Showing posts with label Savarimuthu. Show all posts
Showing posts with label Savarimuthu. Show all posts

ThEn inimaiyilum | தேன் இனிமையிலும்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
thEn inimayilum yesuvin naamam
திவ்விய மதுரமாமே – அதைத்
thivya mathuramaamaE -athai
தேடியே நாடி ஓடியே வருவாய், 
thaEdiyaE naadi OdiyaE varuvaai
தினமும் நீ மனமே -தேன் இனிமையிலும்
thinamum nee manamaE

காசினிதனிலே நேசமதாகக்
kaasinithanilaE nEsamathaaha
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
kashtaththai uththariththaE -paava
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
kasadathai aruththu saabaththai tholaiththaar
கண்டுணர் நீ மனமே  -தேன் இனிமையிலும் 
kaNduNar nee manamaE

பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
paaviyai meetka thaaviyaE uyiraith
தாமே ஈந்தவராம் – பின்னும்
thaamaE yeenthavaraam -pinnum
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
nEmiyaam karuNai nilaivaramuNdu
நிதம் துதி மனமே-தேன் இனிமையிலும் 
nitham thuthi en manamaE

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
kaalaiyil pani pOl maayamaai ulaham
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
upaayamaai neengi vidum -entrum
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
karththarin paatham nichchayan nambu
கருத்தாய் நீ மனமே-தேன் இனிமையிலும் 
karuththaai nee manamaE

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
thunbaththil inbam thollaiyil nalla
துணைவராம் நேசரிடம் – நீயும்
thuNaivaraam nEsaridam -neeyum
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
anbathaai sErnthaal aNaiththunai kaappaar
ஆசை கொள் நீ மனமே.-தேன் இனிமையிலும் 
aasai koL nee manamaE

பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
poolOhaththaarum mElOhaththaarum
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
puhazhnthu pOtrum naamam -athai
பூண்டுகொண்டால் தான் பொன்னகர் வாழ்வில்
pooNdu koNdaal thaan ponnahar vaazhvil
புகுவாய் நீ மனமே-தேன் இனிமையிலும் 
puhuvaai nee manamaE



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)