிறைவேறுதே -நம்
niraivEruthaE

தேவனின் வாக்கை நம்பிடுவாய் 
dEvanin vaakkai nambiduvaai
கிருபையின் அன்பை ஏற்றிடுவாய் -2
kirubaiyin anbai yEtriduvaai
  கல்வாரி நாதன் உனக்காகத் தானே 
  kalvaari naathan unakkaahath thaanaE
  உயிர்த்தெழுந்தாரே மூன்றாம் நாளிலே -2
  uyirththezhunthaaraE moontraam naaLilaE
மூன்றாம் நாளிலே -நம்
moontraam naaLilaE



  

Enthan Ullam Pudhu Kaviyaale Ponga | எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க 

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க 
enthan ullam puthu kaviyaalae ponga
இயேசுவை பாடிடுவேன்
Yesuvai paadiduvaen
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
avar naamam oottunnda parimala thailam
அவரையே நேசிக்கிறேன்
avaraiyae naesikkiraen

  அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
  allaelooyaa thuthi allaelooyaa - enthan
  அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
  annnalaam Yesuvai paadiduvaen
  இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
  iththanai kirupaikal niththamum aruliya
  கர்த்தரைக் கொண்டாடுவேன் – எந்தன் உள்ளம்
  karththaraik konndaaduvaen - enthan ullam

சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
senta kaalam muluvathum kaaththaarae - or
சேதமும் அணுகாமல்
sethamum anukaamal
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்றும்
sonthamaaka aaseer polinthenak kintum
சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
suka pelan aliththaarae - allaelooyaa - enthan ullam

சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
sila vaelai imaippoluthae tham mukaththai
சிருஷ்டிகர் மறைத்தாரே
sirushtikar maraiththaarae
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
kadungaோpam neekki thirumpavum enmael
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
kirupaiyum polinthaarae - allaelooyaa - enthan ullam

பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
panja kaalam perukida naernthaalum thaam
தஞ்சமே ஆனாரே
thanjamae aanaarae
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
angum ingum Nnoykal paravi vanthaalum
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
ataikkalam aliththaarae - allaelooyaa - enthan ullam

களிப்போடு விரைந்தெம்மை சேர்த்திட – என்
kalippodu virainthaemmai serththida - en
கர்த்தரே வருவாரே
karththarae varuvaarae
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
aavalodu naamum vaanaththai Nnokki
அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
anuthinamum kaaththiruppom - allaelooyaa - enthan ullam



IsravElin thuthihaLil vaasam seiyyum | இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
isravElin thuthihaLil vaasam seiyum
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே -2
engaL dEvan neer parisuththaraE
  வாக்குகள் பல தந்து அழைத்து வந்தீர்
  vaakkuhaL pala thanthu azhaiththu vantheer
  ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் -2
  oru thanthai pOla emmai thookki sumantheer 

இனி நீர் மாத்ரமே  -3
ini neer mathramaE
எங்கள் சொந்தமானீர்
engaL sonthamaaneer                         (2)
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
ummai aaraathippOm aarparippOm
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம் -இஸ்ரவேலின் 
um naamaththinaal entrum jeyameduppOm

எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
yethirkaalam illaamal yEngi nintrOm
காலத்தைப் படைத்தவர் தேடி வந்தீர் -2
kaalaththai padaiththavar thEdi vantheer
  சிறையிருப்பை மாற்றி தந்தீர்
  siraiyiruppai maatri thantheer
  சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் -2 – இனி 
 sirumaiyin janam emmai uyarththi vaiththeer

செங்கடலைக் கண்டு சோர்ந்து போனோம்
sengkadalai kaNdu sOrnthu pOnOm
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம் -2
yOrthaanin nilai kaNdu anji nintrOm
  பயப்படாதே முன் செல்லுகிறேன்
  bayappadaathaE mun selhiraEn
  என்றுரைத்து எம்மை நடத்தி வந்தீர் -2 – இனி 
  entruraiththu emmai nadaththi vantheer

எதிரியின் படை எம்மை சூழும் போது
yethiriyin padai emmai soozhum pOthu
ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர் -2
Ongiya puyam koNdu yuththam seiytheer
  பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
  paada seiytheer thuthikka seiytheer
  எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் -2 – இனி 
  yerihOvin mathilhaLai idikka seiytheer 


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)