Showing posts with label Emil Jebasingh. Show all posts
Showing posts with label Emil Jebasingh. Show all posts

Athisayamaana oLimaya naadaam | அதிசயமான ஒளிமய நாடாம்

அதிசயமான ஒளிமய நாடாம்

athisayamaana oLimaya naadaam

  நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் -2

  nEsarin naadaam -naan vaanjikkum naadaam


பாவம் இல்லாத நாடு

paavam illaatha naadu

ஒரு சாபமும் காணா நாடு – 2

oru saabamum kaaNaa naadu

  நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்

  niththiya mahizhchchi Oyaatha keetham

  உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா -அதிசயமான

  unnathaththil Osannaa -allEluyah


சந்திர சூரியன் இல்லை ஆனால்

santhira sooriyan illai aanaal

இருள் ஏதும் காணவில்லை – 2

iruL yEthum kaaNa villai

  தேவகுமாரன் ஜோதியில் ஜோதி

  dEva kumaaran jOthiyil jOthi

  நித்திய வெளிச்சமவர் – என்றும் பகல் -அதிசயமான

  niththiya veLichchamaavaar -entrum pahal


விதவிதக் கொள்கையில்லை

vitha vitha koLkaiyillai

பலப்பிரிவுள்ள பலகை இல்லை – 2

palap pirivuLLa palahai illai

  ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்

  oraE oru kudumbam oraE oru thalaivar

  எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும் -அதிசயமான

  engumaE anbumayam -anbuLLOr sellum


பிரச்சனை ஏதும் இல்லை

pirachchannai yEthum illai

வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை – 2

veeN kuzhappangaL ontrum illai

  மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்

  mozhi niram jaathi patru udaiyOr

  எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி -அதிசயமான

  yevarumaE angu illai -anbaE mozhi


பல பல திட்டம் இல்லை

pala pala thittam illai

ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை – 2

aaLum sattangkaL yEthum illai

  காவல் துறையில்லை கண்டிப்பும் இல்லை

  kaaval thuraiyillai kaNdippum illai

  மனிதனின் ஆட்சியில்லை – பேரானந்தமே -அதிசயமான

  manithanin aatchiyillai -pEraananthamaE


கடைத்தெரு ஏதும் இல்லை

kadaitheru yEthum illai

தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை – 2

thoLirsaalaihaL ontrum illai

  தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர்

  thariththirar selvar siriyavar periyOr

  ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம் -அதிசயமான

  aahiya sirappum illai -ellaam samam


இயேசுவின் இரத்ததினால்

yEsuvin raththaththinaal

பாவம் கழுவினால் செல்லலாமே – 2

paavam kazhuvinaal sellalaamaE

  இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்

  iththanai periya silaakkiyam izhappOr

  இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் -அதிசயமான

  ippoomiyil yevarum vENdaam -intraE vaareer



azhagaai nirkum yaar ivarhaL | அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
azhagaai nirkum yaar ivarhaL
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
thiraLaai nirkum yaar ivarhaL
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
sEnaith thalaivaraam yEsuvin potraLaththil
  அழகாய் நிற்கும் யார் இவர்கள்? -2
  azhahaai nirkum yaar ivarhaL

ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ
oru thaalanthO reNdu thaalanthO
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
Inthu thaalanthO ubayOhiththOr
சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி
sirithaanathO perithaanathO petra paNi
செய்து முடித்தோர் – அழகாய்
seiythu mudiththOr

காடு மேடு கடந்த சென்று
kaadu mEdu kadanthu sentru
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
karththar anbai pahirnthavarhaL
உயர்வினிலும் தாழ்வினிலும்
uyarvinilum thaazhvinilum
ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய்
ookkamaaha jebiththavarhaL

தனிமையிலும் வறுமையிலும்
thanimaiyilum varumaiyilum
லாசரு போன்று நின்றவர்கள்
laasaru pOntru nintravarhaL
யாசித்தாலும், போஷித்தாலும்
yaasiththaalum pOshiththaalum
விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய்
visuvaasaththai kaaththavarhaL

எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
ellaa jaathiyaar ellaa kOththiram
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
ellaa mozhiyum pEsum makkaLaam
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
siluvaiyin keezh yEsu raththaththaal
சீர் போராட்டம் செய்து முடித்தோர் – அழகாய்
seer pOraattam seiythu mudiththOr

வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
veLLai angiyai thariththuk koNdu
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
veLLai kuruththaam Olai pidiththu
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
aarpparippaar singaasanam munbu
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று – அழகாய்
aattukkuttikkaE mahimaiyentru

இனி இவர்கள் பசி அடையார்
ini ivarhaL pasi adaiyaar
இனி இவர்கள் தாகமடையார்
ini ivarhaL thaahamadaiyaar
வெயிலாகிலும், அனலாகிலும்
veyilaahilum analaahilum
வேதனையை அளிப்பதில்லை – அழகாய்
vEthanaiyai aLippathillai

ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
aattukkutti thaan ivar kaNNeerai
அற அகற்றித் துடைத்திடுவார்
ara ahatri thudaiththiduvaar
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
azhaiththu selvaar inba ootrukkaE
அள்ளிப் பருக இயேசு தாமே – அழகாய்
aLLi paruha yEsu thaamaE



IruL soozhum kaalam | இருள் சூழும் காலம்

இருள் சூழும் காலம் இனி வருதே
iruL soozhum kaalam ini varuthaE
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
aruL uLLa naatkaL bayanpaduththum
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
thiravuNda vaasal adaipadumun
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
norunguNda manathaai mun selvOr yaar

திறவுண்ட வாசல் அடைபடுமுன்
thiravuNda vaasal adaipadu mun
நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?
norunguNda manathaai mun selvOr yaar
  நாட்கள் கொடியதாய் மாறிடுதே
  naatkaL kodiyathaai maariduthaE
  காலத்தை ஆதாயம் செய்திடுவோம் -2
  kaalaththai aathaayam seiythiduvOm

தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
tharisu nilangaL anEgam uNdu
தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
tharisanam petrOr neer mun varuveer
பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
parisaaha yEsuvai avarhaLukkum
அளித்திட அன்பால் எழுந்து செல்வீர் -திறவுண்ட
aliththida anbaal ezhunthu selveer

எத்தனை நாடுகள் இந்நாட்களில்
eththanai naaduhaL innatkaLil
கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
karththarin paNikkuththaan kathavadaiththaar
திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
thirantha vaasal intru unakkethiril
பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் -திறவுண்ட
bayanpaduththum makkaL gnanavaanhaL

விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
visuvaasihaL yenum koottam uNdu
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
anbu ontraE avar naduvil uNdu
ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டு
oru manam otrumai angu uNdu
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் -திறவுண்ட
entru sollum naatkaL intru vENdum

இனிவரும் நாட்களில் நமது கடன்
ini varum naatkaLil namathu kadan
வெகு அதிகம் விசுவாசிகளே
vegu athigam visuvaasihaLaE
நம்மிடை உள்ள ஐக்கியமே
nammidai uLLa ikkiyamaE
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே -திறவுண்ட
vetriyum thOlviyum aakkidumaE

இயேசுவே எங்கள் உள்ளங்களை
yEsuvaE engaL uLLangaLai
அன்பெனும் ஆவியால் நிறைத்திடுமே
anbenum aaviyaal niraiththidumaE
இந்தியாவின் எல்லாத் தெருக்களிலும்
indhiyaavin ellaath therukkaLilum
இயேசுவின் நாமமும் விரைந்திடுமே -திறவுண்ட
yEsuvin naamamum virainthidumaE


Jeevikkiraar Yesu Jeevikkiraar | ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
jeevikkiraar yEsu jeevikkiraar
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
ennuLLaththil avar jevikkiraar
துன்பத்தில் என் நல் துணை அவரே
thunbaththil en nal thuNai avaraE
என்றென்றும் ஜீவிக்கிறார்
entrentrum jeevikkiraar

செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
sengadal avar solla reNdaai nintrathu
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
perungkOttai ontru tharaimattamaanathu
அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது
avar solla kurudanin kaNthiranthathu
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் -ஜீவிக்கிறார் 
avar thoda kushtarOhi suththamaayinaan

உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
ummai entrum vidaamal naan thodaravaE
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
ennai entrum vidaamal neer pidikkavaE
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
naan marikkum nEraththil paralOhaththil
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே-ஜீவிக்கிறார் 
um veettaik kaattum nalla mEipparaE


Karththarai thuthiyungaL | கர்த்தரைத் துதியுங்கள்

கர்த்தரைத் துதியுங்கள்
karththarai thuthiyungaL
அவர் கிருபை என்றுமுள்ளது
avar kirubai entrumuLLathu
தேவாதி தேவனை துதியுங்கள்
dEvaathi dEvanai thuthiyungaL
அவர் கிருபை என்றுமுள்ளது
avar kirubai entrumuLLathu

இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
immattum nadaththinaar thuthiyungaL
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
avar kirubai entrumuLLathu
  இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
  inimElum nadaththuvaar thuthiyungaL
  அவர் கிருபை என்றுமுள்ளது – 2 -கர்த்தரைத்
  avar kirubai entrumuLLathu

இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
immattum thaanginaar thuthiyungaL
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
avar kirubai entrumuLLathu
  இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
  inimElum thaanguvaar thuthiyungaL
  அவர் கிருபை என்றுமுள்ளது – 2 -கர்த்தரைத்
  avar kirubai entrumuLLathu

இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
immattum paathukaaththaar thuthiyungaL
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
avar kirubai entrumuLLathu
  இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
  inimElum paathukaappaar thuthiyungaL
  அவர் கிருபை என்றுமுள்ளது – 2 -கர்த்தரைத்
  avar kirubai entrumuLLathu

நம்பினால் கைவிடார் துதியுங்கள்
nambinaal kaividaar thuthiyungaL
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
avar kirubai entrumuLLathu
  ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
  jebiththaal jeyam uNdu thuthiyungaL
  அவர் கிருபை என்றுமுள்ளது – 2 -கர்த்தரைத்
  avar kirubai entrumuLLathu


MahizhvOm mahizhvOm | மகிழ்வோம் மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
mahizhvOm mahizhvOm thinam ahamahizhvOm
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
yEsu raajan nam sonthamaayinaar
  இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
  intha paarthalaththin sonthakkaarar avar 
  எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் -2
  enthan uLLaththin sonthamaanaar

ஆ… ஆனந்தமே பரமானந்தமே
aa.. aananthamaE paramaananthamaE
இது மாபெரும் பாக்கியமே… -இந்த 
ithu maa perum paakkiyamaE

சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்
chinnanj chiru vayathil ennai kuriththu vittaar
தூரம் போயினும் கண்டு கொண்டார் -2
thooram pOyinum kaNdu koNdaar
  தமது ஜீவனை எனக்கும் அளித்து
  thamathu jeevanai enakkum aLiththu
  ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் -2 -ஆ… ஆனந்தமே 
  jeevan petrukkoL entruraiththaar

எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
entha soozhnilaiyum avar anbinintru
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார் -2
ennai pirikkaathu kaaththu koLvaar
  என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
  ennai nambi avar thantha poruppathanai
  அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் -2 -ஆ… ஆனந்தமே 
  avar varum varai kaaththuk koLvaEn

அவர் வரும் நாளிலே என்னை கரம் அசைத்து
avar varum naaLilaE ennai karam asaiththu
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார் -2
anbaai kooppittu sErththuk koLvaar
  அவர் சமுகமதில் அங்கே அவருடனே
  avar samuhamathil angaE avarudanaE
  ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்-2 -ஆ… ஆனந்தமே 
  aadip paadiyaE mahizhnthiduvaEn


Uththamamaai mun sella | உத்தமமாய் முன் செல்ல

உத்தமமாய் முன் செல்ல 
uththamamaai mun sella
உதவி செய்யும் யெகோவா
uthavi seiyum yEhOvaa
ஊக்கமதைக் கைவிடாமல் 
ookkamathai kaividaamal
காத்துக் கொள்ள உதவும் 
kaaththuk koLLa uthavum

பலவிதமாம் சோதனைகள் 
palavithamaam sOthanaihaL
உலகத்தில் எமை வருத்தும்
ulahaththil emi varuththum
சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் 
saaththaanin akkini aasthirangaL
எண்ணா நேரத்தில் தாக்கும் 
eNNaa nEraththil thaakkum

தீர்மானங்கள் தோற்கா வண்ணம் 
thermaanangal thOrkaa vaNNam
காத்துக் கொள்ள உதவும்
kaaththuk koLLaa uthavum
நேர்மையாக வாக்கைக் காக்க 
nErmaiyaaha vaakkai kaakka
வழி வகுத்தருள வேண்டும் 
vazhi vahuththaruLa vENdum

இவ்வுலக மாயாபுரி 
ivvulaha maayaapuri
அழியப்போவது நிச்சயம்
azhiyap pOvathu nichchayam
இரட்சகனே நீர் இராஜாவாக 
ratchakanaE neer raajaavaaha
வருவது அதி நிச்சயம் 
varuvathu athi nichchayam

தூதருடன் பாடலோடு 
thootharudan paadalOdu
பரலோகில் நான் உலாவ
paralOhil naan ulaava
கிருபை செய்யும் இயேசு தேவா 
kirubai seiyum yEsu dEva
உண்மை வழி காட்டியே 
uNmai vazhi kaattiyaE

Urakkam theLivOm | உறக்கம் தெளிவோம்

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
urakkam theLivOm urchaagam koLvOm
உலகத்தின் இறுதி வரை
ulahaththin iruthi varai                        (2)
கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்
kalvaari thoni thaan mazhai maari pozhiyum
நாள்வரை உழைத்திடுவோம்!
naaL varai uzhaththiduvOm

அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
asuththam kaLaivOm anbai azhaippOm
ஆவியில் அனலும் கொள்வோம்
aaviyil analum koLvOm
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
avar padai jeyikka nammidai karuththu
வேற்றுமையின்றி வாழ்வோம்! -உறக்கம் தெளிவோம் 
vEtrumai yintri vaazhvOm

அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
achcham thavirppOm thairiyam koLvOm
சரித்திரம் சாட்சி கூறும்
sariththiram saatchi koorum
இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
raththa saatchihaL nammidai thOntri
நாதனுக்காய் மடிவோம்! -உறக்கம் தெளிவோம் 
naathanukkaai madivOm

கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்
kiristhuvukkaaha izhanthavar yevarum
தரித்திரர் ஆனதில்லை
thariththirar aanathillai
இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
raajjiya mEnmaikkaai kashtam adainthOr
நஷ்டப்பட்டதில்லை! -உறக்கம் தெளிவோம் 
nashtappattathillai

உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
uyir peruveer ontru kooduveer
உலர்ந்த எலும்புகளே
ularntha yelumbuhalaE
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
neengaL ariyaa oruvar ungaL
நடுவில் வந்துவிட்டார் -உறக்கம் தெளிவோம் 
naduvil vanthu vittaar

Ummai pOl yaaruNdu | உம்மைப் போல் யாருண்டு

         1                   1       
உம்மைப் போல் யாருண்டு? எந்தன் இயேசுநாதா
ummai pOl yaaruNdu? enthan yEsunaatha
        6               5         1
இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு?
intha paarthalaththil ummai pOl yaaruNdu
         1              5   
  பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
  paavappidiyinil sikki naan uzhantraEn
        1        5       5
  தேவா தம் அன்பினால் மன்னித்தீர் 
  dEva tham anbinaal manniththeer
      4    2        6       4
  பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
  paavappidiyinil sikki naan uzhantraEn
        6      4         1
  தேவா தம் அன்பினால் மன்னித்தீர் 
  dEva tham anbinaal manniththeer

 உலகம், மாமிசம், பிசாசுக்கடியில் 
ulaham maamisam pisaasukkadiyil
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
adimaiyaahavaE paavi naan jeeviththaEn
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
nimmathi izhanthaEn thooymaiyai maranthaEn
மனம்போல் நடந்தேன், ஏமாற்றம் அடைந்தேன்
manam pOl nadanthaEn yEmaatram adainthaEn
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
ennaiyaa thEdineer iyya yEsu naatha
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
ummai marantha Or thrOhi naan
என்னையா தேடினீர் ஐயா, இயேசு நாதா?
ennaiyaa thEdineer iyya yEsu naatha
அடிமை உமக்கே இனி நான். -உம்மைப் 
adimai umakkaE ini naan

இன்றைக்கு நான் செய்யும் இந்த தீர்மானத்தை
intraikku naan seiyum intha theermaanaththai
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
entraikkum kaaththida aaviyaal nirappum
நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும்
norukkum urukkum udaiyum vanaiyum
உமக்கே உகந்த தூய சரீரமாய்
umakkaE uhantha thooya sareeramaai
ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
ImporihaLaiyum umakkuL adakkum
இயேசுவே ஆவியால் நிரப்பும்
yEsuvaE aaviyaal nirappum
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய்த் திகழ
vetri vaazhkaiyuLLa mahanaai thihazha
அக்கினி என் உள்ளம் இறக்கும் -உம்மைப் 
akkini en uLLam irakkum

 வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
veettilum oorilum sellumidamengum
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
sOthanai vanthidil karthaa neer kaaththidum
மேசியா வருகை வரையில் பலரை
mEsiya varuhai varaiyil palarai
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
siluvai karuhil azhaikka yEvidum
முழங்காலில் நிற்க, வேதத்தை அறிய
muzhangkaalil nirka vEthaththai ariya
தினந்தோறும் தேவா உணர்த்தும்
thinanthOrum dEva uNarththum
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
umakkum enakkum idaiyil yethuvum
என்றுமே வராமல் காத்திடும் -உம்மைப் 
entrumaE varaamal kaaththidum




ULLaththil avar paal | உள்ளத்தில் அவர்பால்

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
uLLaththil avar paal pEranbuLLOrellaam
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
eNNaththil theLivaip peruveer
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
sollathil kooruveer vaazhvathil saathippeer
இயேசு தேடும் நபர் இவரே
yEsu thEdum nabar ivaraE

பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்
paraman pErilaE patruk koNdOrellaam
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
yeLithil purivaar avarin paaraththai 
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
ulahin pErilaE yEsuvin akkarai
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்
thamathaakkiyavar vaazhuvaar maazhuvaar
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
uNmai adiyavar yEsuvai arivaar
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
thammaiyaE avarkkaai aLippaar

தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள்
dEsangaL theevuhaL pala piraanthiyangaL 
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
paavaththaal nirainthu saabamaahirathu
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
thirappin vaayilaE nirkaththakkathaaha
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
dEvan thEdum nadar nammilaE yaar yaarO
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
uNmai adiyavar yEsuvai arivaar
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
thammaiyaE avarkkaai aLippaar

செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு
selvam seer sirappu narkudiyiruppu
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
selvaakku anthasththu padaadObavasththu
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்
yaavaiyum perinum saahaiyil en seiyveer
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
ulahin sambaththu kuppai entraE solveer
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
uNmai adiyavar yEsuvai arivaar
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
thammaiyaE avarkkaai aLippaar


YEsu kiristhuvin nal seedaraahuvOm | இயேசு கிறிஸ்துவின் நல்சீடராகுவோம்

இயேசு கிறிஸ்துவின் நல்சீடராகுவோம்
yEsu kiristhuvin nal seedaraahuvOm
விசுவாசத்தில் முன் நடப்போம்
visuvaasaththil mun nadappOm
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே        
ini ellaarumaE avar paNikkenavaE               (2)
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
ontraai ennaaLum uzhaiththiduvOm

நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரே
nam yaEsu raajaavaE ithO vEham vaaraaraE
அதி வேகமாய் செயல்படுவோம் -2
athi vEhamaai seyalpaduvOm

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
manithar yaaridamum paasam kaattuvOm
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
yaEsu manthaikkuL azhaiththiduvOm
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
athi urchaahamaai athi seekkiramaai
இராஜ பாதையை செம்மையாக்குவோம் -நம் இயேசு 
raaja paathaiyai semmaiyaakkuvOm

சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
saaththaanin sathihaLai thaharththiduvOm
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
ini yEsuvukkaai vaazhnthiduvOm
இந்தப் பார் முழுதும் இயேசு நாமத்தையே
intha paar muzhuthum yaEsu naamaththaiyaE
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் -நம் இயேசு 
ellaa oorilum yeduththuraippOm

ஆவி ஆத்துமா தேகம் அவர் பணிக்கே
aavi aaththuma dEham avar paNikkaE
இனி நான் அல்ல அவரே எல்லாம்
ini naan alla avaraE ellaam
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
ena mudivu seiythOm athil nilaiththiruppOm
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் -நம் இயேசு 
avar naaLinil mahizhnthiduvOm



Parisuththar koottam naduvil | பரிசுத்தர் கூட்டம் நடுவில்

பரிசுத்தர் கூட்டம் நடுவில்          
parisuththar koottam naduvil
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
joliththidum suththa jOthiyaE
  அரூபியே இவ்வேளையில்
  arubiyaE ivvELaiyil
 அடியார் நெஞ்சம் வாரீரோ -2
  adiyaar nenjam vaareerO

சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
suththam virumbum suththa jOthiyaE
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே -2
virumbaa asuththam yaavum pOkkumaE
  பாவி நீச பாவி நானையா
  paavi neesa paavi naanaiyaa
  தேவா இரக்கம் செய்யமாட்டீரோ -2 - பரிசுத்தர்
  dEvaa irakkam seiyya maatteerO -2 -parisuththar

மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
meen kEttaal paambai aruLvaar uNdO
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ? -2
kal thinna kodukkum petrOr uNdO
  பொல்லாதோர் கூட செய்திடார்
  pollaathOr kooda seythidaar
  நற்பிதா நலம் அருள்வார் -2- பரிசுத்தர்
  narpithaa nalam aruLvaar -2-parisuththar

பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
paarum thanthaiyaE enthan uLLaththai
யாரும் காணா உள் அலங்கோலத்தை -2
yaarum kaaNaa uL alangkOlaththai 
  மனம் நொந்து மருளுகின்றேன்
  manam nonthu maruLuhintraEn
  பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் -2- பரிசுத்தர்
  parisuththam kenjuhintraEn -2-parisuththar

துணை வேண்டும் தகப்பனே உலகிலே
thuNai vENdum thahappanaE ulahilaE
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே -2
ennai yethirkkum sakthihaL pala uNdaE -2
  என் ஜீவன் எல்லையெங்கிலும்
  en jeevan yellai yengilum
  பரிசுத்தம் என எழுதும் -2 - பரிசுத்தர்
  parisuththam yena yezhuthum -2-parisuththar




Jeeviyamae orae jeeviyamae | ஜீவியமே ஒரே ஜீவியமே

ஜீவியமே ஒரே ஜீவியமே
jeeviyamaE oraE jeeviyamaE
அண்ட சராசரம் அனைத்திலுமே
aNda saraasaram anaiththilumaE
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
mEvi vasikkum manithar anaiththum
பூமியில் வாழ்வது ஒரே தரமே – ஜீவியமே
poomiyil vaazhvathu oraE tharamaE - jeeviyamaE

பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
pirappathum irappathum deiva seyal
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
idaiyil iruppathu vaazhkkaiyaahum
இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும்
yaEsuvil saarvathaal parisuththam kaaNum
பரிசுத்தர்  ஆட்சியில் சாட்சி கூறும்
parisuththar aatchiyil saatchi koorum
  இதைவிடில் முடிவது வீழ்ச்சியாகும் -2 - ஜீவியமே
  ithaividil mudivathu veezhchchiyaahum -2 - jeeviyamaE

நித்தம் நம்மைவிட்டுச் செல்வார் பாரீர்
niththam nammai vittu selvaar paareer
அவர் யாவரும் செல்லும் அவ்விடமும் பாரீர்
avar yaavarum sellum avvidamum paareer
அலறலும் புலம்பலும் உடல்தனைக் கீறலும்
alaralum pulambalum udalthanai keeralum
நரகத்தின் தினசரிக் காட்சிக் கேளீர்
narahaththin thinasari kaatchi kELeer
  இரக்கத்தின் வழி காணார் கதியும் காண்பீர் -2 ¬ ஜீவியமே
  irakkaththin vazhi kaaNaar kathiyum kaaNbeer -2 - jeeviyamaE

திறப்பின் முகம் நிற்க ஆட்கள் தேவை
thirappin muham nirka aatkaL thaEvai
தியாகத்தின் பாதைக்குச் செல்வோர் தேவை
thiyaahaththin paathaikku selvOr thaEvai
என் ஜனம் அழியுதே என ஏங்கும் ஆண்டவர்
en janam azhiyuthaE yena yaEngum aaNdavar
துக்கத்தைத் தணிக்கும் சீஷர் தேவை
thukkaththai thaNikkum seeshar thaEvai
  முன்வருவோர் யார்க்கும் இதுவே வேளை -2 - ஜீவியமே
  mun varuvOr yaarkkum ithuvaE vELai -2 - jeeviyamaE

எண்ணிப்பார் கழிந்திட்டக் காலமதை
eNNippaar kazhiththitta kaalamathai
கதையைப்போல் மனிதரின் நாட்கள் செல்லும்
kathaiyai pOl manitharin naatkaL sellum
உலகத்து சேவை சாகையில் ஓயும்
ulahaththu sEvai saahaiyil Oyum
உன்னுடன் மரித்தபின் வருவதாது?
unnudan mariththapin varuvathaathu
  கிறிஸ்துவின் சேவையே நிலைத்து நிற்கும் -2 - ஜீவியமே
  kirisththuvin sEvaiyaE nilaiththu nirkum -2 - jeeviyamaE


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)