Showing posts with label 08-28-22. Show all posts
Showing posts with label 08-28-22. Show all posts

Pirantha naaL muthalaai | பிறந்த நாள் முதலாய்

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
Pirantha naaL muthalaai um thOLil sumantheeraE
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே -2
thahappanilum mElaau thani paasam vaiththeeraE

  மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
  methuvaana thendral kodungkaatraai maari
  அடித்த வேளையிலும் என்னை கீழே விடவில்லை -2-பிறந்த
  adiththa vELaiyilum ennai keezhaE vidavillai

தீங்கு நாளிலே கூடார மறைவிலே
theengu naaLilaE koodaara maraivilaE
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே -2
oLiththu vaiththeeraE um vElaikkaahavaE
  கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
  kanmalai mElennai uyarththi vaiththeeraE
  துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே -2 -பிறந்த 
  thuthikkum puthu paadl en naavil thantheeraE

பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே
pirakkum munnamaE en peyarai arintheeraE
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே -2
avayam anaiththumaE azhahaaha varaintheeraE
  என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
  ennidam uLLathaiyaE ummidam oppadaiththEn
  அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே -2 -பிறந்த 
  annaaL varaiyilumaE athai kaaththida vallavaraE



Avar Tholkalin Melae | அவர் தோள்களின் மேலே

அவர் தோள்களின் மேலே
avar tholkalin melae
நான் சாய்ந்திருப்பதால்
naan saaynthiruppathaal
கவலை ஓன்றும் எனக்கில்லையே
kavalai ontum enakkillaiyae
என் தேவைகள் எல்லாம்
en thaevaikal ellaam
அவர் பார்த்துக்கொள்வதால்
avar paarththukkolvathaal
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
naan avarukkullae makilnthiruppaenae

அவர் வார்த்தையின் மேலே
avar vaarththaiyin melae
நான் சார்ந்திருப்பதால்
naan saarnthiruppathaal
கவலை ஓன்றும் எனக்கில்லையே
kavalai ontum enakkillaiyae
என் தேவைகள் எல்லாம்
en thaevaikal ellaam
அவர் பார்த்துக்கொள்வதால்
avar paarththukkolvathaal
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
naan karththarukkul makilnthiruppaenae

யெகோவாயீரே எந்தன் தேவன்
yekovaayeerae enthan thaevan
தேவைகள் யாவும் சந்திப்பீரே
thaevaikal yaavum santhippeerae
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
yekovaa raaqpaa enthan thaevan
எந்நாளும் சுகம் தருவீரே - 2
ennaalum sukam tharuveerae - 2

மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
marana irulin pallaththaakkil nadakka naernthaalum
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் - 2
en appaa ennodu iruppathaalae payappadamaattaen - 2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
enakku virothamaay aayirangalum
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் - 2
pathinaayirangal elunthaalum anjidamaattaen - 2
-யெகோவாயீரே

நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
nerukkaththilae karththarai nokki kooppittaen
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே - 2
ennai visaalaththil konnduvanthu meettukkonndaarae - 2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
en patchaththil karththar iruppathinaalae
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே - 2
orupothum naan asaikkappaduvathillaiyae - 2
-யெகோவாயீரே


MaanhaL neerOdai vaanjiththu | மான்கள் நீரோடை வாஞ்சித்து

மான்கள் நீரோடை வாஞ்சித்து
maanhaL neerOdai vaanjiththu
கதறும்போல் தேவனே
katharum pOl dEvanaE (2)
எந்தன் ஆத்துமா உம்மையே
enthan aaththumaa ummaiyaE
வாஞ்சித்துக் கதறுதே
vaanjiththu katharuthaE

தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
thanjamum neer adaikkalam neer
கோட்டையும் நீர் என்றும் காப்பீர் -2 -மான்கள்
kOttaiyum neer entrum kaappeer

தேவன் மேல் ஆத்துமாவே
dEvan mEl aaththumaavaE
தாகமாயிருக்கிறதே -2
thaahamaayirukkirathaE
தேவனின் சந்நிதியில் நின்றிட
dEvanin sannithiyil nintrida
ஆத்துமா வாஞ்சிக்குதே -2 -தஞ்சமே
aaththumaa vaanjikkuthaE

ஆத்துமா கலங்குவதேன்
aaththumaa kalanguvathaEn
நேசரை நினைத்திடுவாய் -2
nEsarai ninaiththiduvaai
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
anbarin ratchippinaal thinamum
துதித்துப் போற்றிடுவோம் -2 -தஞ்சமே
thuthiththu pOtriduvOm

யோர்தான் தேசத்திலும்
yOrthaan dEsaththilum
எர்மோன் மலைகளிலும் -2
ermOn malaihaLilum
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
sirumalaihaLilirunthum ummai
தினமும் நினைக்கின்றேன் -2 -தஞ்சமே
thinamum ninaikkintraEn

கன்மலையாம் தேவன்
kanmalaiyaam dEvan
நீர் என்னை ஏன் மறந்தீர் -2
neer ennai yEn marantheer
எதிரிகளால் ஒடுங்கி அடியேன்
yethirhaLaal odungi adiyaEn
துக்கத்தால் திரிவதேனோ -2 -தஞ்சமே
thukkaththaal thirivathEnO

தேவரீர் பகற்காலத்தில்
dEvareer paharkaalaththil
கிருபையைத் தருகின்றீர் -2
kirubaiyai tharuhinteer
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
iravinil paadum paattu enthan
வாயினிலிருக்கிறது -2 -தஞ்சமே
vaayinilirukkirathu


Neer sonnaal pOthum seiyvaEn | நீர் சொன்னால் போதும் செய்வேன்

நீர் சொன்னால் போதும் செய்வேன்
neer sonnaal pOthum seiyvaEn
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
neer kaattum vazhiyil nadappaEn (2)
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
um paatham ontraE pidippaEN
என் அன்பு இயேசுவே
en anbu yEsuvaE

ஆராதனை இயேசுவுக்கே
aaraathanai yEsuvukkaE
ஆராதனை இயேசுவுக்கே -2 – நீர்
aaraathanai yEsuvukkaE

கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
kadalin meethu nadanthitta um arputha paathangaL
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவல
enakku munnaE selvathaal enakkilla kavala
காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்
katraiyum kadalaiyum athattiya um arputha vaaththaihaL
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவல -ஆராதனை
enthan thuNaiyaai nirpathaal enakkEthu kavala

பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
paathai ellaam anthakaaram soozhnthu koNdaalum
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
paathai kaatta nEsar uNdu bayamaE illaiyaE
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
paarvOn sEnai thodarnthu vanthu soozhnthu koNdaalum
பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே -ஆராதனை
paathukaakka karththar uNdu bayamaE illaiyaE




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)