sEnaiyathiban nam karththarukkaE | சேனையதிபன் நம் கர்த்தருக்கே

சேனையதிபன் நம் கர்த்தருக்கே
sEnaiyathiban nam karththarukkaE
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
seluththuvOm ganamum mahimaiyumaE
அற்புதமே தம் அன்பெமக்கு  
arputhamaE tham anbemaakku 
  அதை அறிந்தே  அகமகிழ்வோம் -2
  athai arinthaE ahamahizhvOm

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
jeya kiristhu mun selhiraar
ஜெயமாக நடத்திடுவார்
jeyamaaha nadaththiduvaar
ஜெயக்கீதங்கள் நாம் பாடியே
jeya keethangaL naam paadiyaE
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
jeya kodiyum yEtriduvOm
  ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே -2
  jeyam allEluyah avar naamaththirkE

தாய் மறந்தாலும் நான் மறவேன்
thaai maranthaalum naan maravaEn
திக்கற்றோராய் விட்டு விடேன்
thikkatrOraai vittu vidaEn
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
enturaiththemmai thEtuhiraar
  என்றும் வாக்கு மாறிடாரே -2— ஜெய
  entrum vaakku maaridaaraE

 மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
mEippan illaatha aaduhatkaE
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
naanaE nalla mEippan entaar
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
inba saththam pin sentriduvOm
  இன்பப் பாதைக் காட்டிடுவார் -2 — ஜெய
  inba paathai kaattiduvaar

சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
sathruvin kOttai thaharnthozhiya
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
saththiyam niththiyam nilaiththOnga
சாத்தானின் சேனை நடுங்கிடவே 
saaththaanin sEnai nadungidavaE
  துதி சாற்றி ஆர்ப்பரிப்போம்  -2— ஜெய
  thuthi saatri aarpparippOm

கறை, திரை முற்றும் நீங்கிடவே
karai thirai mutrum neengidavaE
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
karththar nammai kazhuviduvaar
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
varuhaiyil emmai sErkkum varai
  வழுவாமல் காத்துக் கொள்வார் — ஜெய
  vazhuvaamal kaaththuk koLvaar

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)