AaththumamaE en uLLamaE | ஆத்துமமே என் உள்ளமே

ஆத்துமமே என் உள்ளமே 
aaththumamaE en uLLamaE
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்   (2)
aaNdavarai nee thinam thuthippaai
அன்பினால் உன்னை அழைத்தவரை 
anbinaal unnai azhaiththavarai

நாளொரு மேனியும் 
naaLoru mEniyum
பொழுதொரு வண்ணமாய் -2
pozhuthoru vaNNamaai
  நன்மைகள் ஈந்துன்னை வளர்த்தவரே -ஆத்துமமே
  nanmaihaL yeenthunnai vaLarththavaraE

ஜீவனை கொடுத்துன்னை மீட்டவரை  -தூதர் 
jeevanai koduththunnai meettavarai -thoothar
ஜீவ போஜனஞ் சொரிந் தீந்தவரை -2
jeeva pOjananj sorinth theenthavarai
  ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாய் நின்றிட 
  jeevanuLLOrku nee saatchiyaai nintrida
  ஜீவனால் நிறைத்துன்னை காத்தவரை -2 -ஆத்துமமே
  jeevanaal niraiththunnai kaaththavarai

நடத்திய வழிகள் நோக்கிடுவாய் -அவர் 
nadaththiya vazhihaL nOkkiduvaai -avar
நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய் -2
nalhiya kirubaihaL ninaiththiduvaai
  ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் 
  aabaththil adaikkalam aaruthal innalil
  அளித்தவர் அருமை இயேசுவல்லோ -2 -ஆத்துமமே
  aLiththavar arumai yEsuvallO

பார்வோனின் சேனைகள் தொடர்ந்த போதும்  -உயர் 
paarvOnin sEnaihaL thodarntha pOthum -uyar
யோர்தானின் அலைகள் புரண்ட போதும் -2
yOrthaanin alaihaL puraNda pOthum
  அக்கினி மெகஸ்தம்பமாய் நின்றவர் 
  akkini mEhasthampamaai nintravar
  அரணும் கேடகமாயிருந்தார் -2 -ஆத்துமமே
  araNum kEdahamaayirunthaar

தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னை 
thootharum ariyaatha thoothuhaL yeenthunnai
தாசனாய் உயர்த்தினார் தாரணியில் -2
thaasanaai uyarththinaar thaaraNiyil
  பாதகனாய் அலைந்தே அழிந்த உன்னை 
  paathahamaai alainthaE azhintha unnai
  தேடியே கரம் தந்தார் வாழ்த்திடுவாய் -2 -ஆத்துமமே
  thEdiyaE karam thanthaar vaazhththiduvaai

ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே -புது 
aaviyin varangaL joliththidavaE -puthu
ஜீவனின் ஊற்றுகள் சுரந்திடவே -2
jeevanin ootruhaL suranthidavaE
  சுவிசேஷ தொனியும் பறந்திடவே 
  suvisEsha thoniyum paranthidavaE
  ஜெய தொனி கீதங்கள் முழங்கிடவே -2 -ஆத்துமமே
  jeya thoni keethangaL muzhangidavaE

  

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)