கிறிஸ்தவ இல்லறமே – சிறந்திடக்
kiristhava illaramaE -siranthida
கிருபை செய்வீர், பரனே!
kirubai seiyveer paranaE
பரிசுத்த மரியன்னை, பாலன் இயேசு , யோசேப்புப்
parisuththa mariyannai paalan yaEsu yOsEppu
பண்பாய் நடத்தி வந்த இன்பக் குடும்பம்போல — கிறிஸ்தவ
paNbaai nadaththi vantha inbak kudumbam pOla
ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
jebamennum thoobamaE thinam vaanam yEravum
திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
thiru vEda vaakkiyam sevihaLil kEtkavum
சுப ஞானக் கீர்த்தனை துத்தியம் பாடவும்,
suba gnana keerththanai thooththiyam paadavum
சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் — கிறிஸ்தவ
suthanaEsu thalaimaiyil thooya veedaahavum
ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
oozhiyam puriyavum oothiyam virumbaamal
உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
uvantha beththaaniyaa oorin kudumbam pOla
நாளும் இயேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
naaLum yEsu piraanai nal virunthaaLiyaakki
நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் — கிறிஸ்தவ
naadiyavar paathaththil koodiyamarnthu kEttu
அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
anbOdaaththuma thaaham ariya parObahaaram
அருமையாக நிறைந்த அயலார்க் கொளி விளக்காய்த்,
arumaiyaaha niraintha ayalaark koLi viLakkaai
துன்பஞ் செய்கிற பல தொத்து வியாதிகளைத்,
thunbanj seiyhira pala thoththu viyaathihaLai
தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து — கிறிஸ்தவ
thooranth thuraththum vahai sollu sEvaiyai seiythu
மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
malaiyathin mEluLLa maaLihaiyaip pOlavaE
மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
matravarhaLukku mun maathiriyaai nintru
கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
kalai udai uNavilum kalvi muyarchchiyilum
கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் — கிறிஸ்தவ
karththaruk kEtra parisuththa kudumbamaaha