Showing posts with label 03-06-22. Show all posts
Showing posts with label 03-06-22. Show all posts

Deivanbin veLLamaE | தெய்வன்பின் வெள்ளமே

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
deivanbin veLLamaE thiruvaruL thOtramaE
மெய் மனதானந்தமே!
mei manathaananthamaE
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
seiyya nin sempaatham sEvikka ivvELai
ஐயா, நின் அடி பணிந்தேன் -ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
iyyaa nin adi paNinthaEn

சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
sontham unathallaal sOra vazhi sella
எந்தாய் துணிவேனோ யான்?
enthaai thuNivEnO yaan
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
punthikkamalamaam poomaalai kOththu nin
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
porpatham pidiththu koLvEn

பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
paava sEtril pala vELai palamintri
தேவே தவறிடினும்,
dEvaE thavaridinum
கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
koovi viLiththum than maarbOdaNaiththanbaai
யாவும் பொறுத்த நாதா! -2-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
kOthu poruththa naathaa

மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
moorkka guNam kObam lOgam sitrinbamum
மேற்கொள்ளும் நாச ஏக்கம்
mErkoLLum naasa yEkkam
தாக்கித் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
thaakki thadumaari thayangidum vELaiyil
தூக்கித் தற்காத்தருள்வாய் -2-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
thookki tharkaaththaruLvaai

ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
aasai paasam patru aavalaai nin thiru
பூசைப் பீடம் படைப்பேன்
poosai peedam padaippaEn
மோச வழிதனை முற்று மகற்றியென்
mOsa vazhithanai mutrum ahatriyen
நேசனே நினைத் தொழுவேன் -2-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
nEsanaE ninai thozhuvaEn

மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
maraNamO jeevanO marumaiyO poomiyO
மகிமையோ, வருங்காலமோ,
mahimaiyO varungkaalamO
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
pira sirushtiyO uyarnthathO thaazhnthathO
பிரித்திடுமோ தெய்வன்பை -2-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
piriththidumO deivanbai


Ovvoru naaLilum | ஒவ்வொரு நாளிலும்

ஒவ்வொரு  நாளிலும் 
ovvoru naaLilum
ஒவ்வொரு நிமிடமும்
ovvoru nimidamum
உம்மையே தேடனுமே
ummaiyaE thEdaNumaE        (2)
உம் அன்புகாகவே
um anbukkaahavaE
என் உள்ளம் ஏங்குதே
en uLLam yEnguthaE
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ummaiyaE vaanjikkiraEn

இயேசுவே இயேசுவே
yEsuvaE yEsuvaE
உம்மை நான் நேசிக்கிறேன்
ummai naan nEsikkiraEn
இயேசுவே இயேசுவே
yEsuvaE yEsuvaE
உம்மை நான் வாஞ்சிக்கிறேன்
ummai naan vaanjikkiraEn

கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
kavalaiyum kaNNeerum neer maatrineer
மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர் -2
mana paaramum vEthanaiyum neer maatrineer 
  உம்மைபோல யாருமில்லை -2 -இயேசுவே
  ummai pOla yaarumillai

எனக்காவே ஜீவனை நீர் தந்தீரே
enakkaahavaE jeevanai neer thantheeraE
என் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே -2
en saabangaLai siluvaiyil neer sumantheeraE
  உம்மைபோல யாருமில்லை -2 -இயேசுவே
  ummai pOla yaarumillai





dEva naan ethinaal visEshiththavan | தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
dEva naan ethinaal visEshiththavan
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் -2
raaja naan athai thinam yOsippavan
   
  எதினால் இது எதினால் 
  ethinaal inthu ethinaal
  நீர் என்னோடு வருவதினால்(வசிப்பதினால் ) -2 
  neer ennOdu varuvathinaal

மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
mEha sthambam mElirunthu paathukaakkuthu
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது -2
paathai kaatta pahalellaam kooda selluthu
   
  அன்பான தேவன் என்னோடு வருவார்
  anbaana dEvan ennOdu varuvaar
  அது போதும் என் வாழ்விலே -2 
  athu pOthum en vaazhvilaE

தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
thaaham koNda dEva janam vaanam paarkkuthu
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது -2
aaval koNda kanmalaiyum kooda selluthu
   
  என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
  en yEkkamellaam en dEvan theerppaar
  சந்தோஷம் நான் காணுவேன் -2 
  santhOsham naan kaaNuvaEn

வாழ்க்கையில்  கசப்புகள் கலந்திட்டாலும்
vaazhkkaiyil kasappuhaL kalanthittaalum
பாசமுள்ள ஒரு மரம் கூட வருகுது -2
paasamuLLa oru maram kooda varuhuthu
 
  மாராவின் நீரை தேனாக மாற்றும்
  maaraavin neerai thEnaaha maatrum
  என் நேசர் என்னோடுண்டு -2 
  en nEsar ennOduNdu




Song Arrangement - Fm
----------------------

Time: 2/4

1                  7
dEva naan ethinaal visEshiththavan
7                   5       1
raaja naan athai thinam yOsippavan -2
   6          7
  ethinaal inthu ethinaal
         7     1
  neer ennOdu varuvathinaal -2 

1              3          7 
mEha sthambam mElirunthu paathukaakkuthu
7           4             1
paathai kaatta pahalellaam kooda selluthu -2
   1            7
  anbaana dEvan ennOdu varuvaar
   6      5      1
  athu pOthum en vaazhvilaE -2



Siluvai sumantha uruvam | சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் 
siluvai sumantha uruvam
சிந்தின இரத்தம் புரண்டோடியே
sinthina raththam puraNdOdiyaE
நதிபோலவே பாய்கின்றதே 
nathi pOlavaE paaihintrathaE
  நம்பி இயேசுவண்டை வா  -2
  nambi yEsuvaNdai vaa

பொல்லா உலக சிற்றின்பங்கள்
pollaa ulaha sitrinbangaL
எல்லாம் அழியும் மாயை -2
ellaam azhiyum maayai
  காணாய் நிலையான சந்தோஷம் புவியில்
  kaaNaai nilaiyaana santhOsham puviyil
  கர்த்தாவின் அன்பண்டை வா -2 -சிலுவை சுமந்த
  karththaavin anbaNdai vaa

ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
aaththuma meetpai petridaamal
ஆத்மம் நஷ்டமடைந்தால் -2
aathmam nashtam adainthaal
  லோகம் முமுவதும் ஆதாயமாக்கியும்
  lOham muzhuvathum aathaayamaakkiyum
  லாபம் ஒன்றுமில்லையே -2 -சிலுவை சுமந்த
  laabam ontrumillaiyaE

பாவ மனித ஜாதிகளைப்
paava manitha jaathihaLai
பாசமாய் மீட்க வந்தார் -2
paasamaai meetka vanthaar
  பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
  paavap parihaari karththar yEsu naathar
  பாவமெல்லாம் சுமந்தார் -2 -சிலுவை சுமந்த
  paavamellaam sumanthaar

நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
niththiya jeevan vaanjippaayO
நித்திய மோட்ச வாழ்வில் -2
niththiya mOtcha vaazhvil
  தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
  thedi vaaraayO parisuththa jeeviyam
  தேவை அதை அடைவாய் -2 -சிலுவை சுமந்த
  thEvai athai adaivaai




YEzhai ennai kaividaamal | ஏழை என்னை கைவிடாமல்

ஏழை என்னை கைவிடாமல்
yEzhai ennai kaividaamal
நேசர் என்றும் நடத்திடுவார் -2
nEsar ennai nadaththiduvaar

அக்கரை நான் சேரும் வரை
akkarai naan sErum varai
அவர் தாங்குவார் உலகில்  -2
avar thaanguvaar ulahil
  ஆபத்திலும் துக்கத்திலும்  -2
  aabaththilum thukkaththilum
அவர் தான் எனக்கருகில் -2 -ஏழை 
avar thaan enakkaruhil

மரணத்தின் பள்ளத்தாக்கிலும்
maraNaththin paLLaththaakkilum
கண்ணீரின் வேளையிலும் -2
kaNNeerin vELaiyilum
  கைவிடாமல் கர்த்தர் என்னை -2
  kaividaamal karththar ennai
கரங்களில் தாங்கிடுவார் -2
karangaLil thaangiduvaar

புயல் காற்றும் அலைகளும் என் 
puyal kaatrum alaihaLum en
படகை அலைக்களிக்கும் -2
padahai alaikkaLikkum
  நேரமெல்லாம் கூட உண்டு -2
  nEramellaam kooda uNdu
நேசர் என்றும் வல்லவராய் -2
nEsar entrum vallavaraai

விண்ணில் என்னை சேர்த்திடவே
viNNil ennai sErththidavaE
வருவேன் என்றுரைத்த கர்த்தர் -2
varuvaEn enturaiththa karththar
  வந்திடுவார் சேர்த்திடுவார் -2
  vanthiduvaar sErththiduvaar
ஈந்திடுவார் பிரதிபலன்கள் -2  yEzhai
yeenthiduvaar prathibalangaL



Ennalume Thuthipai | எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
ennaalumae thuthippaai - ennaaththumaavae nee
எந்நாளுமே துதிப்பாய்
ennaalumae thuthippaay
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
innaal varaiyilae unnaathanaar seytha
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது

ennnnillaa nanmaikal yaavu maravaathu

பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
paavangal eththanaiyo - ninaiyaathirunthaarun
பாவங்கள் எத்தனையோ
paavangal eththanaiyo
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
paalaana Nnoyai akattik kunamaakkip
பாரினில் வைத்த மா தயவை நினைத்து
paarinil vaiththa maa thayavai ninaiththu
                            

எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
eththanaiyo kirupai - unnuyirkkuch seythaarae
எத்தனையோ கிருபை
eththanaiyo kirupai
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
niththamunai muti soottinathumanti
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால்
niththiyamaayun jeevanai meettathaal

நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
nanmaiyaalun vaayai - niraiththaarae poorththiyaay
நனமையாலுன் வாயை
nanamaiyaalun vaayai
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
un vayathu kalukaippol palangaொnndu
இன்னும் இளமை போலாகவே செய்ததால்
innum ilamai polaakavae seythathaal

பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
poomikkum vaanaththukkum - ulla thooram polavae
பூமிக்கும் வானத்துக்கும்
poomikkum vaanaththukkum
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
saami payamullavar mael avar arul
சாலவும் தங்குமே சத்தியமேயிது
saalavum thangumae saththiyamaeyithu

மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
mannippu maatchimaiyaam - maa thaevanarulum
மன்னிப்பு மாட்சிமையாம்
mannippu maatchimaiyaam
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
ennnuvaayo kilakkum maerkum thooramae
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே
mannnnil unpaavan akantath thooramae


தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
thanthai thana pillaikatku - thayavo tirangaano
தந்தை தன பிள்ளைகட்கு
thanthai thana pillaikatku
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
entha vaelaiyum avarodu thanginaal
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
sontham paaraattiyae thookkich sumappaarae







Song Arrangements
=================
D                    D       F#    G
ennaalumae thuthippaai - ennaaththumaavae nee
D                    D       

ennaalumae thuthippaay
D         Bm      A       D

innaal varaiyilae unnaathanaar seytha
D          G         A     
ennnnillaa nanmaikal yaavu maravaathu

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)