உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்
unnathamaanavarin uyar maraivilirukkiravan
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
sarva vallavarin nizhalil thanguvaan
இது பரம சிலாக்கியமே -2
ithu parama silaakkiyamaE
அவர் செட்டையின் கீழ்
avar settaiyin keezh
அடைக்கலம் புகவே (2)
adaikkalam puhavaE
தம் சிறகுகளால் மூடுவார்
tham sirahuhaLaal mooduvaar
தேவன் என் அடைக்கலமே
dEvan en adaikkalamaE
என் கோட்டையும் அரணுமவர்
en kOttaiyum araNumavar
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
avar saththiyam parisaiyum kEdahamaam
என் நம்பிக்கையும் அவரே -2— அவர்
en nambikkaiyum avaraE
இரவின் பயங்கரத்துக்கும்
iravin bayangaraththukkum
பகலில் பறக்கும் அம்புக்கும்
pahalil parakkum ambukkum
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
iruLil nadamaadum koLLai nOikkum
நான் பயப்படவே மாட்டேன் -2— அவர்
naan bayappadavaE maattaEn
ஆயிரம் பதினாயிரம்
aayiram pathinaayiram
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
pErhaL un pakkam vizhunthaalum
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
athu oru kaalaththum unnai aNuhidaathaE
உன் தேவன் உன் தாபரமே -2— அவர்
un dEvan un thaaparamaE
தேவன் உன் அடைக்கலமே
dEvan un adaikkalamaE
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
oru pollaappum unnai sErumO
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
oru vaathaiyum un koodaaraththaiyaE
அணுகாமலே காத்திடுவார் -2— அவர்
aNuhaamalaE kaaththiduvaar
உன் வழிகளிலெல்லாம்
un vazhihaLilellaam
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
unnai thootharhaL kaaththiduvaar
உன் பாதம் கல்லில் இடறாதபடி
un paatham kallil idaraathapadi
தம் கரங்களில் ஏந்திடுவார் -2— அவர்
tham karangaLil yEnthiduvaar
சிங்கத்தின் மேலும் நடந்து
singaththin mElum nadanthu
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
valu sarppaththaiyum mithippaai
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
avar naamaththai nee mutrum nambinathaal
உன்னை விடுவித்து காத்திடுவார் -2— அவர்
unnai viduviththu kaaththiduvaar
ஆபத்திலும் அவரை நான்
aabaththilum avarai naan
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
nOkki kooppidum vELaiyilum
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
ennai thappuviththaE mutrum ratchippaaraE
என் ஆத்தும நேசரவர் -2— அவர்
en aaththuma nEsaravar