அன்பில் என்னை பரிசுத்தனாக்க
anbil ennai parisuththanaakka
உம்மைக் கொண்டு சகலத்தையும்
ummai koNdu sahalaththaiyum
உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ
uruvaakkiyaE neer mutharpEraaneerO
தந்தை நோக்கம் அநாதியன்றோ -2
thanthai nOkkam anaathiyantrO
என் இயேசுவே நேசித்தீரோ
en yEsuvaE nEsiththeerO
எம்மாத்திரம் மண்ணான நான்
emmaaththiram maNNaana naan
இன்னும் நன்றியுடன் துதிப்பேன் -2
innum nantriyudan thuthippaEn
மரித்தோரில் முதல் எழுந்ததினால்
mariththOril muthal ezhunthathinaal
புது சிருஷ்டியின் தலையானீரே
puthu sirushtiyin thalaiyaaneeraE
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
sabaiyaam um sareeram seer porunthidavaE
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை -2– என்
yeevaai aLiththeer appOsththalarai
முன்னறிந்தே என்னை அழைத்தீரே
munnarinthaE ennai azhaiththeeraE
முதற்பேராய் நீர் இருக்க
mutharpEraai neer irukka
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
aaviyaal abishEhiththeer ennaiyumaE
உம் சாயலில் நான் வளர -2 – என்
um saayalil naan vaLara
வருங்காலங்களில் முதற்பேராய்
varungkaalangaLil muthar pEraai
நீர் இருக்க நாம் சோதரராய்
neer irukka naam sOthararaai
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
um kirubaiyin vaarththaiyai veLippaduththi
ஆளுவோம் புது சிருஷ்டியிலே – என்
aaLuvOm puthu sirushtiyilaE
நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
nantriyaal en uLLam nirainthiduthaE
நான் எப்படி பதில் செய்குவேன் -2
naan eppadi pathil seihuvaEn
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
ummahaa nOkkam mutrumaai niraivErida
என்னை தந்தேன் நடத்திடுமே – என்
ennai thanthaEn nadaththidumaE