கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
Karththarin panthiyil vaa -sahOtharaa
கர்த்தரின் பந்தியில் வா. -2
karththarin panthiyil vaa
கர்த்தர் அன்பாய்ச் சொந்த இரத்தத்தைச் சிந்தின
karththar anbaai sontha iraththaththai sinthina
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி – கர்த்தரின்
kaaraNaththai mana pooraNamaai eNNi
ஜீவ அப்பம் அல்லோ?
jeeva appam allO
கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?
kirisththuvin thiru sareeram allO
பாவ மனங் கல்லோ?
paava manang kallO
உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?
unakkaai pahirappatta thallO
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
dEva kumaaranin jeeva appaththai nee
தின்று அவருடன் என்றும் பிழைத்திட – கர்த்தரின்
thintru avarudan entrum pizhaiththida
தேவ அன்பைப் பாரு
dEva anbai paaru
கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு
kirisththuvin seeshar kurai theeru
பாவக் கேட்டைக் கூறு
paava kEttai kooru
ராப்போசன பந்திதனில் சேரு
raappOsana panthithanil sEru
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
saavukkuriya maa paavamuLLa lOham
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே – கர்த்தரின்
thannil manam vaiththu anniyan aahaathaE
அன்பின் விருந்தாமே
anbin virundhaamaE
கர்த்தருடன் ஐக்கிய பந்தி யாமே
karththarudan ikkiya panthiyaamaE
துன்பம் துயர் போமே
thunbam thuyar pOmaE
இருதயம் சுத்த திடனாமே
irudhayam suththa thidanaamaE
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
inbam mihum dEva anbin virundhukku
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்
yEdhu thaamathamum illaathippOthaE vaa