Showing posts with label Prayer. Show all posts
Showing posts with label Prayer. Show all posts

Konja kaalam yEsuvukkaaha | கொஞ்ச காலம் இயேசுவுக்காக

கொஞ்ச காலம் இயேசுவுக்காக
konja kaalam yEsuvukkaaha
கஷ்டப்பாடு சகிப்பதினால்
kashtappaadu sahippathinaal
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
innal thunbam inbamaai maarum
இயேசுவை நான் காணும் போது-2
yEsuvai naan kaaNum pOthu

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
avar paatham veezhnthu paNinthu
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
aanantha kaNNeer vadippaEn
  எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
  enthan Ottam jeyaththudan mudiyum
  அந்த நாடு சுதந்தரிப்பேன் -2-கொஞ்ச
  antha naadu suthantharippaEn

கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
kashtam kaNNeer niraintha ulagai
கடந்தென்று நான் மறைவேன் -2
kadanthentru naan maraivaEn
  ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
  jeeva ootrarukaE ennai nadaththi sentraE
  தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் -2 -அவர் பாதம்
  dEvan kaNNeerai thudaiththiduvaar

இந்த தேகம் அழியும் கூடாரம்
intha thEgam azhiyum koodaaram
இதை நம்பி யார் பிழைப்பார் -2
ithai nambi yaar pizhaippaar
  என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
  en pitha veettil vaasathalangaLuNdaE
  இயேசுவோடு நான் குடியிருப்பேன் -2 -அவர் பாதம்
  yEsuvOdu naan kudiyiruppaEn

கனவான்கள் பாக்கியவான்கள் 
ganavaankaL paakkiyavaankaL
கர்த்தருக்குள் மரிப்பவர்கள் -2
karththarukkuL marippavarkaL
  கிறிஸ்தென் ஜீவன் சாவு என் ஆதாயம் 
  kiristhen jeevan saavu en aathaayam
  காணுவேன் என் பிதா முகமே -2-அவர் பாதம்
  kaaNuvaEn en pithaa muhamaE


AbishEha oliva maram | ஆபிஷேக ஒலிவ மரம்

ஆபிஷேக ஒலிவ மரம்
abishEha oliva maram
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
um aalayaththil nadappattavan      (2)
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
um samuhaththil vaazhhintravan
உம் அன்பையே நம்புபவன்  - நான் உம் ஆபிஷேக
um anbaiyaE nambupavan -naan um

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
um vasanam thaan pasiyaatrum uNavu
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் - 2
um pirasanam thaan thaagam theerkum thaNNeer
  நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
  neeraE en veLichchamum meetpumaaneer
  நீரே என் ஜீவனின் பெலனானீர் - 2
  neeraE en jeevanin belanaaneer
                           - நான் உம் ஆபிஷேக

காப்பாற்றும் காவலர் நீரே
kaappaatrum kaavalar neeraE
அயராது நீர் பாய்ச்சுவீரே - என்னை 
ayaraathu neer paaichuveeraE -ennai
  என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
  en thEvaihaL yaavaiyum santhippavaraE
  எந்த சேதமும் இன்றி காப்பவரே -2
  entha sEthamum intri kaappavaraE
                           - நான் உம் ஆபிஷேக

பெலன் தரும் புகலிடம் நீரே
belan tharum puhalidam neeraE
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே - 2
ummil vEroontra kirubai seiytheeraE
  மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
  malarnthiduvaEn naan kani koduppaEn
  (இந்த) உலகமெங்கும் உமக்காய் பலன் கொடுப்பேன் -2
  (intha) ulahengum umakkaai palan koduppaEn
                            - நான் உம் ஆபிஷேக





EllaamaE neengathaanaiya | எல்லாமே நீங்கதானையா

எல்லாமே நீங்கதானையா -எனக்கு 
ellaamaE neenga thaanaiyaa -enakku

உபத்திரவமோ வியாகுலமோ 
upaththiravamO viyaahulamO
பட்டினியோ துன்பமோ -2
pattiniyO thunbamO
  உங்க அன்பை பிரிக்க முடியுமா -இயேசையா 
  unga anbai pirikka mudiyumaa -yEsaiyaa

பட்டயமோ நிர்வாணமோ 
pattayamO nivaaNamO
நாசா மோச நேரங்களோ -2
naasa mOsa nErangaLO
  உங்க அன்பை பிரிக்க முடியுமா -இயேசையா 
    unga anbai pirikka mudiyumaa -yEsaiyaa

வேதனையோ சோதனையோ 
vEthanaiyO sOthanaiyO
வெறுக்கும் இந்த மனிதர்களோ -2
verukkum intha manitharhaLO
  உங்க அன்பை பிரிக்க முடியுமா -இயேசையா 
  unga anbai pirikka mudiyumaa -yEsaiyaa

மரணமானாலும் ஜீவனானாலும் 
maraNamaanaalum jeevanaanaalum
மகிழ்ச்சியானாலும் அழுகையானாலும் -2
mahizhchchiyaanaalum azhuhaiyaanaalum
  உங்க அன்பை பிரிக்க முடியுமா -இயேசையா 
   unga anbai pirikka mudiyumaa -yEsaiyaa

  

IsravElin naathanaaha vaazhum | இஸ்ரவேலின் நாதனாக வாழும்

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் 
isravElin naathanaaga vaazhum yEha deivam
வழியும் சத்தியம் ஜீவனுமாம் தெய்வம் 
vazhiyum saththiyam jeevanumaam deivam
மீட்பராக பூமியில் பிறந்தார் தேவ மைந்தன் 
meetparaaha poomiyil piranthaar dEva mainthan
நித்திய ஜீவனாய் வாழும் தெய்வம் 
niththiya jeevanaai vaazhum deivam

  அப்பா பிதாவே தெய்வமே 
  appaa pithaavaE deivamaE
  உம்  திரு ராஜ்யம் வருகவே           (2)
  um thiru raajjiyam varuhavaE
  உம் திரு சித்தம் பூமியில் 
  um thiru siththam poomiyil
  என்றென்றும் நிறைவேற வேண்டுமே 
  entrentrum niraivEra vENdumaE

செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர் 
sengadalil neer antru paathai vahuththeer
பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர் 
paalaivanaththil antru mannaa pozhintheer
கொடும் வெயிலில் மேக குளிரானீர்                (2)
kodum veyilil mEha kuLiraaneer
இருளில் அன்பின் தீபமாய் 
iruLil anbin theepamaai
சீனாய் மலையின் மேலே நீர் 
seenaai malaiyin mElaE neer
நீதியின் கட்டளை எடுத்துரைத்தீர்  -அப்பா பிதாவே 
neethiyin kattaLai yeduththuraiththeer

மனிதனாய் பூவில் அவதரித்தீர் 
manithanaai poovil avathariththeer
எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர் 
enakkaaha jeevan pali koduththeer
திரு உடலும் திவ்ய போஜனுமாய்                   (2)
thiru udalum thivya pOjanumaai
இவ்வுலகத்தின் ஜீவனாய் 
ivvulahaththin jeevanaai
வழியும் சாத்தியமுமானவரே 
vazhiyum saththiyamumaanavaraE
உம்  திரு நாமம் வாழ்த்துகிறேன்  -அப்பா பிதாவே 
um thiru naamam vaazhththuhiraEn


kalangina nErangaLil | கலங்கின நேரங்களில்

கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
kalangina nErangaLil kai thookki yeduppavaraE
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே -2
kaNNeerin paLLaththaakkil ennOdu iruppavaraE
  உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
  uravuhaL maranthaalum neer ennai marappathillai
  காலங்கள் மாறினாலும் நீங்க மட்டும் மாறவில்லை -2
  kaalangaL maarinaalum neenga mattum maara villai


நீங்க தான்பா எங்க நம்பிக்கை
neenga thaanpaa enga nambikkai
உம்மையன்றி வேறு துணையில்லை -2
ummaiyantri vEru thuNaiyillai


தேவைகள் ஆயிரம் என் முன் இருப்பினும்
thEvaihaL aayiram en mun iruppinum
சோர்ந்து போவதில்லை, என்னோடு நீர் உண்டு -2
sOrnthu pOvathillai ennOdu neer uNdu
  தேவையை காட்டிலும் பெரியவர் நீரல்லோ
  thEvaihaL kaattilum periyavar neerallO
  நினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ -2— நீங்க
  ninaippathai paarkkilum seiybavar neerallO

மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை
manithanin thooshaNaiyil manamadivadaivathillai
நீர் எந்தன் பக்கம் உண்டு, தோல்விகள் எனக்கு இல்லை -2
neer enthan pakkam uNdu thOlvihaL enakku illai
  நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
  naavuhaL enakkethiraai saatchihaL sonnaalum
  வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை  -2— நீங்க
  vaathaada neer uNdu orupOthum kalakkamillai



kaNgaLai yEreduppaEn | கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேருநேராய் என்
kaNhaLai yEreduppaEn -maa mEru nEraai en
கண்களை ஏறெடுப்பேன்
kaNhaLai yEreduppaEn
  விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந் -2
  viN maN uNdaakkiya viththahanidamirunthu
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் — கண்களை
yeNNillaa voththaasai entranukkaE varum

காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
kaalaith thaLLaada vottaar -urangaathu kaappavar
காலைத்தள்ளாட வொட்டார்,
kaalaith thaLLaada vottaar 
  வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர் -2
  vElaiyil nin tisravElarai kaaththavar
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் — கண்களை
kaalaiyum maalaiyum kaNNurangaathavar

பக்தர்  நிழல் அவரே — எனை ஆதரித்திடும்
bakththar nizhal avaraE -enai aathariththidum
பக்தர்  நிழல் அவரே
bakththar nizhal avaraE
  எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது -2
  ekkaala nilaimaiyum enai sEthappaduththaathu
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே — கண்களை
akkOlam koNdOnai akkaalam puriyavaE

எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
ellaath theemaihatkum -ennai vilakkiyaE
எல்லாத் தீமைகட்கும்
ellaath theemaihatkum
  பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் -2
  pollaa ulahinil pOkku varaththaiyum
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் — கண்களை
nallaaththumaavaiyum naadOrum kaappavar



kaNNOkki paarththa dEva | கண்ணோக்கிப் பார்த்த தேவா

கண்ணோக்கிப் பார்த்த தேவா
kaNNOkki paarththa dEva
கலக்கங்கள் தீர்த்த தேவா
kalakkangaL theerththa dEva
  பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
  paava sEtril vaazhntha ennai
  உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா  -2
  unthan karam neetti meetta dEva

தாயே என் இயேசு நாதா
thaayaE en yEsu naathaa
தந்தையே மா யேகோவா -2
thanthaiyaE maa yehOvaa

கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே
karppaththil naan thOntru munnaE
என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே
ennai peyar solli azhaiththavaraE
கருவிலே நான் தோன்றும் முன்னே
karuvil naan thOntru munnaE
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் -தாயே
unthan karangaLil varainthu koNdeer

இரத்தத்தாலே மீட்டவரே
raththaththaalaE meettavaraE
இரட்சிப்பு தந்தவரே
ratchippu thanthavaraE
பாவமெல்லாம் தீர்த்தவரே
paavamellaam theerththavaraE
பரலோகில் சேர்ப்பவரே -தாயே
paralOhil sErppavaraE

கண்மணி போல் காப்பவரே
kaNmaNi pOl kaappavaraE
கண்ணீரைத் துடைப்பவரே
kaNNeerai thudaippavaraE
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
eNNamellaam nirainthavaraE
இதயத்தைக் கவர்ந்தவரே -தாயே
idhayaththai kavarnthavaraE


Karai yEri umathaNdai | கறையேறி உமதண்டை

கறையேறி உமதண்டை
karai yEri umathaNdai
நிற்கும்போது ரட்சகா
nirkum pOthu ratchagaa
உதவாமல் பலனற்று
uthavaamal belanatru
வெட்கப்பட்டுப் போவேனோ
vetkappattu pOvEnO

ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
aathma ontrum ratchikkaamal
வெட்கத்தோடு ஆண்டவா
vetkaththOdu aaNdavaa
வெறுங்கையனாக உம்மைக்
verungkaiyanaaha ummai
கண்டு கொள்ளல் ஆகுமா?
kaNdu koLLal aahumaa

ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
aaththumaakkaL pEril vaanjai
வைத்திடாமல் சோம்பலாய்க்
vaiththidaamal sOmbalaai
காலங்கழித்தோர் அந்நாளில்
kaalangkazhiththOr annaaLil
துக்கிப்பார் நிர்ப்பந்தராய் -ஆத்மா ஒன்றும் 
thukkippaar nirppantharaai

தேவரீர் கை தாங்க சற்றும்
dEvareer kai thaanga satrum 
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
saavukkanji kalangaEn
ஆயினும் நான் பெலன் காண
aayinum naan belan kaaNa
உழைக்காமற் போயினேன் -ஆத்மா ஒன்றும் 
uzhaikkaamar pOyinaEn

வாணாள் எல்லாம் வீணாளாகச்
vaaNaaL ellaam veeNaaLaaha
சென்று போயிற்றே ஐயோ
sentru pOyitraE iyyO
மோசம் போனேன் விட்ட நன்மை
mOsam pOnaEn vitta nanmai
அழுதாலும் வருமோ? -ஆத்மா ஒன்றும் 
azhuthaalum varumO

பக்தரே உற்சாகத்தோடு
bakththaraE urchaahaththOdu
எழும்பிப் பிரகாசிப்பீர்
ezhumbi pirahaasippeer
ஆத்துமாக்கள் யேசுவண்டை
aaththumaakkaL yEsuvaNdai
வந்துசேர உழைப்பீர் -ஆத்மா ஒன்றும் 
vanthu sEra uzhappeer


KarththanaE em thuNaiyaaneer | கர்த்தனே எம் துணையானீர்

கர்த்தனே எம் துணையானீர்
karththanaE em thuNaiyaaneer
நித்தமும் எம் நிழலானீர்
niththamum em nizhalaaneer
  கர்த்தனே எம் துணையானீர்

எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
eththanai idar vanthu sErnthaalum
கர்த்தனே அடைக்கல மாயினார்  -2
karththanaE adaikkalamaayinaar
  மனுமக்களில் இவர் போலுண்டோ
  manumakkaLil ivar pOluNdO
  விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே
  viN ulahilum ivar siranthavar

பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
paavi entrennai palar thaLLinaar
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் -2
aavi illai entrihazhnthum vittaar
  ராஜா உம் அன்பு என்னைக் கண்டது
  raajaa um anbu ennai kaNdathu
  உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
  ummai pOl iyya engu kaNdathillai

சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
sutraththaarum kaalaththil kuLirnthittaar
நம்பினோரும் எதிராக வந்திட்டார் -2
nambinOrum yethiraaha vanthittaar
  கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
  koLhai kooriyaE palar pirinthittaar
  ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
  iyyaa ummai pOl naan engum kaNdathillai

ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
aayiram naavuhaL neer thanthaalum
ராஜனே, உம்மைப் பாடக்கூடுமோ -2
raajanaE ummai paadak koodumO
  ஜீவனை  உமக்களிக்கின்றேனே
  jeevanai umakkaLikkintraEnaE
  உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
  ummai pOl iyyaa engum kaNdathillai


Karththar ennai visaarippavar | கர்த்தர் என்னை விசாரிப்பவர்

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
karththar ennai visaarippavar
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
karththar ennai aatharippavar     (2)
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
karththar ennai uyarththubavar
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.
karththar ennai thappuvippavar

பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
peyarai solli kooppittu ennai
அவர் நித்தம் நடத்திச் செல்வதால் -2
avar niththam nadaththi selvathaal
  எந்தன் கவலை பாரத்தை முற்றும்
  enthan kavalai paaraththai mutrum
  அவர் மீது வைத்திடுவேன் நான். -2 -கர்த்தர் என்னை
  avar meethu vaiththiduvaEn naan

தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
dEvan enthan patchaththil irukka
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்? -2
manithan enakku enna thaan seiyvaan
  எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
  enthan kaNNeerai tham thuruththiyil
  அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ. -2 -கர்த்தர் என்னை
  avarin kaNakkil vaiththuLLaar allO

வலது கரத்தைப் பிடித்து என்னையும்
valathu karaththai pidiththu ennaiyum
உனது துணை நான் என்று சொல்லி -2
unathu thuNai naan entru solli
  வழக்காடுவோர் அனைவரையுமே
  vazhakkaaduvOr anaivaraiyumaE
  வெட்கப்பட்டு போகச் செய்வாரே. -2 -கர்த்தர் என்னை
  vetkappattu pOha seiyvaaraE

தேவன் தமது ஐசுவரியத்தினால்
dEvan thamathu isuvariyaththinaal
எந்தன் குறைகளை எல்லாமே -2
enthan kuraihaLai ellaamaE
  கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
  kiristhu yEsuvukkuL mahimaiyil
  நிறைவாக்குவாரே கவலை ஏன்? -2-கர்த்தர் என்னை
  niraivaakkuvaaraE kavalai yEn



Kattappatta manitharellaam | கட்டப்பட்ட மனிதரெல்லாம்

கட்டப்பட்ட மனிதரெல்லாம்
kattappatta manitharellam
கட்டவிழ்க்கப்பட வேண்டும் -2
kattavizhkkappada vENdum
  காயப்பட்ட மனிதரெல்லாம் கல்வாரி வர வேண்டும்
  kaayappatta manitharellaam kalvaari vara vENdum
  கர்த்தர் உம்மை காண வேண்டும்  -2 -கட்டப்பட்ட 
   karththar ummai kaaNa vENdum 
எழுப்புதல் தீ பரவட்டுமே
yezhupputhal thee paravattumaE
எங்கும் பற்றி எரியட்டுமே -2
engum patri yeriyattumaE
   எங்கும் பற்றி எரியட்டுமே -கட்டப்பட்ட
  engum patri yeriyattumaE

அறியாமை இருள் விலகி
ariyaamai iruL vilahi
அதிசய தேவனை  காண வேண்டும் -2
athisaya dEvanai kaaNa vENdum
  அதிசய தேவனை  காண வேண்டும் -கட்டப்பட்ட
  athisaya dEvanai kaaNa vENdum
பாவங்கள் சாபங்கள்
paavangaL saabangaL
பாரத தேசத்தில் மறைய வேண்டும் – எங்கள்
baaratha dEsaththil maraiya vENdum
  பாரத தேசத்தில் மறைய வேண்டும் -கட்டப்பட்ட
   baaratha dEsaththil maraiya vENdum
இமயம் முதல் குமரி வரை – என்
imayam muthal kumari varai -en
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் -2
yEsuvin raththam paaya vENdum
  இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் -கட்டப்பட்ட
  yEsuvin raththam paaya vENdum
உண்மையான ஊழியர்கள்
uNmaiyaana oozhiyarhaL
உலகம் எங்கும் செல்ல வேண்டும் -2
ulagam engum sella vENdum
  உலகம் எங்கும் செல்ல வேண்டும் -கட்டப்பட்ட
  ulagam engum sella vENdum
சபைகளெல்லாம் தூய்மையாகி
sabaihaLellaam thooimaiyaahi
சாட்சி வாழ்வு வாழ வேண்டும் -2
saatchi vaazhvu vaazha vENdum
  சாட்சி வாழ்வு வாழ வேண்டும் -கட்டப்பட்ட
  saatchi vaazhvu vaazha vENdum


Kirisththava illaramaE | கிறிஸ்தவ இல்லறமே

கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்
kiristhava illaramaE -siranthida
கிருபை செய்வீர், பரனே!
kirubai seiyveer paranaE

பரிசுத்த மரியன்னை, பாலன் இயேசு , யோசேப்புப்
parisuththa mariyannai paalan yaEsu yOsEppu
பண்பாய் நடத்தி வந்த இன்பக் குடும்பம்போல — கிறிஸ்தவ
paNbaai nadaththi vantha inbak kudumbam pOla

ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
jebamennum thoobamaE thinam vaanam yEravum
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
thiru vEda vaakkiyam sevihaLil kEtkavum
சுப ஞானக் கீர்த்தனை துத்தியம் பாடவும்,
suba gnana keerththanai thooththiyam paadavum
சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ
suthanaEsu thalaimaiyil thooya veedaahavum

ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
oozhiyam puriyavum oothiyam virumbaamal
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
uvantha beththaaniyaa oorin kudumbam pOla
நாளும் இயேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
naaLum yEsu piraanai nal virunthaaLiyaakki
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ
naadiyavar paathaththil koodiyamarnthu kEttu

அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
anbOdaaththuma thaaham ariya parObahaaram
அருமையாக நிறைந்த அயலார்க் கொளி விளக்காய்த்,
arumaiyaaha niraintha ayalaark koLi viLakkaai
துன்பஞ் செய்கிற பல தொத்து வியாதிகளைத்,
thunbanj seiyhira pala thoththu viyaathihaLai
தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து — கிறிஸ்தவ
thooranth thuraththum vahai sollu sEvaiyai seiythu

மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
malaiyathin mEluLLa maaLihaiyaip pOlavaE
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
matravarhaLukku mun maathiriyaai nintru
கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
kalai udai uNavilum kalvi muyarchchiyilum
கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் — கிறிஸ்தவ
karththaruk kEtra parisuththa kudumbamaaha



Kiristhuvin sEnai veerarhaL naam | கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம்

கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும்
kiristhuvin sEnai veerarhaL naam entrum
கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம்
kiristhuvukkaai sEvai seiythiduvOm
உயர்விலும் தாழ்விலும் காட்டிலும், நாட்டிலும்
uyarvilum thaazhvilum kaattilum naattilum
உன்னதர் படையில் பணிபுரிவோம்
unnathar padaiyil paNipurivOm

இறைமகன் இயேசு வாழ்க, வாழ்க
iraimahan yEsu vaazhha vaazhha
அதிசயமானவர் வாழ்க வாழ்க
athisayamaanavar vaazhha vaazhha
வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க
vallamaiyuLLavar vaazhha vaazhha
மரித்துயிர்த் தெழுந்தாரே
mariththuyirth thezhunthaaraE

சத்திய கச்சையை அரையினில் கட்டியே
saththiya kachchaiyai araiyinil kattiyaE
நீதியின் மார்க்கவசம் தரிப்போம்
neethiyin maarkkavasam tharippOm
ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே
aayaththa paatharatchaiyai thoduththaE
விசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன்
visuvaasa kEdahaththai pidippOm

ரட்சண்ய தலைச்சீராவை அணிந்து
ratchaNya thalai cheeraavai aNinthu
வசனத்தின் பட்டயத்தை எடுப்போம்
vasanaththin pattayaththai yeduppOm
சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்
sarvaayuthaththai aNintha veerar naam
இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் – இறைமகன்
yEsuvukkaai yuththam seiythiduvOm

வாழ்க வாழ்க வாழ்க (2)
vaazhha vaazhha vaazhha
வாழ்க நீர் வாழ்க உம்  நாமம் வாழ்க
vaazhha neer vaazhha um naamam vaazhha
உம் புகழ் வாழ்க, என்றென்றும் வாழ்க
um puhazh vaazhha entrentrum vaazhha



KumbiduhiraEn naan kumbiduhiraEn | கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
kumbiduhiraEn naan kumbiduhiraEn -engaL
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்
guru vEsu naathar paatham kumbiduhiraEn

அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை
ambuvi padaiththavanai kumbiduhiraEn -enai
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
aaNdavanai meeNdavanai kumbiduhiraEn

நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் – பவ
nambumadi yaarkkaruLai kumbiduhiraEn -pava
நாசனைக் க்ருபாசகனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
naasanai kirupaasahanai kumbiduhiraEn

தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் – நித்திய
thampamenak kaanavanai kumbiduhiraEn -niththiya
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
saruva thayaaparanai kumbiduhiraEn

உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்
umbar thozhum vasthuvaiyaE kumbiduhiraEn -thonith
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் — கும்பிடுகிறேன் 
Osanna Osannaa ventru kumbiduhiraEn

ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
oraE saru vEsuranai kumbiduhiraEn -ontrum
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
oppillaatha meipporuLai kumbiduhiraEn

திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் – தவிது
thiru uruvaanavanai kumbiduhiraEn -thavithu
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
simmaasanaathipanai kumbiduhiraEn

குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்
guruvena vanthavanai kumbiduhiraEn -yuthar
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் -கும்பிடுகிறேன் 
guru kula vEnthanai kumbiduhiraEn

அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் – என
arumai ratchahanai kumbiduhiraEn -ena
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் — கும்பிடுகிறேன் 
thaaththumaavin nEsarthanai kumbiduhiraEn




KuyavanaE kuyavanaE | குயவனே குயவனே

குயவனே குயவனே 
kuyavanaE kuyavanaE 
படைப்பின் காரணனே
padaippin kaaraNanaE                (2)
களிமண்ணான என்னையுமே 
kaLimaNNaana ennaiyumaE 
கண்ணோக்கி பார்த்திடுமே
kaNNOkki paarththidumaE

வெறுமையான பாத்திரம் நான்
verumaiyaana paaththiram naan
வெறுத்து தள்ளாமலே
veruththu thaLLaamalaE               (2)
நிரம்பி வழியும் பாத்திரமாய்
nirambi vazhiyum paaththiramaai
விளங்கச் செய்திடுமே 
viLanga seiythidumaE
  வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
   vEthaththil kaaNum paaththiram ellaam
  இயேசுவை போற்றிடுதே
  yEsuvai pOtriduthaE
  என்னையும் அவ்வித பாத்திரமாய் 
  ennaiyum avvitha paaththiramaai 
  வனைந்து கொள்ளுமே -குயவனே,
  vanainthu koLLumaE

விலைபோகாத பாத்திரம் நான்
vilai pOhaatha paaththiram naan
விரும்புவார் இல்லையே
virumbuvaar illaiyaE                   (2)
விலையில்லா உம் கிருபையால் 
vilaiyillaa um kirubaiyaal
உகந்ததாக்கிடுமே
uhanthathaakkidumaE
  தடைகள் யாவும் நீக்கி என்னைத்
  thadaihaL yaavum neekki ennai
  தம்மைப்போல் மாற்றிடுமே
  thammai pOl maatridumaE
  உடைத்து என்னை உந்தனுக்கே 
  udaiththu ennai unthanukkaE
  உடைமையாக்கிடுமே-குயவனே,
  udaimaiyaakkidumaE

மண்ணாசையில் நான் மயங்கினேன் 
maNNaasaiyil naan mayanginaEn
மெய்வழி விட்டகன்றேன்
meivazhi vittahantraEn                  (2)
கண்போன போக்கை பின்பற்றினேன்  
kaN pOna pOkkai pinpatrinaEn
கண்டேன் இல்லை இன்பமே
kaNdaEn illai inbamaE
  காணாமல் போன பாத்திரம் என்னைத்
  kaaNaamal pOna paaththiram ennai
  தேடிவந்த தெய்வமே
  thEdi vantha deivamaE
  வாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும் 
  vaazhnaaLellaam um paatham sErum
  பாதையில் நடத்திடுமே-குயவனே,
  paathaiyil nadaththidumaE




KuyavanaE um kaiyil | குயவனே உம் கையில்

குயவனே உம் கையில் களிமண் நான்
kuyavanaE um kaiyil kaLimaN naan
உடைத்து உருவாக்கும் -2
udaiththu uruvaakkum
  என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
  en siththam alla um siththam naathaa
  தருகிறேன் உம் கையிலே -2
  tharuhiraEn um kaiyilaE

என்னைத் தருகிறேன் தருகிறேன் 
ennai tharuhiraEn tharuhiraEn 
உம் கரத்தில்
um karaththil  
 
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன்        (2)
ennai padaikkiraEn padaikkiraEn
உம் பாதத்தில்
um paathaththil
  உருவாக்குமே என்னை உருவாக்குமே -2
  uruvaakkumaE ennai uruvaakkumaE

உம் சேவைக்காய்  என்னைத்  தருகிறேன்
um sEvaikkaai ennai tharuhiraEn
வனைந்திடும் உம் சித்தம் போல் -2
vanainthidu um siththam pOl
  எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட -2
  enakkaaha vaazhaamal umakkaaha vaazhnthida
உருவாக்குமே என்னை உருவாக்குமே
uruvaakkumaE ennai uruvaakkumaE

உமக்காகவே நான் வாழ்ந்திட
umakkaahavaE naan vaazhnthida
வனைந்திடும் உம் சித்தம் போல் -2
vanainthidum um siththam pOl 
  உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே -2
  um siththam seiythidavaE um saththam kEttidavaE
உருவாக்குமே என்னை உருவாக்குமே
uruvaakkumaE ennai uruvaakkumaE


Kadanthu vantha paathaihaLai | கடந்து வந்த பாதைகளை

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
kadanthu vantha paathaihaLai thirumbi paarkkiraEn
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
kaNNeerOdu karththaavaE nantri solhiraEn
  நன்றி சொல்கிறேன்- நான் 
  nantri solhiraEn

  அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி -2
  appaa umakku nantri raaja umakku nantri

அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா -2
anaathaiyaai alainthaE naan thirinthaEn iyya
  அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா -2 -அப்பா உமக்கு
  azhaathaE entru solli aNaiththeer iyyaa

எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே -2
yethiraai vantha soozhchchihaLai muriyadiththeeraE
  எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே -2 -அப்பா உமக்கு
  entha nilaiyilum ummai thuthikka vaiththeeraE

பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே -2
paaduhaLai sumanthu sella belan thantheeraE
  பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே -2 -அப்பா உமக்கு
  parisuththamaai vaazhvu vaazha thuNai seiytheeraE

ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர் -2
oru naaLum kuraivillaamal uNavu thantheer
  உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர் -2 -அப்பா உமக்கு
  uraividamum udaiyum thanthu kaaththu vantheer


Karththarukku kaaththiruppOr(kaaththiruppaEn) | கர்த்தருக்குக் காத்திருப்போர்(காத்திருப்பேன்)

கர்த்தருக்குக் காத்திருப்போர்
karththarukku kaaththiruppOr
வெட்கப்பட்டு போவதில்லை
vetkappattu pOvathillai          (2)
நிச்சயமாய் முடிவு உண்டு
nichchayamaai mudivu uNdu
நம்பிக்கை வீண் போகாது
nambikkai veeN pOhaathu

காத்திருப்பேன் காத்திருப்பேன்
kaaththiruppaEn kaaththiruppaEn
அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2
arputhangaL perum varai kaaththiruppaEn

குறித்த காலத்திலே
kuriththa kaalaththilaE
தரிசனம் நிறைவேற்றுவார் – 2
tharisanam niraivEtruvaar
  பொய் சொல்லாது நிச்சயம் வரும்
  poi sollaathu nichchayam varum
  தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2 -காத்திருப்பேன்
  thaamathiththaalum atharkaai kaaththiruppaEn

அனைத்தையும் இழந்தாலும்
anaiththaiyum izhanthaalum
உறவுகள் பிரிந்தாலும் -2
uravuhaL pirinthaalum
  அழைத்தவரோ உண்மையுள்ளவர்
  azhaiththavarO uNmaiyuLLavar
  சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் -2 -காத்திருப்பேன்
  suha vaazhvai seekkiram thuLirkka seiyvaar

விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
viduthalai kaaNum varai
முழங்காலில் காத்திருப்பேன் -2
muzhangaalil kaaththiruppaEn
  பெலப்படுவேன் எழும்பிடுவேன்
  belappaduvaEn yezhumbiduvaEn
  கழுகைப்போல உயர பறந்திடுவேன் -2 -காத்திருப்பேன்
  kazhuhaip pOla uyara paranthiduvaEn




Ummai pOl yaaruNdu | உம்மைப் போல் யாருண்டு

         1                   1       
உம்மைப் போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா
ummai pOl yaaruNdu? enthan yEsunaatha
        6               5         1
இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு?
intha paarthalaththil ummai pOl yaaruNdu
         1              5   
  பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
  paavappidiyinil sikki naan uzhantraEn
        1        5       5
  தேவா தம் அன்பினால் மன்னித்தீர் 
  dEva tham anbinaal manniththeer
      4    2        6       4
  பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
  paavappidiyinil sikki naan uzhantraEn
        6      4         1
  தேவா தம் அன்பினால் மன்னித்தீர் 
  dEva tham anbinaal manniththeer

 உலகம், மாமிசம், பிசாசுக்கடியில் 
ulaham maamisam pisaasukkadiyil
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
adimaiyaahavaE paavi naan jeeviththaEn
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
nimmathi izhanthaEn thooymaiyai maranthaEn
மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன்
manam pOl nadanthaEn yEmaatram adainthaEn
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
ennaiyaa thEdineer iyya yEsu naatha
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
ummai marantha Or thrOhi naan
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
ennaiyaa thEdineer iyya yEsu naatha
அடிமை உமக்கே இனி நான். -உம்மைப் 
adimai umakkaE ini naan

இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை
intraikku naan seiyum intha theermaanaththai
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
entraikkum kaaththida aaviyaal nirappum
நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்
norukkum urukkum udaiyum vanaiyum
உமக்கே உகந்த தூய சரீரமாய்
umakkaE uhantha thooya sareeramaai
ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
ImporihaLaiyum umakkuL adakkum
இயேசுவே ஆவியால் நிரப்பும்
yEsuvaE aaviyaal nirappum
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ
vetri vaazhkaiyuLLa mahanaai thihazha
அக்கினி என் உள்ளம் இறக்கும் -உம்மைப் 
akkini en uLLam irakkum

 வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
veettilum oorilum sellumidamengum
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
sOthanai vanthidil karthaa neer kaaththidum
மேசியா வருகை வரையில் பலரை
mEsiya varuhai varaiyil palarai
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
siluvai karuhil azhaikka yEvidum
முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய
muzhangkaalil nirka vEthaththai ariya
தினந்தோறும் தேவா உணர்த்தும்
thinanthOrum dEva uNarththum
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
umakkum enakkum idaiyil yethuvum
என்றுமே வராமல் காத்திடும் -உம்மைப் 
entrumaE varaamal kaaththidum




Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)