unakkuLLaE irukkintra
உன் இயேசு என்றும் பெரியவரே -2
un yEsu entrum periyavaraE
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
nee ariyaathathum unakku yettaathathumaana
பெரிய காரியங்கள் செய்திடுவார் -2 -உனக்குள்ளே
periya kaariyangaL seiythiduvaar
பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ
peruveLLam mOthi adikkintrathO
பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ -2
perungkaatril padahu thavikkintrathO
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
periyavar unakkuLLaE irukkintaar
பார்த்துக் கொள்வார் நீ கலங்காதே -2 -உனக்குள்ளே
paarththu koLvaar neer kalangaathaE
நம்பிக்கை இல்லா நிலையானதோ
nambikkai illaa nilaiyaanatho
விசுவாசம் உன்னில் குறைவானதோ -2
visuvaasam unnil kuraivaanathO
அற்புதர் உனக்குள் இருகின்றார்
arputhar unakkuL irukkintaar
அதிசயம் செய்வார் (நீ)கலங்காதே -2 -உனக்குள்ளே
athisayam seiyvaar neer kalangaathaE
சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
soozhnilai ellaam yethiraanathO
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ -2
sutraththaar unnil pahaiyaanaarO
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
vallavar unakkuLLaE irukkintaar
வலக்கரம் தாங்குவார் கலங்காதே -2 -உனக்குள்ளே
valakkaram thaanguvaar kalangaathaE
மதுரமான வாழ்வு கசப்பானதோ
mathuramaana vaazhvu kasappaanathO
ஒளிவரும் நேரம் இருளானதோ -2
oLi varum nEram iruLaanathO
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
jeevanuLLa dEvan irukkintaar
யாவையும் செய்வார் கலங்காதே -2 -உனக்குள்ளே
yaavaiyum seiyvaar kalangaathaE
செங்கடல் உனக்கு முன்னானதோ
sengadal unakku munnaanathO
சேனைகளெல்லாம் பின்னானதோ -2
sEnaihaLellaam pinnaanathO
சேனையின் கர்த்தர் இருக்கின்றார்
sEnaiyin karththar irukkintaar
சேதமின்றி காப்பார் கலங்காதே -2 -உனக்குள்ளே
sEthamintri kaappaar kalangaathaE
இல்லையென்ற நிலை வந்ததோ
illaiyentra nilai vanthathO
இருப்பதுபோல் அழைக்கும் தேவன் -2
iruppathu pOl azhaikkum dEvan
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
periyavar unakkuLLaE irukkintaar
பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே -2 -உனக்குள்ளே
paarththuk koLvaar nee kalangaathaE