Showing posts with label 02-21-21. Show all posts
Showing posts with label 02-21-21. Show all posts

kaNgaLai pathiya vaippOm | கண்களை பதிய வைப்போம்

கண்களை பதிய வைப்போம்
kaNgaLai pathiya vaippOm
கர்த்தராம் இயேசுவின் மேல் -2
karththaraam yEsuvin mEl
  கடந்ததை மறந்திடுவோம்
  kadanthathai maranthiduvOm
  தொடர்ந்து முன் செல்லுவோம் -2 -கண்களை 
  thodarnthu mun selluvOm

சூழ்ந்து நிற்கும் சுமைகள்
soozhnthu nirkum sumaihaL
நெருங்கி பற்றும் பாவங்கள் -2
nerungi patrum paavangaL
  உதறித் தள்ளி விட்டு
  uthari thaLLi vittu
  ஓடுவோம் உறுதியுடன் -2 -கண்களை 
  OduvOm uruthiyudan

இழிவை எண்ணாமலே
izhivai eNNaamalaE
சிலுவையை சுமந்தாரே -2
siluvaiyai sumanthaaraE
  வல்லவர் அரியணையின்
  vallavar ariyaNaiyin
  வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்  -2-கண்களை 
  valappakkam veetrirukkintaar

தமக்கு வந்த எதிர்ப்பை
thamakku vantha yethirppai
தாங்கி கொண்ட அவரை -2
thaangi koNda avarai
  சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்
  sinthaiyil niruththiduvOm -manam
  சோர்ந்து போக மாட்டோம் -2-கண்களை 
  sOrnthu pOga maattOm

ஓட்டத்தை தொடங்கினவர்
Ottaththai thodanginavar
தொடர்ந்து நடத்திடுவார் – நம்
thodarnthu nadaththiduvaar -nam
  நிறைவு செய்திடுவார்
  niraivu seiythiduvaar
  நிச்சயம் பரிசு உண்டு -2-கண்களை 
  nichchayam parisu uNdu

மேகம் போன்ற சாட்சிகள்
mEgam pOntra saatchihaL
நம்மை சூழ்ந்து நிற்க -2
nammai soozhnthu nirka
  நியமித்த ஓட்டத்திலே
  niyamiththa OttaththilaE
  ஓடுவோம் பொறுமையோடு -2 -கண்களை 
  OduvOm porumaiyOdu

பாவத்திற்கு எதிராய்
paavaththirku yethiraai
போராட்டம் நமக்கு உண்டு -2
pOraattam namakku uNdu
  இரத்தம் சிந்தும் அளவு
  raththam sinthum aLavu
  எதிர்த்து நிற்கவில்லையே -2 -கண்களை 
  yethirththu nirkavillaiyaE

தடைகள் நீக்கும் இயேசு
thadaihaL neekkum yEsu
நமக்கு முன் செல்கிறார் -2
namakku mun selhiraar
  தடை செய்யும் கற்களெல்லாம்
  thadai seiyum karkaLellaam
  முன்னேற்றும் படிகளாகும் -2 -கண்களை 
  munnEtrum padihaLaahum


Mahimai maatchimai nirainthavarai | மகிமை மாட்சிமை நிறைந்தவரை

மகிமை மாட்சிமை நிறைந்தவரை !
mahimai maatchimai nirainthavaraE
மகிழ்வுடன் தொழுதிடுவோம் -2
mahizhvudan thozhuthiduvOm
  பரிசுத்த தேவனாம் இயேசுவை
  parisuththa dEvanaam yEsuvai
  பணிந்தே தொழுகுவோம் -மகிமை 
  paNinthaE thozhuhuvOm

உன்னத தேவன் நீரே!
unnatha dEvan neeraE
ஞானம் நிறைந்தவரே -2
gnanam nirainthavaraE
  முழங்கால் யாவுமே 
  muzhangaaL yaavumaE
  பாரினில் முடங்கிடுதே 
  paarinil mudangiduthaE
உயர்ந்தவரே சிறந்தவரே!
uyarnthavaraE siranthavaraE
என்றும் தொழுதிடுவோம் – மகிமை
entrum thozhuthiduvOm

ஒருவரும் சேரா ஒளியில்
oruvarum sEraa oLiyil
வாசம் செய்பவரே! -2
vaasam seiybavaraE
  ஒளியினை தந்துமே
  oLiyinai thanthumaE
  இதயத்தில் வாசம் செய்யும்
  idhayaththil vaasam seiyyum
ஒளிநிறைவே அருள் நிறைவே!
oLi niraivaE aruL niraivaE
என்றும் தொழுதிடுவோம் -2– மகிமை
entrum thozhuthiduvOm

பரிசுத்த தேவன் நீரே!
parisuththa dEvan neeraE 
பாதம் பணிந்திடுவோம் -2
paatham paNinthiduvOm
  கழுவியே நிறுத்தினீரே
  kazhuviyaE niruththineraE 
  சத்திய தேவன் நீரே!
  saththiya dEvan neeraE
கனம் மகிமை செலுத்தியே நாம்
ganam mahimai seluththiyaE naam
என்றும் தொழுதிடுவோம் -2– மகிமை
entrum thozhuthiduvOm

நித்திய தேவன் நீரே!
niththiya dEvan neeraE
நீதி நிறைந்தவரே! -2
neethi nirainthavaraE
  அடைக்கலமானவரே!
  adaikkalamaanavaraE
  அன்பு நிறைந்தவரே!
  anbu nirainthavaraE
நல்லவரே வல்லவரே!
nallavaraE vallavaraE
என்றும் தொழுதிடுவோம்  -2– மகிமை
entrum thozhuthiduvOm



Nantri balipeedam kattuvOm | நன்றி பலிபீடம் கட்டுவோம்

நன்றி பலிபீடம் கட்டுவோம்
nantri palipeedam kattuvOm
நல்ல தெய்வம் நன்மை செய்தார் -2
nalla deivam nanmai seiythaar
  செய்த நன்மை ஆயிரங்கள்
  seiytha nanmai aayirangaL
  சொல்லிச் சொல்லி பாடுவேன் -2
  solli solli paaduvaEn

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே -2
nantri thahappanaE nanmai seiytheeraE

ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
jeevan thanthu neer anbu koorntheer
பாவம் நீங்கிட கழுவி விட்டீர் -2
paavam neengida kazhuvi vitteer
  உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
  umakkentru vaazha piriththeduththu
  உமது ஊழியம் செய்ய வைத்தீர் -2-நன்றி தகப்பனே 
  umathu oozhiyam seiyya vaiththeer

சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
sirantha muraiyilaE kural yezhuppum
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே -2
siluvai raththam neer sinthineeraE
  இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
  raththa kOttaikkuL vaiththu koNdu
  எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் -2 -நன்றி தகப்பனே 
  yethiri nuzhaiyaamal kaaththuk koNdeer

இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
iruLin athikaaram ahatri vitteer
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் -2
yEsu arasukkuL sErththu  vitteer
  உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
  umakku sonthamaai vaangi koNdu
  உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் -2 -நன்றி தகப்பனே 
  urimai soththaaha vaiththuk koNdeer

புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
puthiya udanpaattin adaiyaaLamaai
புனித இரத்தம் ஊற்றினீரே -2
punitha raththam ootrineeraE
  சத்திய ஜீவ வார்த்தையாலே
  saththiya jeeva vaarththaiyaalaE
  மரித்த வாழ்வையே மாற்றினீரே -2 -நன்றி தகப்பனே 
  mariththa vaazhvaiyaE maatrineeraE

எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை
yethiraai vaazhnthu vantha ivvulahai
ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால் -2
oppuravaakkineer um raththaththaal
  தூரம் வாழ்ந்து வந்த எங்களையே
  thooram vaazhnthu vantha engaLaiyaE
  அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால் -2 -நன்றி தகப்பனே 
  aruhil koNdu vantheer aaviyinaal

குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்
kutram seiythathaal mariththirunthOm
இயேசுவோடே கூட எழச்செய்தீர் -2
yEsuvOdaE kooda yezha seiytheer
  கிருபையினாலே இரட்சித்தீரே
  kirubaiyinaalaE ratchiththeeraE
  உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் -2 -நன்றி தகப்பனே 
  unnathangaLilaE utkaara seiytheer

பார்க்கும் கண்களை தந்தீரையா
paarkkum kaNhaLai thantheeraiyaa
பாடும் உதடுகள் தந்தீரையா -2
paadum uthaduhaL thantheeraiyaa
  உழைக்கும் கரங்களை தந்தீரையா
  uzhaikkum karangaLai thantheeraiyaa
  ஓடும் கால்களைத் தந்தீரையா -2 -நன்றி தகப்பனே 
  Odum kaalhaLai thantheeraiyaa

நல்ல குடும்பம் நீர் தந்தீரையா
nalla kudumbam neer thantheeraiyaa
செல்ல பிள்ளைகள் தந்தீரையா -2
chella piLLaihaL thantheeraiyaa
  அணைக்கும் கணவனை தந்தீரையா
  aNaikkum kaNavanai thantheeraiyaa
  அன்பு மனைவியை தந்தீரையா -2 -நன்றி தகப்பனே 
  anbu manaiviyai thantheeraiyaa

இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்
irukka nalla oru veedu thantheer
வாழத் தேவையான வசதி தந்தீர் -2
vaazha thEvaiyaana vasathi thantheer
  கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
  kadumaiyaaha thinam uzhaikka vaiththeer
  கடனே இல்லாமல் வாழ வைத்தீர் -2 -நன்றி தகப்பனே 
  kadanaE illaamal vaazha vaiththeer





Naan nirpathum nirmoolamaahaathathum dEva kirubaiyaE | நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
naan nirpathum nirmoolamaahaathathum dEva kirubaiyaE
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
naan uyirudan vaazhvathum suhamudan iruppathum கிருபையே

  கிருபையே.. தேவ கிருபையே ..
  kirubaiyaE.. dEva kirubaiyaE ..
  தேவ கிருபையே.. தேவ கிருபையே..  -ஆ..ஆ..ஆ..ஆ.. -நான் 
  dEva kirubaiyaE.. dEva kirubaiyaE -aa.aa..aa..aa..

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
kaalaiyil yezhuvathum karththarai thuthippathum
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே -2
maalaiyil kaappudan illam varuvathum kirubaiyaE
  போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
  pOkkilum varaththilum tholaithoora payaNaththilum
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன்  -கிருபையே
paatham kallilaE idaraamal kaappathum kirubaiyaE -un 

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
kaNNeer kavalaihaLil kashta nashtangaLil
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே -2
thushtanin kaikku vilakki kaappathum kirubaiyaE
  ஆழியின் நடுவினிலும் சீறிடும் புயலினிலும் – 2
  aazhiyin naduvinilum seeridum puyalinilum
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2 -கிருபையே
neer mEl nadanthu vanthu ennai kaappathum kirubaiyaE





Song Arrangement
------------------------- 

Time: 4/4 

        1                7                  6          1
naan nirpathum nirmoolamaahaathathum dEva kirubaiyaE
        6                   7                      1
naan uyirudan vaazhvathum suhamudan iruppathum
   1                  7
  kirubaiyaE.. dEva kirubaiyaE ..
        6        4        1
  dEva kirubaiyaE.. dEva kirubaiyaE -aa.aa..aa..aa..

1                        7 
kaalaiyil yezhuvathum karththarai thuthippathum
1                             5
maalaiyil kaappudan illam varuvathum kirubaiyaE - 2
    1                     7   
  pOkkilum varaththilum tholaithoora payaNaththilum - 2
1                              5
paatham kallilaE idaraamal kaappathum kirubaiyaE -un 



Athisayam seiyvaar dEvan | அதிசயம் செய்வார் தேவன்

அதிசயம் செய்வார் தேவன் 
athisayam seiyvaar dEvan
அற்புதம் செய்வார் இயேசு 
arputham seiyvaar yEsu
ஆண்டவர் வாக்கை நம்பு 
aaNdavar vaakkai nambu
நிச்சயம் வாழ்வு உண்டு 
nichchayam vaazhvu uNdu

வெட்கப்பட்டுப் போவதில்லை  -2
vetkappattup pOvathillai
வெட்கப்பட்டுப் போவதில்லை  -நீ    (2)
vetkappattup pOvathillai -nee
வெட்கப்பட்டுப் போவதில்லை 
vetkappattup pOvathillai

இழந்ததைத் திரும்பத் தருவார் 
izhanthathai thirumba tharuvaar
தேசம் தன்  பலனைக் கொடுக்கும்     
dEsam than palanaik kodukkum        (2)
கர்த்தர் நன்மை அருள்வார் 
karththar nanmai aruLvaar
என்றும் துதித்திடுவாய்  -வெட்கப்பட்டுப் 
entrum thuthiththiduvaai

களங்கள் தானியத்தால் நிரம்பும் 
kaLangaL thaaniyaththaal nirambum
எண்ணையும் ரசமும் வழியும் 
eNNaiyum rasamum vazhiyum           (2)
வஸ்துக்கள் நிரம்பிய வீடும் 
vasthukkaL nirambiya veedum
தோட்டங்கள் துறவுகள் தருவார் -வெட்கப்பட்டுப் 
thOttangaL thuravuhaL tharuvaar

தேவனின் வாக்கை நம்பு 
dEvanin vaakkai nambu
திரும்பப் பெற்றுக் கொள்வாய் 
thirumba petru koLvaai              (2)
உன்னதர் உன்னோடு உண்டு 
unnathar unnOdu uNdu
திருப்தியாக வாழ்வாய் -வெட்கப்பட்டுப் 
thirupthiyaaha vaazhvaai

தடைகள் தகர்ந்து போகும்  -2
thadaihaL thaharnthu pOhum
தடைகள் தகர்ந்து போகும் -உன் 
thadaihaL thaharnthu pOhum -un
தடைகள் தகர்ந்து போகும் -வெட்கப்பட்டுப் 
thadaihaL thaharnthu pOhum

ஆண்டவர் வாக்கு பலிக்கும் -2
aaNdavar vaakku palikkum
ஆண்டவர் வாக்கு பலிக்கும் -நம் 
aaNdavar vaakku palikkum -nam
ஆண்டவர் வாக்கு பலிக்கும் 
aaNdavar vaakku palikkum


Unnathamaanavarin Uyar Maraivilirukkiravan | உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்


உன்னதமானவரின்   உயர் மறைவிலிருக்கிறவன்
unnathamaanavarin uyar maraivilirukkiravan
  சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
    sarva vallavarin nizhalil thanguvaan
  இது பரம சிலாக்கியமே -2
  ithu parama silaakkiyamaE

அவர் செட்டையின் கீழ் 
avar settaiyin keezh
அடைக்கலம் புகவே                  (2)
adaikkalam puhavaE
தம் சிறகுகளால் மூடுவார்
tham sirahuhaLaal mooduvaar

தேவன் என் அடைக்கலமே
dEvan en adaikkalamaE
என் கோட்டையும் அரணுமவர்
en kOttaiyum araNumavar
  அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
  avar saththiyam parisaiyum kEdahamaam
  என் நம்பிக்கையும் அவரே  -2— அவர்
  en nambikkaiyum avaraE

இரவின் பயங்கரத்துக்கும்
iravin bayangaraththukkum
பகலில் பறக்கும் அம்புக்கும்
pahalil parakkum ambukkum
  இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
  iruLil nadamaadum koLLai nOikkum
  நான் பயப்படவே மாட்டேன்  -2— அவர்
  naan bayappadavaE maattaEn

ஆயிரம் பதினாயிரம்
aayiram pathinaayiram
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
pErhaL un pakkam vizhunthaalum
  அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
  athu oru kaalaththum unnai aNuhidaathaE
  உன் தேவன் உன் தாபரமே -2— அவர்
  un dEvan un thaaparamaE
 
தேவன் உன் அடைக்கலமே
dEvan un adaikkalamaE
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
oru pollaappum unnai sErumO
  ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
  oru vaathaiyum un koodaaraththaiyaE
  அணுகாமலே காத்திடுவார்  -2— அவர்
  aNuhaamalaE kaaththiduvaar

உன் வழிகளிலெல்லாம்
un vazhihaLilellaam
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
unnai thootharhaL kaaththiduvaar
  உன் பாதம் கல்லில் இடறாதபடி
  un paatham kallil idaraathapadi
 தம்  கரங்களில் ஏந்திடுவார்  -2— அவர்
  tham karangaLil yEnthiduvaar

சிங்கத்தின் மேலும் நடந்து
singaththin mElum nadanthu
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
valu sarppaththaiyum mithippaai
  அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
  avar naamaththai nee mutrum nambinathaal
  உன்னை விடுவித்து காத்திடுவார்  -2— அவர்
  unnai viduviththu kaaththiduvaar

ஆபத்திலும் அவரை நான்
aabaththilum avarai naan
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
nOkki kooppidum vELaiyilum
  என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
  ennai thappuviththaE mutrum ratchippaaraE
  என் ஆத்தும நேசரவர்  -2— அவர்
  en aaththuma nEsaravar


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)