Showing posts with label Keerthanai. Show all posts
Showing posts with label Keerthanai. Show all posts

aruLaE poruLaE aaraNamaE | அருளே! பொருளே! ஆரணமே

அருளே! பொருளே! ஆரணமே 

aruLaE porulaE aaraNamaE

அல்லும் பகலுந் துணை நீயே

allum pahalum thuNai neeyaE

இருள் சேர்ந்திடுமிவ் வேளையிலே 

iruL sErnthidum iv vELaiyilaE

இன்னலொன்றுந் தொடராமல்

innalontrum thodaraamal

மருண்டு மனது பிறழாமல், 

maruNdu manathu pirazhaamal

வஞ்சத் தொழிலிற் செல்லாமல்

vanja thozhilir sellaamal

கருணாகரனே! எனைக் காக்கக் 

karuNaakaranaE enaik kaakka

கழறுந் துதியுனக் கொரு கோடி

kazharunth thuthiyunak koru kOdi


சென்ற நாட்களனைத்திலும் 

sentra naatkaLanaiththilum

சிறியேன் தனக்கு செய்து வந்த

siriyEn thanakku seiythu vantha

நன்றாம் நன்மைகளனைத்திற்கும் 

nantraam nanmaihaLanaiththirkum

நவிலற்கரிய தயைகளுக்கும்,

navilarkariya thayaihaLukkum

என்றுமழியா வரங்களுக்கும் 

entrumazhiyaa varangaLukkum

ஏழையடியேன் மிகத் தாழ்ந்து

yEzhaiyadiyaEn miha thaazhnthu

கன்று நினைந்து கதறுதல்போல் 

kantru ninainthu katharuthal pOl

கழறுந் துதியுனக் கொரு கோடி

kazharunth thuthiyunak koru kOdi


பற்றொன்றில்லாப் பரம்பொருளே! 

patrontrillaa param poruLaE

பரமானந்த சற்குருவே!

paramaanantha sarguruvaE

வற்றாஞான சமுத்திரமே 

vattraa gnana samuththiramaE

வடுவொன்றில்லா வான் பொருளே!

vaduvontrillaa vaan poruLaE

பெற்றோர், உற்றோருலகனைத்தும் 

petrOr utOrulahanaiththum

பிரியமுடனே சுகித்திருக்கக்

piriyamudanaE suhiththirukka

கற்றில்லாத மிகச்சிறியேன் 

katrillaatha miha siriyEn

கழறுந் துதியுனக் கொரு கோடி,

kazharunth thuthiyunak koru kOdi


பத்தியதனா லுனைப் பாடிப் 

paththiyathanaa lunaip paadi

பணிந்தே யென்றும் வாழ்ந்திருக்க,

paNinthaE yentrum vaazhnthirukka

நத்தும், இரவு முழுதனைத்தும் 

naththum iravu muzhuthanaiththum

நாதா, என்னைக்காத்தருளி

naathaa ennaik kaaththaruLi

முத்தியென்னும் மோட்சநிலை 

muththi ennum mOtcha nilai

முடிவிலடியேன் தன்னைச் சேர்க்கக்

mudiviladiyaEn thannai sErkka

கத்தியலறிப் பரவசமாய்க் 

kaththiyalari paravasamaai

கழறுந் துதியுனக் கொரு கோடி

kazharunth thuthiyunak koru kOdi



thOththiram yEsu naathaa | தோத்திரம் இயேசுநாதா

 தோத்திரம் இயேசுநாதா

thOththiram yEsu naathaa

உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா -2

umakkentrum thOththiram yEsu naathaa

  தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்

  thOththiram seiyhirOm ninnadiyaar

  திரு நாமத்தின் ஆதரவில் ! -2

  thiru naamaththin aatharavil


வான தூதர் சேனைகள்

vaana thoothar sEnaihaL

மனோகர கீதங்களால் எப்போதும் -2

manOhara keethangaLaal eppOthum

  ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்

  Oivintri paadi thuthikka perum

  மன்னவனே உமக்கு ! -2

  mannavanaE umakku


இத்தனை மகத்துவமுள்ள

iththanai mahathvamuLLa

பதவி இவ்வேழைகள் எங்களுக்கு -2

pathavi ivvELaihaL engaLukku

  எத்தனை மாதயவு நின் கிருபை

  eththanai maa thayavu nin kirubai

  எத்தனை ஆச்சரியம் ! -2

  eththanai aachchariyam


நின் உதிரமதினால்

nin uthiramathinaal

திறந்த நின் ஜீவ புது வழியாம் -2

thirantha nin jeeva puthu vazhiyaam

  நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி

  nin adiyaarku pithaavin sannithi

  சேரவுமே சந்ததம் ! -2

  sEravumaE santhatham


இன்றைத் தினமதிலும்

intrai thinamathilum

ஒருமித்துக் கூட உம் நாமத்தினால் -2

orumiththu kooda um naamaththinaal

  தந்த நின் கிருபைக்காக  உமக்கென்றும்

  thantha nin kirubaikkaaha umakkentrum

  ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ! -2

  sthOththiram sthOththiramaE


நீரல்லால் எங்களுக்குப்

neerallaal engaLukku

பரலோகில் யாருண்டு ஜீவநாதா -2

paralOhil yaaruNdu jeeva naathaa

  நீரேயன்றி இகத்தில் வேறொரு

  neerEyantri ihaththil vEroru

  தேட்டமில்லை பரனே ! -2

  thEttamillai paranaE



AamEn allEluyah ! | ஆமென், அல்லேலூயா!

ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா

AamEn allEluyah mahaththuva thamparaaparaa

ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!

aamEn allEluyah jeyam jeyam

அனந்த தோத்திரா

anantha thOththiraa


ஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்

Om anaathi thanthaar vanthaar iranth

துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே

thuyirththezhunthaaraE unnathamaE


வெற்றிகொண் டார்ப்பரித்து – கொடும்வே

vetri koNdaarpariththu -kodumvE

தாளத்தைச் சங்கரித்து, – முறித்து

thaaLaththai sangariththu muriththu

பத்ராசனக் கிறிஸ்து – மரித்து

pathraasana kirisththu mariththu

பாடுபட்டுத்தரித்து, முடித்தார் -ஆமென்

paadupattuth thariththu mudiththaar


சாவின் கூர் ஒடிந்து, – மடிந்து,

saavin koor odinthu -madinthu

தடுப்புச் சுவர் இடிந்து, – விழுந்து,

thaduppu suvar idinthu -vizhunthu

ஜீவனே விடிந்து, – தேவாலயத்

jeevanaE vidinthu -dEvaalaya

திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது -ஆமென்

thirai reNdaai kizhinthu ozhinthathu


வேதம் நிறைவேற்றி, – மெய் தோற்றி,

vEtham niraivEtri -mei thOtri

மீட்டுக் கரையேற்றி, – பொய் மாற்றி,

meettu karai yEtri -poi maatri

பாவிகளைத் தேற்றி, – கொண்டாற்றி,

paavihaLai thEtri -koNdaatri

பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் -ஆமென்

pathraasana thEtri vaazhviththaar



Aathi thiru vaarthai diviya | ஆதித் திருவார்த்தை திவ்விய

ஆதித் திருவார்த்தை திவ்விய 
aathi thiru vaarththai divya
அற்புதப் பாலனாகப் பிறந்தார் 
arputha paalanaahap piranthaar
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட 
aathanthan paavaththin saabaththai theerththida
ஆதிரையோரையீ டேற்றிட
aathiraiyOraiyee dEtrida

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து
maasatra jOthi thiriththuva thOr vasthu
மரியாம் கன்னியிட முதித்து 
mariyaam kanniyidam uthiththu
மகிமையை மறந்து தமை வெறுத்து 
mahimaiyai maranthu thamai veruththu
மனுக்குமாரன் வேஷமாய்
manukkumaaran vEshamaai
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகி 
unna thahanjeer muhanjeer vaasahi
மின்னுச்சீர் வாசகி  மேனிநிறம் எழும்
minnunjeer vaasahi mEni niram ezhum
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
unnatha kaathalum porunthavaE sarva
நன்மைச் சொருபனார் ரஞ்சிதனார்
nanmai sorupanaar ranjithanaar

தாம் தாம் தன்னரர் வன்னரர்
thaam thaam thannarar vannarar
தீம் தீம் தீமையகற்றிட
theem theem theemai yahatrida
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
sangirtha sangirtha sangirtha santhO
ஷமென சோபனம்பாடவே
shamana sOpanam paadavaE
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
ingirtha ingirtha ingirtha namathu
  இருதயத்திலும் எங்கும் நிறைந்திட -2– ஆதி
  irudhayaththilum engum nirainthida

ஆதாம் ஓதி  ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து
aathaam Othi yEvinaar aabirahaam visuvaasaviththu
யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல் 
yuthar simmaasanaththaaLuhai sengkOl
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் -தாம் தாம்
yeesaai vangishathaanuthiththaar

பூலோகப் பாவ விமோசனர் பூரண கிருபையின் வாசனர்
poolOha paava vimOsanar pooraNa kirubaiyin vaasanar
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
mElOha raajaathi rajan simmaasanan
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் -தாம் தாம்
mEnmai mahimai pirathaapan vanthaar

அல்லேலூயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே
allEluyah sangeerththanam aanantha keethangaL paadavaE
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
allaihaL thollaihaL ellaam neengida
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் -தாம் தாம்
arputhan meiparan tharparanaar



Aathaaram neer thaanaiyaa | ஆதாரம் நீ தான் ஐயா

ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,
aathaaram nee thaan iyya en thuraiyaE
ஆதாரம் நீ தான் ஐயா
aathaaram nee thaan iyya
சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்
soothaam ulahil naan theethaal mayangkaiyil

மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
maathaa pithaavennai theethaai mathikkaiyil
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,
matOrkku patraEthaiyaa yeLiyan mEl
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு — ஆதாரம்
matOrkku patraEthaiyaa  yeLiyanukku

நாம் , தான் துணையென நயந்துரை சொன்னவர்
naam thaan thuNaiyena nayanthurai sonnavar
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை
nataatril vittaaraiyaa thaniyanai
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு — ஆதாரம்
nataatril vittaaraiyaa thaniyanukku

கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையே
katrOr perumaiyaE matrOr arumaiyaE
வற்றாக் கிருபை நதியே , என்பதியே
vatraak kirubai nathiyaE enpathiyaE
வற்றாக் கிருபை நதியே , என்பதியே — ஆதாரம்
vatraa kirubai nathiyaE enpathiyaE

சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
sothanai yadarnthu vEthanai thodarnthu
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே,
thukkam mihum vELaiyil en suhirthamaE
துக்கம் மிகுவேளையில் , உன் தாசனுக்கு — ஆதாரம்
thukkam mihum vELaiyil un thaasanukku






Deivanbin veLLamaE | தெய்வன்பின் வெள்ளமே

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,
deivanbin veLLamaE thiruvaruL thOtramaE
மெய் மனதானந்தமே!
mei manathaananthamaE
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
seiyya nin sempaatham sEvikka ivvELai
ஐயா, நின் அடி பணிந்தேன் -ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
iyyaa nin adi paNinthaEn

சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
sontham unathallaal sOra vazhi sella
எந்தாய் துணிவேனோ யான்?
enthaai thuNivEnO yaan
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
punthikkamalamaam poomaalai kOththu nin
பொற்பதம் பிடித்துக் கொள்வேன்-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
porpatham pidiththu koLvEn

பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
paava sEtril pala vELai palamintri
தேவே தவறிடினும்,
dEvaE thavaridinum
கூவி விளித்துந் தன் மார்போடணைத் தன்பாய்
koovi viLiththum than maarbOdaNaiththanbaai
யாவும் பொறுத்த நாதா! -2-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
kOthu poruththa naathaa

மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்
moorkka guNam kObam lOgam sitrinbamum
மேற்கொள்ளும் நாச ஏக்கம்
mErkoLLum naasa yEkkam
தாக்கித் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
thaakki thadumaari thayangidum vELaiyil
தூக்கித் தற்காத்தருள்வாய் -2-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
thookki tharkaaththaruLvaai

ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
aasai paasam patru aavalaai nin thiru
பூசைப் பீடம் படைப்பேன்
poosai peedam padaippaEn
மோச வழிதனை முற்று மகற்றியென்
mOsa vazhithanai mutrum ahatriyen
நேசனே நினைத் தொழுவேன் -2-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
nEsanaE ninai thozhuvaEn

மரணமோ, ஜீவனோ, மறுமையோ, பூமியோ,
maraNamO jeevanO marumaiyO poomiyO
மகிமையோ, வருங்காலமோ,
mahimaiyO varungkaalamO
பிற சிருஷ்டியோ, உயர்ந்ததோ, தாழ்ந்ததோ,
pira sirushtiyO uyarnthathO thaazhnthathO
பிரித்திடுமோ தெய்வன்பை -2-ஆ..ஆ..ஆ.. -தெய்வன்பின்
piriththidumO deivanbai


Enna en aanantham | என்ன என் ஆனந்தம்!

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
enna en aanantham enna en aanantham
சொல்ல கூடாதே -2
solla koodaathaE
  மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
  mannan kiristhu en paavaththai ellaam 
  மன்னித்து விட்டாரே -2
  manniththu vittaaraE
  
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
kooduvOm aaduvOm paaduvOm nantraai
மகிழ் கொண்டாடுவோம்! -2
mahizh koNdaaduvOm
  நாடியே நம்மைத் தேடியே வந்த
  naadiyaE nammai thEdiyaE vantha
  நாதனைப் போற்றிடுவோம் -2 -என்ன என் ஆனந்தம்
  naathanai pOtriduvOm
   
பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
paavangaL saabangaL kObangaL ellaam
பரிகரித்தாரே -2
parihariththaaraE
  தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
  dEvaathi dEvan en uLLaththil vanthu
  தேற்றியே விட்டாரே -2 -என்ன என் ஆனந்தம்
  thEtriyaE vittaaraE
   
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
atchayan patchamaai ratcippai engaLuk
அருளினதாலே -2
aruLinathaalaE
  நிச்சயம் சுவாமியை  பற்றியே சாட்சி
  nichchayam suvamiyai patriyaE saatchi
  பகரவேண்டியதே -2 -என்ன என் ஆனந்தம்
  pahara vENdiyathaE
    
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
veNNangi pon mudi vaaththiyam mEl veettil
ஜெயக்கொடியுடனே -2
jeyak kodiyudanaE
  மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
  maNNulahil vanthu viNNulahil sentra
  மன்னனைத் ஸ்தோத்தரிப்போம் -2-என்ன என் ஆனந்தம்
  mannanai sthOththarippOm

IvaraE perumaan | இவரே பெருமான்

இவரே பெருமான் , மற்றப்
ivaraE perumaan matra
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்
pEr alavaE poomaan -ivaraE perumaan

கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
kavalaik kidangkoduth thariyaar -vEru
பவவினை யாதுமே தெரியார் – இப்
pava vinai yaathumaE theriyaar -ip
புவனமீது நமக்குரியார் — இவரே
puvanameethu namakkuriyaar -ivaraE

குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
kurudarhaLuk kuthavum vizhiyaam -pava
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
karuma iruLai neekkum oLiyaam -deivam
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் — இவரே
irukkum thalanjchal vaasal vazhiyaam

பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
pala piNi theerkkum parikaari -sollum
வலமையில் மிக்க விபகாரி – எக்
valamaiyil mikka vibakaari -ek
குலத்துக்கும் நல்ல உபகாரி — இவரே
kulaththukkum nalla ubakaari

அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
aranj seiyvathinil oru siththan -kodu
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
maram vidu pavarkkaruL muththan -ingaE
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் — இவரே
iranthOrk kuyir yeeyum karththan 

அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
alahai thanai jeyiththa veeran -pava
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ulagai ratchiththa ezhirpEran -viN
ணுலகு வாழ் தேவ குமாரன் — இவரே
Nulaha vaazh dEva kumaaran

பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
ponnulahath thanil vaazh yOhan -aruL
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
thunna ulahil nanmai thEhan -nampaal
தன்னை யளித்த ஓர் தியாகன் — இவரே
thannai yaLiththa Or thiyaahan




Iyyayyaa naan vanthaEn | ஐயையா நான் வந்தேன்

ஐயையா நான் வந்தேன் – தேவ
iyyayyaa naan vanthaEn -dEva
ஆட்டுக்குட்டி, வந்தேன்.
aattukkutti vanthaEn

துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்
thuyyan neer sOri paavi enakkaai sinthi
துஷ்டன் எனை அழைத்தீர், – தயை
thushtan enai azhaiththeer -thayai
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
seiyvOm entraE ithai allaathu pOkkillai
தேவாட்டுக்குட்டி, வந்தேன்– ஜயையா
dEvaattukkutti vanthaEn

உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
uLLak karaihaLil ontraEnum thaanaai
ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்
ozhinthaal varuvaEn entru -nillaEn
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
theL um uthiram karai yaavum theerththidum
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.– ஜயையா
dEvaattukkutti vanthaEn

எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
eNNam  veLiyaE pOraattangaL utbayam
எத்தனை எத்தனையோ! – இவை
yeththanai eththanaiyO -ivai
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;
thiNNam ahatri eLiyOnai ratchiyum
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.– ஜயையா
dEvaattukkutti vanthaEn

ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்
yEtruk koNdu mannippu yeenthu suththikarith
தென்னை அரவணையும்; – மனம்
thennai aravaNaiyum -manam
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்  
thEtrik koNdaEn unthan vakkuththaththangaLaal
தேவாட்டுக்குட்டி, வந்தேன்– ஜயையா
dEvaattukkutti vanthaEn


IyyanaE umathu thiruvadihaLukkaE | ஐயனே உமது திருவடிகளுக்கே

ஐயனே உமது திருவடிகளுக்கே
iyyanaE umathu thiruvadihaLukkaE
ஆயிரந்தரந் தோத்திரம் !
aayiram tharam thOththiram
மெய்யனே ! உமது தயைகளை அடியேன்
meiyanaE umathu thayaihaLai adiyaEn
விவரிக்க எம்மாத்திரம்? -ஆ..ஆ..ஆ..ஆ..
vivarikka emmaaththiram -aa..aa..aa..aa

சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
sentrathaam iravil dEvareer ennai
சேர்ந்தர வணைத்தீரே:
sErththara vaNaiththeeraE
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
anthadaivaayip pahalilung kiribai
யாகவா  தரிப்பீரே .-ஆ..ஆ..ஆ..ஆ..-ஐயனே ! 
yaahavaa tharippeeraE

இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்
irudhayanth thanai neer puthiyathaE yaakkum
ஏழையைக் குணமாக்கும்
yEzhaiyai guNamaakkum
கருணையாய்  என்னை உமதகமாக்கிக்
karuNaiyaai ennai umathahamaakki
கன்மமெல்லாம் போக்கும்.-ஆ..ஆ..ஆ..ஆ..-ஐயனே ! 
kanmamellaam pOkkum

நாவிழி செவியை நாதனே, இந்த
naa vizhi seviyai naathanaE intha
நாளெல்லாம்  நீர் காரும்.
naaLellaam neer kaarum
தீவினை விலகி நான் திருமுகம் நோக்க
theevinai vilahi naan thirumugam nOkka
தெய்வமே , அருள் கூரும் .-ஆ..ஆ..ஆ..ஆ..-ஐயனே ! 
deivamaE aruL thaarum

கைகாலால் நான் பவம் புரியாமல்
kai kaalaal naan pavam puriyaamal
சுத்தனே துணை நில்லும்
suththanaE thuNai nillum
துய்யனே , உம்மால் தான் எனதிதயம்
thuiyanaE ummaal thaan yenathithayam
தூய் வழியே செல்லும்.-ஆ..ஆ..ஆ..ஆ..-ஐயனே ! 
thooi vazhiyaE sellum

ஊழியந் தனை நான் உண்மையாய்ச் செய்ய
oozhiyanthanai naan uNmaiyai seiyya
உதவி நீர் செய்வீரே .
uthavi neer seiyveeraE
ஏழை நான் உமக்கே இசைய நல்  ஆவி
yEzhai naan umakkaE isaiya nal aavi
இன்பமாய்ப் பெய்வீரே.-ஆ..ஆ..ஆ..ஆ..-ஐயனே ! 
inbamaai peiveeraE

அத்தனே ! உமது மகிமையை நோக்க 
aththanaE umathu mahimaiyai nOkka
அயலான் நலம் பார்க்கச் 
ayalaan nalam paarkka
சித்தமாய் அருளும், மெய் விசுவாசம் 
siththamaai aruLum mei visuvaasam
தேவனே உமக் கேற்க.-ஆ..ஆ..ஆ..ஆ..-ஐயனே ! 
dEvanaE umak kErka

இன்றும்  என் மீட்பைப் பயம் நடுக்கத்தோ 
intrum en meetpai bayam nadukkaththO
டேயடியேன்  நடத்தப் 
daEyadiyaEn nadaththa
பொன்றிடா பலம் தாரும் , என் நாளைப் 
pontridaa palam thaarum en naaLai
பூவுலகில் கடத்த -ஆ..ஆ..ஆ..ஆ.-ஐயனே ! 
poovulahil kadaththa


immattum jeevan thantha | இம்மட்டும் ஜீவன் தந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
immattum jeevan thantha karththaavai aththiyantha
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக
eNNamaai sthOththarippOmaaha
நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
nammai ratchikka vanthu thammai baliyaai thanthu
  நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் -2 -இம்மட்டும் 
  narsugam mEvavum arputhamaahavum

காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
kaalam sol pOl kazhiyum thaNNeeraip pOl vadiyum
கனாவைப் போலேயும் ஒழியும்
kanaavaip pOlaEyum ozhiyum
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
vaalibamum maraiyum seelam ellaam kuraiyum
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
maNNin vaazhvontrum nirka maattaathu
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
kOla pathumaikkum neer kumizhikkum puhaikkumaE
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்
koNda ulahaththil aNda paran emai
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்மட்டும் 
kaNdu karuNaihaL viNdu thayavudan

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
palavitha ikkattaiyum thihilhaLaiyum kadanthOm
பரம பாதையைத் தொடர்ந்தோம் 
parama paathaiyai thodarnthOm
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
valiya theemaiyai ventrOm naliyum aasaiyai kontrOm
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
vanjar pahaikkum thappi nintrOm
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
kali entrathellaam viNdOm karththaavin meetpaik kaNdOm
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
kaaintha manathOdu paainthu vizhu kaNam
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்மட்டும் 
saainthu kedavum aaraainthu neriyudan

சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
sana sEtham varuvikkum kEdukatkOr mudivu
தந்து நொறுங்கினதை கட்டிக்
thanthu norunginathai katti
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
gana sabaiyai aatharith thanbaai aaseervathiththuk
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
kaNNOkki ellaar mEl antrantru
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
thinamum aruL uthikka seiythu thamathu dEva
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
sinthai yinOdathi vinthaiyathaai uyir
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் – இம்மட்டும் 
mainthanaal engaLai intha vinOthamaai


Kandaen en Kankulira | கண்டேன் என் கண்குளிர

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
kaNdaEn en kaN kuLira -karththanaiyintru
  கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்டேன்
  kOndaadum viNNOrhaL kOmaanai kaiyilaEnthi 

பெத்தலேம் சத்திர முன்னணையில் -2
bethelEm saththira munnaNaiyil
  உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்
  utOruk kuyir tharum uNmaiyaam en ratchahanai 

தேவாதி தேவனை, தேவசேனை -2
dEvaathi dEvanai dEva sEnai
  ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்
  Oyaathu thOththarikkum oppunigar atravanai

பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை, -2
paavEnthar thEdi varum bakthar paranai
  ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்
  aavEnthar adithozhum anbanai en inabanai naan

முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை, -2
muththozhir karththaavaam munnavanai
  இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்
  iththarai meetka enai nadaththi vantha mannavanai

மண்ணோர் இருள் போக்கும் மாமணியை -2
maNNOr iruL pOkkum maa maNiyai
  விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்
  viNNOrum vENdi nirkum viNmaNiyai kaNmaNiyai 

அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை -2
aNdinOr kanburuvaam aaraNanai
  கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்
  kaNdOrhaL kali theerkkum kaaraNanai pooraNanai

அன்னையாம் – கன்னியும் ஐயனுடன் -2
annaiyaam kanniyum iyyanudan
  முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்
  munnariyaap pasuvin pullaNaiyil unnazhahai


kaNgaLai yEreduppaEn | கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – மாமேருநேராய் என்
kaNhaLai yEreduppaEn -maa mEru nEraai en
கண்களை ஏறெடுப்பேன்
kaNhaLai yEreduppaEn
  விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந் -2
  viN maN uNdaakkiya viththahanidamirunthu
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் — கண்களை
yeNNillaa voththaasai entranukkaE varum

காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
kaalaith thaLLaada vottaar -urangaathu kaappavar
காலைத்தள்ளாட வொட்டார்,
kaalaith thaLLaada vottaar 
  வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர் -2
  vElaiyil nin tisravElarai kaaththavar
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் — கண்களை
kaalaiyum maalaiyum kaNNurangaathavar

பக்தர்  நிழல் அவரே — எனை ஆதரித்திடும்
bakththar nizhal avaraE -enai aathariththidum
பக்தர்  நிழல் அவரே
bakththar nizhal avaraE
  எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது -2
  ekkaala nilaimaiyum enai sEthappaduththaathu
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே — கண்களை
akkOlam koNdOnai akkaalam puriyavaE

எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
ellaath theemaihatkum -ennai vilakkiyaE
எல்லாத் தீமைகட்கும்
ellaath theemaihatkum
  பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் -2
  pollaa ulahinil pOkku varaththaiyum
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் — கண்களை
nallaaththumaavaiyum naadOrum kaappavar



Kolhotha malai mEl | கொல்கொதா மலைமேல்

கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
kolkothaa malai mEl thOntruthOr siluvai
அல்லல் பழிப்பின் சின்னமதாம்
allal pazhippin sinnamathaam
நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
neesa paavihatkaai nEsar maaNdaarathil
நேசிப்பேன் அத்தொல் சிலுவையை
nEsippaEn aththol siluvaiyai

அந்தச் சிலுவையை நேசிப்பேன்
antha siluvaiyai nEsippaEn
பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
belan Ointhu naan saahum varai
தொல் சிலுவையை நான் பற்றுவேன்
thol siluvaiyai naan patruvaEn
பின் அதால் க்ரீடத்தை அணிவேன்
pin athaal kreedaththai aNivaEn

தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
dEvaattuk kutti tham maatchimai veruththu
உலகோர் பழித்த குருசை
ulahOr pazhiththa kurusai
கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
kalvaari malaikkaE sumanthaar enakkaai
கவர்ந்த தென்னுள்ளத் தையது — அந்தச் சிலுவையை
kavarntha thennuLLath thaiyathu

என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
en paavam mannikka ennai suththamaakka
நேசர் மாண்ட சிலுவையதோ !
nEsar maaNda siluvaiyathO
தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
thooya raththam thOintha antha siluvaiyin
அழகெத்தனை மாட்சிமை பார் ! — அந்தச் சிலுவையை
azhaheththanai maatchimai paar

குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
kurusin izhivai mahizhvaai sumanthaE
மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
mEnmai paaraattuvaEn ninthaiyil
பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
pinnaal mOtcha lOhil nEsar kootti sentru
பங்களிப்பார் தம் மகிமையில் — அந்தச் சிலுவையை
pangaLippaar tham mahimaiyil



kELungaL tharappadum | கேளுங்கள் தரப்படும்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
kELungaL tharappadum thattungaL thirakkappadum
  தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
  thEdungaL kidaikkumentaar -yEsu

பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
bethlehEm nagaril maattu thozhuvamathil piranthaar parama pitha
  சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுப் பிதா -2 -கேளுங்கள் 
  soosai kanni mariyin madiyil thavazhnthaar yEsu pithaa

ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
aaru vayathinil aaramba paLLiyil kalvi payintaaraE
ஆகமங்கள் ஐம்பத்தாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் 
aahamangaL impaththaarinaiyum iyyam theera uNarnthaar
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
iyarkkai ulahamaE thooimaiyaanathena yEsu ninaiththaaraE
  எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே -2-கேளுங்கள் 
  ellaa uyirhaLum than uyir enavaE pEsi mahizhnthaaraE

எருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே
yerusalEm naharil paskaa paNdihaikku paramar pOnaaraE 
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
pannireNdu vayathu nirambiya yEsu kELvihaL kEttaaraE
இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
yEsuvin kELviyil aalaya gurukkaL aanantham aanaaraE
  இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே -2
  iLamai seiytha thiramaiyil paskaa perumaiyai vaLarththaaraE
இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
iLamai paruvamathil yeLimai vaazhkkaiyil iruppidam aanaaraE
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே-கேளுங்கள் 
intha vELaiyil yEsuvin thanthai soosiyum marinthaaraE

தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
thanthaiyaar seiytha thachchu thozhilaiyaE thanaiyanum seiythaaraE
  தங்க உழவர்கள் உழுதிட  கலப்பைகள் செய்து கொடுத்தாரே -2
  thanga uzhavarhaL uzhuthida kalappaihaL seiythu koduththaaraE

நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று
nilangaLai uzhuvathu pOl uLLaththai uzhungaL entru
உலகப்பிதா சொன்னபோது 
ulahap pithaa sonna pOthu
உழவர்கள் தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் 
uzhavarhaL thozhilaaLar ooraarin eNNamathil
  இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -2
  yEsu ontraaha pathinthu vittaar
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே 
anbu kuzhanthaihaL aruhil iruppathaE
  ஆண்டவன் தொண்டு என்றார் -இயேசு
  aaNdavan thoNdu entaar -yEsu
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
muppathaam vayathil yOrthaan aatrangkaraiyinil sentraaraE
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
yOvaan entra gnaniyin anbil nOnbuhaL yEtraaraE
ஞானஸ்னமும் பெற்றாரே
gnanasnaanamum petraaraE
  துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே -2
  thunbaththai ahatri inbamaai vaazha vazhi pala sonnaaraE

இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
yEsu naNbanaam yuuthaas nantriyai maranthu kaatti koduththaanaE
முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே
muppathu kaasukkaahavaE kaatti koduththaanaE
ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
janakareem entra neethi mantraththil yEsu nintraaraE
  தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே -2
  deiva ninthanai seiybavar entra pazhiyai sumanthaaaraE
சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
sihappu angiyaal yEsuvai moodi savukkaal adiththaaraE
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே --கேளுங்கள்
yEsuvai siluvaiyil arainthaaraE

மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே
mariththa yEsuvum mootraam naaLilaE uyirOdu ezhunthaaraE
பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே
pannireNdu seedar naduvivil thOntri aasihaL aLiththaaraE
உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே --கேளுங்கள்
ulahaththin mudivil marupadi thOntri nammaiyum kaappaaraE


KaariruL vELaiyil | காரிருள் வேளையில்

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
kaariruL vELaiyil kadung kuLir nEraththil
ஏழைக் கோலமதாய்
yEzhai kOlamathaai
பாரினில் வந்த மன்னவனே உம்
paarinil vantha mannavanaE um
மா தயவே தயவு
maa thayavaE thayavu

விண்ணுலகில் சிம்மாசனத்தில்
viNNulahil simmaasanaththil
தூதர்கள் பாடிடவே -2
thootharhaL paadidavaE 
  வீற்றிருக்காமல் மானிட னானது
  veetrirukkaamal maanida naanathu
  மா தயவே தயவு -2 – காரிருள்
  maa thayavaE thayavu

விண்ணில் தேவனுக்கே மகிமை
viNNil dEvanukkaE mahimai
மண்ணில் சமாதானம் -2
maNNil samaathaanm
  மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
  manudaril piriyam malarnthathu unthan
  மாதயவே தயவு -2– காரிருள்
  maa thayavaE thayavu

விந்தை விதந்தனில் வந்தவனே,
vinthai vithanthanil vanthavanaE
வானவனே, நாங்கள் -2
vaanavanaE naangaL
  தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
  thanthaiyin anbai kaNdathum unthan
  மாதயவே தயவு -2 – காரிருள்
  maa thayavaE thayavu


NambivanthaEn mEsiyah naan | நம்பிவந்தேன் மேசியா நான்

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -திவ்ய
nambi vanthaEn mEsiyaa naan nambi vanthEnaE  -divya
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே -நம்பிவந்தேன் 
saraNam saraNam saraNam iyyaa naan nambi vanthEnaE

தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே -வரு
thampiraan oruvanaE thambanaE tharuvanaE -varu
தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே -நம்பிவந்தேன்
thavithu kumara guru paramanuvElaE nambi vanthEnaE 

நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் -நித
ninpaatha tharisanam anbaana karisanam -nitha
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே -நம்பிவந்தேன்
nithasari thozhuva thitham enavum uruthiyil nambi vanthEnaE

நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் -அதி
naathanaE kirubai koor vEthanaE sirumai theer- athi
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே-நம்பிவந்தேன்
nalam mihum unathiru thiruvai aruLaE nambi vanthEnaE

பாவியில் பாவியே கோவியில் கோவியே -கன
paaviyil paaviyaE kOviyil kOviyaE -gana
பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே-நம்பிவந்தேன்
parivudan aruLpuri ahala vidaathaE nambi vanthaEnaE

ஆதி ஓலோலமே பாதுகா காலமே -உன
aathi OlOlamaE paathukaa kaalamaE -una
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே -நம்பிவந்தேன்
thadimaihaL paduthuyar avathihaL meththa nambi vanthEnaE

Ellaam yEsuvaE | எல்லாம் இயேசுவே

எல்லாம் இயேசுவே, எனக்கெல்லாம் இயேசுவே 
ellaam yEsuvaE enakkellaam yEsuvaE
தொல்லைமிகு இவ்வுலகில்  துணை இயேசுவே
thollai mihu ivvulahil thuNai yEsuvaE

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
aayanum sahaayanum nEyanum ubaayanum
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், -எல்லாம் 
naayanum enakkanbaana gnana maNa vaaLanum

தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,
thanthai thaai inam janam panthuLLOr sinEhithar
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும், -எல்லாம் 
santhOda sahala yOha sampooraNa paakkiyamum

கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,
kavalaiyil aaruthalum kangulilen jOthiyum
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், -எல்லாம் 
kashta nOi padukkaiyilaE kai kaNda avizhthamum

போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
pOthaha pithaavumen pOkkinil varaththinil
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும், -எல்லாம் 
aatharavu seiythidum koottaaLiyum en thOzhanum

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
aNiyum aabaraNamum aasthiyum sambaaththiyamum
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் -எல்லாம் 
piNaiyaaLiyum meetparumen piriya maththiyasthanum

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
aana jeeva appamum aavalumen kaavalum
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும். -எல்லாம் 
gnana keethamum sathurum naattamum koNdaattamum


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)