Showing posts with label Freddy Joseph. Show all posts
Showing posts with label Freddy Joseph. Show all posts

En Devan en veLichcham | என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம்
en dEvan en veLichcham
என்னை இரட்சிப்பவரும் அவரே
ennai ratchippavarum avaraE       (2)
என் ஜீவனுக் கரணானவர்
en jeevanuk karaNaanavar
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் 
naan yaarukkum anjamaattaEn

தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
thaayum thanthaiyum thaLLi vittaalum
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார் -2
anbar yEsennai yEtruk koLvaar
  என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
  ennai avar nizhalil vaiththu kaaththiduvaar
  கன்மலை மேலேற்றி  என்னை உயர்த்திடுவார்  -2– என் தேவன் 
  kanmalai mElEtri ennai uyarththiduvaar

தீமை செய்கின்றவர்கள் எனக்கு
theemai seiyhintravarhaL enakku
தீமை செய்ய விரும்புகையில் -2
theemai seiya virumbuhaiyil
  என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்திடுவார் 
  en dEvan aruhil vanthu ennai kaaththiduvaar
  என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே  -2 – என் தேவன் 
  ennai pahaiththavarhaL udanaE azhivaaraE



Kadum puyalilaE | கடும் புயலிலே

கடும் புயலிலே என்னைக் காத்தவரே
kadum puyalilaE ennai kaaththavaraE
கண்ணின் மணிபோல காப்பவரே
kaNNin maNi pOla kaappavaraE        (2)
தினம்தோறும் உம் கிருபையினால்
thinam thOrum um kirubaiyinaal
வழி நடத்திடுமே
vazhi nadaththidumaE

என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
en anbu nEsaraE en aaruyir naNbanaE
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
vaazhththuvaEn vaNanguvaEn ummaiyaE
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
en vaazhnaaLellaam umakkaai jeevippaEn
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்
en uyiruLLa naaLvarai ummai pOtriduvaEn

இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
intha naaLin ovvoru seyalilum
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
um gnanaththaal ennai nadaththumaE   (2)
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
naan nadakkum vazhithanai kaaNbiththu
ஆலோசனை சொல்லுமேன் — என் அன்பு
aalOsanai sollumaEn

பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்
pazhaiya ninaivuhaL kasantha nihazhchchihaL
துயரமான பல தோல்விகள்
thuyaramaana pala thOlvihaL        (2)
என்னை வாட்டுகின்ற வேளையில்
ennai vaattuhintra vELaiyil
உம் சமூகத்தை நான் சாருவேன் — என் அன்பு
um samuhaththai naan saaruvaEn

உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
udaintha uravuhaL manathin kasappuhaL
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
ennai norukkum idhayaththin yEkkangaL     (2)
இருளாய் என்னை சூழ்கையில்
iruLaai ennai soozhhaiyil
உம் பிரசன்னம் தான் என் அடைக்கலம் — என் அன்பு
um pirasannam thaan en adaikkalam





Neer enthan maraividam | நீர் எந்தன் மறைவிடம்

நீர் எந்தன் மறைவிடம்
neer enthan maraividam
நீர் எந்தன் புகலிடம்
neer enthan puhalidam                    (2)
நான் அஞ்சும் நேரத்தில் – என்னை
naan anjum nEraththil -ennai
விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்
viduvikkum paadalai neer tharuhireer

உம்மை நம்புவேன்
ummai nambuvaEn
பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
belaveena vELaiyil enthan belanum neeraE
உம்மை நம்புவேன் 
ummai nambuvaEn
 நான் நம்புவேன்
 naan nambuvaEn
 பெலவீன வேளையில் எந்தன் பெலனும் நீரே
 belaveena vELaiyil enthan belanum neeraE

நீர் எந்தன் ஆண்டவர்
neer enthan aaNdavar
நீர் எந்தன் இரட்சகர்
neer enthan ratchahar                   (2)
துயரான வேளையில் நான் வாழ
thuyaraana vELaiyil naan vaazha
நம்பிக்கை நீர் தருகிறீர்
nambikkai neer tharuhireer

Undhan pirasanaththaal | உந்தன் பிரசன்னத்தால்

உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
unthan prasanaththaal vazhi nadaththum
சுத்திகரியும், பெலப்படுத்தும் -2
suththikariyum belappaduththum

தூய ஆவியானவரே, 
thooya aaviyaanavaraE
அன்பின் ஆவியானவரே -2
anbin aaviyaanavaraE

மனிதர்களால் வாழ்வில் எனக்கு 
manitharhaLaal vaazhvil enakku
என்றும் போராட்டமே
entrum pOraattamaE                  (2)               
உறவுகளால் வாழ்வில் எனக்கு 
uravuhaLaal vaazhvil enakku
  என்றும் மனதில் சஞ்சலமே… -2-உந்தன் 
  entrum manathil sanjalamaE

தனிமையில் வாடும் எனக்கு 
thanimaiyil vaadum enakku
உம் பிரசன்னம் ஆனந்தமே
um prasannam aananthamaE            (2)
கேள்விகள் உள்ள எனக்கு 
kELvihaL uLLa enakku
  உம் வசனம் பேர் ஆறுதலே… -2 -உந்தன் 
  um vasanam pEr aaruthalaE



Um Pirasannam Naadi Vanthaen | உம் பிரசன்னம் நாடி வந்தேன்

உம் பிரசன்னம் நாடி வந்தேன்
um pirasannam naadi vanthaEn
கிருபையினால் நோக்கிடுமே -2
kirubaiyinaal nOkkidumaE -2
  உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
  um raththaththaal ennai kazhuvidumaE
  உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே -2
  um piLLaiyaai ennai maatridumaE

என் இயேசுவே என் இராஜனே
en yaEsuvaE en raajanaE
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே -2
naan yaEnguhiraEn um samuhaththirkkaE -2

உம் வசனம் தியானிக்கையில்
um vasanam thiyaanikkaiyil
இதயம் அதில் ஆறுதலே -2
idhayam athil aaruthalaE
 மனிதர்கள் என்னை பகைத்தாலும்
  manitharhaL ennai pahaiththaalum
 அஞ்சிடேனே நீர் இருக்கையிலே -2— என்
  anjidaEnaE neer irukkaiyilaE -2 -en

வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
vaazhkkaiyin paarangaL nerukkaiyilaE
உம் பிரசன்னம் என் அடைக்கலமே -2
um pirasannam en adaikkalamaE -2
 திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
  thikkatra nilaimaiyil irunthaalum
 திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே -2 — என்
  thidan koLLuvaEn um samoohaththilaE -2 -en



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)