அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
azhaikkiraar azhaikkiraar ithO
நீயும் வா உந்தன் நேசர்
neeyum vaa unthan nEsar
ஆவலாய் அழைக்கிறார் இதோ – 2
aavalaai azhaikkiraar ithO
பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர் -2
paavaththai yEtravar paliyaai maaNdavar
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
kalvaariyin mEttinil kaNkoLLaatha kaatchiyaE
கண்டிடும் வேண்டிடும் பாவபாரம் நீக்கிடும் -2 -அழைக்கிறார்
kaNdidum vENdidum paava paaram neekkidum
நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர் -2
nOyaiyum yEtravar pEyaiyum ventravar
நீதிபரன் உன் நோயை நிச்சயமாய் தீர்த்தாரே -2
neethiparan un nOyai nichchayamaai theerththaaraE
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் -2 -அழைக்கிறார்
nOyutra unnaiyaE nEyamaai azhaikkiraar
துன்பம் சகித்தவர் துயரடைந்தவர் -2
thunbam sahiththavar thuyaradainthavar
இன்னலுற்ற உன்னையே அண்ணல் இயேசழைக்கிறார் -2
innalutra unnaiyaE aNNal yEsazhaikkiraar
துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ -2 -அழைக்கிறார்
thunpurum nenjamaE thurithamaai nee vaaraayO
அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தொங்கினார் -2
anthak kEdadainthavar azhahatru thonginaar
சொந்தமாக சேர்த்திட இந்தப் பாடடைந்தாரே -2
sonthamaaha sErththida intha paadadainthaaraE
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ! -2 -அழைக்கிறார்
ninthikkum unnaiyum santhippaar neer vaaraayO