சிலுவை மீதே தொங்கிய இயேசு
siluvai meethaE thongiya yEsu
என்னில் அன்பு கூர்ந்தார் -2
ennil anbu koornthaar
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
nEsarin anbu enthan uLLaththai
நெருக்கி ஏவிடுதே - சிலுவை
nerukki yEviduthaE
சுகந்த வாசனை பலியாய் தம்மை
suhantha vaasanai baliyaai thammai
உவந்து ஜீவன் தந்தார் -2
uvanthu jeevan thanthaar
என்னில் அன்பு கூர்ந்ததாலே
ennil anbu koornthathaalaE
என்னை அவருக்கே அர்பணித்தேன் -2 - சிலுவை
ennai avarukkaE arpaNiththaEn
கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து
kiristhu yEsu anbilirunthu
பிரிக்க யாரால் கூடும் -2
pirikka yaaraal koodum
உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ
uyarvO thaazhvO thunbam pasiyO
முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் -2 - சிலுவை
mutrum jeyam naan petriduvaEn
முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்
mudivu varaiyum anbu koornthaar
அடிமை வாழ்வடைய -2
adimai vaazhvadaiya
அவரின் வருகை நாளில் நானும்
avarin varuhai naaLil naanum
அவரைப் போல மாறிடுவேன் -2 - சிலுவை
avarai pOla maariduvaEn