aanantha thuthi oli kEtkum
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
aadal paadal saththamum thonikkum
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
aahaaya viNmeenaai avar janam peruhum
ஆண்டவர் வாக்கு பலிக்கும் -அல்லேலூயா
aaNdavar vaakku palikkum -
மகிமைப் படுத்துவேனென்றாரே
mahimaip paduththuvEnentraaraE
மகிபனின் பாசம் பெரிதே
mahibanin paasam perithaE
மங்காத புகழுடன் வாழ்வோம்
mangaatha puhazhudan vaazhvOm
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
maatchi petruyarnthiduvOmaE
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
kuruhida maattOm kuntrida maattOm
கரையில்லா தேவனின் வாக்கு -அல்லேலூயா
karaiyillaa dEvanin vaakku
ஆதி நிலை ஏகுவோமே
aathi nilai yEhuvOmaE
ஆசீர் திரும்பப் பெறுவோமே
aaseer thirumba peruvOmaE
பாழான மண்மேடுகள் யாவும்
paazhaana maNmEduhaL yaavum
பாராளும் வேந்தன் மனையாகும்
paaraaLum vEnthan manaiyaahum
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
sirai vaazhvu maraiyum seer vaazhvu malarum
சீயோனின் மகிமை திரும்பும் -அல்லேலூயா
seeyOnin mahimai thirumbum
விடுதலை முழங்கிடுவோமே
viduthalai muzhangiduvOmaE
விக்கினம் யாவும் அகலும்
vikkinam yaavum ahalum
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
idukkaNhaL soozhnthidum vELai
இரட்சகன் மீட்பருள்வாரே
ratchahar meetparuLvaarE
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
nuhangaL murinthidum kattuhaL arunthidum
விடுதலை பெருவிழா காண்போம் -அல்லேலூயா
viduthalai peruvizha kaaNbOm
யாக்கோபு நடுங்கிடுவானோ
yaakkObu nadungiduvaanO
யாக்கோபின் தேவன் துணையே
yaakkObin dEvan thuNaiyaE
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
amarikkai vaazhvai azhaippOm
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
aaNdavar maarbil suhippOm
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
patharaatha vaazhvum sitharaatha manamum
பரிசாக தேவனருள்வார் -அல்லேலூயா
parisaaha dEvan aruLvaar