ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,
aathaaram nee thaan iyya en thuraiyaE
ஆதாரம் நீ தான் ஐயா
aathaaram nee thaan iyya
சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்
soothaam ulahil naan theethaal mayangkaiyil
மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
maathaa pithaavennai theethaai mathikkaiyil
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,
matOrkku patraEthaiyaa yeLiyan mEl
மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு — ஆதாரம்
matOrkku patraEthaiyaa yeLiyanukku
நாம் , தான் துணையென நயந்துரை சொன்னவர்
naam thaan thuNaiyena nayanthurai sonnavar
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை
nataatril vittaaraiyaa thaniyanai
நட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு — ஆதாரம்
nataatril vittaaraiyaa thaniyanukku
கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையே
katrOr perumaiyaE matrOr arumaiyaE
வற்றாக் கிருபை நதியே , என்பதியே
vatraak kirubai nathiyaE enpathiyaE
வற்றாக் கிருபை நதியே , என்பதியே — ஆதாரம்
vatraa kirubai nathiyaE enpathiyaE
சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
sothanai yadarnthu vEthanai thodarnthu
துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே,
thukkam mihum vELaiyil en suhirthamaE
துக்கம் மிகுவேளையில் , உன் தாசனுக்கு — ஆதாரம்
thukkam mihum vELaiyil un thaasanukku