Showing posts with label C. Show all posts
Showing posts with label C. Show all posts

raajaathi raajan yEsu yEsu maharajan | ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன்

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
unnathaththin thootharhaLaE ontraaha koodungaL
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்
mannan yEsu naatharukkaE vaanmudi soottungaL

ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
raajaathi raajan yEsu yEsu maharajan -avar
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
raajjiyam puvi engum maha maatchiyaai viLanga
அவர் திரு நாமமே விளங்க – (2)
avar thiru naamamaE viLanga
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
allEluyah allEluyah allEluyahvaE
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே
alba omEha avarkaE allEluyavaE

நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
naala dEsaththiluLLOraE nadanthu vaarungaL
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்-ராஜாதி
mElOha naatharukkaE meimudi soottungaL

சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்
chinna naaduhaLai vittu seekkiramEhungaL
உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி
unnatharaam saalEmukku pOi mudi soottungaL

இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
yEsuvennum naamaththaiyaE ellaarum paadungaL
ராஜாதி ராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் – ராஜாதி
raajaathi raajan thalaikku nanmudi soottungaL

சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
sahala koottaththaarhaLaE saashtaangam seiyungaL
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்
mahaththuva raasarivaraE maamudi soottungaL – ராஜாதி

EngaL dEvan neerantrO | எங்கள் தேவன் நீரன்றோ


எங்கள் தேவன் நீரன்றோ 
engaL dEvan neerantrO
வாக்கு மாறாதவர் அன்றோ -2
vaakku maaraathavar antrO
  எம்மை தெரிந்தெடுத்தீர் எங்கள் தேவனே 
  Emmai therintheduththeer engaL dEvanaE
  பெயர் சொல்லி அழைத்த இயேசுவே -2
  peyar solli azhaiththa yEsuvaE

நீரே என் தேவன் நீரே என் அடைக்கலம் 
neeraE en dEvan neeraE en adaikkalam
நீரே என் கோட்டை அன்றோ
neeraE en kOttai antrO                                      (2)
  உம்மை ஆராதிப்பேன் என்றும் தேவனே 
  ummai aaraathippaEn entrum dEvanaE
  உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் 
  ummai entrentrum aaraathippaEn

வானம் உமது சிங்காசனம் 
vaanam umathu singaasanam
பூமி உமது பாதபடி -2
poomi umathu paathapadi
  உம்  வார்த்தைகள் என்றும் மாறாதது 
  um vaarththaihaL entrum maaraathathu
  வாக்குத்தத்தங்கள் ஒன்றும் ஒழியாதது -2 -நீரே என் தேவன்
  vaakkuththaththangaL ontruim ozhiyaathathu 

உம் வழிகள் உயர்ந்தவைகள் 
um vazhihaL uyarnthavaihaL
உம் நினைவுகள் பெரியவைகள் -2
um ninaivuhaL periyavaihaL
  எங்கள் நினைவுகள் என்றும் உமதாகட்டும் 
  engaL ninaivuhaL entrum umathaahattum
  எங்கள் வழிகளும் என்றும் உமதாகட்டும் -2 -நீரே என் தேவன்
  engaL vazhihaLum entrum umathaahattum

உம்மை போற்றி புகழ்ந்திட 
ummai pOtri puhazhnthida
உம்  நாமத்தை பிரஸ்தாபிக்க -2
um naamaththai pirasthaabikka
  எங்கள் வாழ்நாளெல்லாம் புது வல்லமைகள் 
  engaL vaazhnaaLellaam puthu vallamaihaL
  எங்கள் ஆண்டுகள் எல்லாம் புத்தாண்டுகள் -2 -நீரே என் தேவன்
  engaL aaNduhaL ellaam puththaaNduhaL
  எங்கள் கண்ணீரை துடைத்தவரே 
  
engaL kaNNeerai thudaiththavaraE
கரம் பிடித்து தூக்கினீரே -2
karma pidiththu thookkineeraE
  எங்கள் போராட்டங்கள் என்றும் ஜெயம் ஆகட்டும் 
  engaL pOraattangaL entrum jeyam aahattum
  எம்மை ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் -2 -நீரே என் தேவன்
  Emmai aanantha thailaththaal abishEhiyum


Natchaththirak koottam (SanthOsha subathinam)| நட்சத்திரக் கூட்டம் (சந்தோஷ சுபதினம் )

நட்சத்திரக் கூட்டம்  -ல..ல..ல..லா.
natchaththirak koottam -la..la..la..laa
புன்னகைத்  தூவி  -ல..ல..ல..ல..லா..
punnahaith thoovi -la..la..la..la..laa
புல்வெளி ஆனந்த  நடனமாடி 
pulveLi aanantha nadanamaadi
  பூவுலகின் அதிபதி தான் 
  poovulahin athipathi thaan
  பாருலகில் அவதரித்தார் 
  paarulahil avathariththaar
  சந்தோஷ சுபதினம் 
santhOsha subathinam
ஆ..ஆ..ஆ..ஆ -2
aa..aa..aa..aa..

பகரிக  சச  கக  பப 
pakarisa sasa kaka papa
பரிசரி  பப தத சச 
parisari papa thatha sasa
சத பத  சகரிச தப 
satha patha sakarisa thapa
ஆ..ஆ..ஆ..ஆ
aa..aa..aa..aa..

தேவக்  குமாரனாம் இயேசு -ஆ..ஆ..ஆ..
dEvak umaaranaam yEsu -aa..aa..aa..
அன்னை மரியின்  மைந்தன் -ஆ..ஆ..ஆ..
annai mariyin mainthan -aa..aa..aa..
  பெத்லகேம் நகரினில் 
  bethlehEm naharinil
  ஆதரவில்லாமல் 
  aatharavillaamal
  புல்  குடில் வந்து  பிறந்த -அவர் -நட்சத்திரக் 
  pul kudil vanthu pirantha -avar 

ஆட்டிடையர் வார்த்தை கேட்டு  -ஆ..ஆ..ஆ..
aattidaiyar vaarththaik kEttu -aa..aa..aa..
ஆட்டின் தொழுவத்தினை விட்டு -ஆ..ஆ..ஆ..
aattin thozhuvaththinai vittu -aa..aa..aa..
  ஆத்மாவின் மேய்ப்பராம் 
  aathmaavin mEipparaam
  இயேசுவை தரிசிக்க 
  yEsuvai tharisikka
  ஆவலோடே  ஓடி ஓடி வந்தார் -அவர் -நட்சத்திரக் 
  aavalOdaE Odi Odi vanthaar -avar

பாரப்பட்டோரைத் தாங்க -ஆ..ஆ..ஆ..
paarappattOraith thaanga -aa..aa..aa..
துக்கிதர்க் கானந்தம் அருள -ஆ..ஆ..ஆ..
thukkithark kaanantham aruLa -aa..aa..aa..
  இந்த நல் மேய்ப்பரை 
  intha nal mEipparai
  என்றென்றும் பின்பற்ற 
  entrentrum pinpatra
  அன்பின் கருவிகளாய்  தீர -நாங்கள் -நட்சத்திரக் 
anbin karuvihaLaai theera -naangaL



Song Arrangement
------------------------- 
Time: 


Prelude chords(2):

1 / 3 / 4 / 1

6 / 3 / 4 / 1


1                                                                              

natchaththirak koottam -la..la..la..laa  

1

punnahaith thoovi -la..la..la..la..laa

6                              5                1                            6                         

pulveLi aanantha nadanamaadi  poovulahin athipathi thaan

   6                  5                               1                    5 / 1               

  paarulahil avathariththaar  santhOsha subathinam

6          1

aa..aa..aa..aa..  - 2


SWARAM:

1                         5

pakarisa sasa kaka papa  parisari papa thatha sasa      Fill-in Lead:

6

satha patha sakarisa thapa                         G E D  G D C  A G E A

6           1

aa..aa..aa..aa..                                  C A G  A G E  G E D C


VERSE:

1             6

dEvak umaaranaam yEsu -aa..aa..aa..          A C

1           5

annai mariyin mainthan -aa..aa..aa..         G A C  A C D 

  5         1          4       1               

  bethlehEm naharinil  aatharavillaamal

1                5 

pul kudil vanthu pirantha -avar 

1          5      1

pul kudil vanthu pirantha                    C E G  D E C 




Anbil ennai parisuththanaakka | அன்பில் என்னை பரிசுத்தனாக்க

அன்பில் என்னை பரிசுத்தனாக்க

anbil ennai parisuththanaakka

உம்மைக் கொண்டு சகலத்தையும்

ummai koNdu sahalaththaiyum                

  உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ

  uruvaakkiyaE neer mutharpEraaneerO

  தந்தை நோக்கம் அநாதியன்றோ -2

  thanthai nOkkam anaathiyantrO


என் இயேசுவே நேசித்தீரோ

en yEsuvaE nEsiththeerO

எம்மாத்திரம் மண்ணான நான்

emmaaththiram maNNaana naan

  இன்னும் நன்றியுடன் துதிப்பேன் -2

  innum nantriyudan thuthippaEn


மரித்தோரில் முதல் எழுந்ததினால்

mariththOril muthal ezhunthathinaal

புது சிருஷ்டியின் தலையானீரே

puthu sirushtiyin thalaiyaaneeraE

  சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே

  sabaiyaam um sareeram seer porunthidavaE

  ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை -2– என்

  yeevaai aLiththeer appOsththalarai


முன்னறிந்தே என்னை அழைத்தீரே

munnarinthaE ennai azhaiththeeraE

முதற்பேராய் நீர் இருக்க

mutharpEraai neer irukka

  ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே

  aaviyaal abishEhiththeer ennaiyumaE

  உம் சாயலில் நான் வளர -2 – என்

  um saayalil naan vaLara


வருங்காலங்களில் முதற்பேராய்

varungkaalangaLil muthar pEraai

நீர் இருக்க நாம் சோதரராய் 

neer irukka naam sOthararaai

  உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி

  um kirubaiyin vaarththaiyai veLippaduththi

  ஆளுவோம் புது சிருஷ்டியிலே – என்

  aaLuvOm puthu sirushtiyilaE


நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே

nantriyaal en uLLam nirainthiduthaE

நான் எப்படி பதில் செய்குவேன் -2

naan eppadi pathil seihuvaEn

  உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட

  ummahaa nOkkam mutrumaai niraivErida

  என்னை தந்தேன் நடத்திடுமே – என்

  ennai thanthaEn nadaththidumaE



thOththiram yEsu naathaa | தோத்திரம் இயேசுநாதா

 தோத்திரம் இயேசுநாதா

thOththiram yEsu naathaa

உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா -2

umakkentrum thOththiram yEsu naathaa

  தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்

  thOththiram seiyhirOm ninnadiyaar

  திரு நாமத்தின் ஆதரவில் ! -2

  thiru naamaththin aatharavil


வான தூதர் சேனைகள்

vaana thoothar sEnaihaL

மனோகர கீதங்களால் எப்போதும் -2

manOhara keethangaLaal eppOthum

  ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்

  Oivintri paadi thuthikka perum

  மன்னவனே உமக்கு ! -2

  mannavanaE umakku


இத்தனை மகத்துவமுள்ள

iththanai mahathvamuLLa

பதவி இவ்வேழைகள் எங்களுக்கு -2

pathavi ivvELaihaL engaLukku

  எத்தனை மாதயவு நின் கிருபை

  eththanai maa thayavu nin kirubai

  எத்தனை ஆச்சரியம் ! -2

  eththanai aachchariyam


நின் உதிரமதினால்

nin uthiramathinaal

திறந்த நின் ஜீவ புது வழியாம் -2

thirantha nin jeeva puthu vazhiyaam

  நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி

  nin adiyaarku pithaavin sannithi

  சேரவுமே சந்ததம் ! -2

  sEravumaE santhatham


இன்றைத் தினமதிலும்

intrai thinamathilum

ஒருமித்துக் கூட உம் நாமத்தினால் -2

orumiththu kooda um naamaththinaal

  தந்த நின் கிருபைக்காக  உமக்கென்றும்

  thantha nin kirubaikkaaha umakkentrum

  ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ! -2

  sthOththiram sthOththiramaE


நீரல்லால் எங்களுக்குப்

neerallaal engaLukku

பரலோகில் யாருண்டு ஜீவநாதா -2

paralOhil yaaruNdu jeeva naathaa

  நீரேயன்றி இகத்தில் வேறொரு

  neerEyantri ihaththil vEroru

  தேட்டமில்லை பரனே ! -2

  thEttamillai paranaE



AaththumamaE en uLLamaE | ஆத்துமமே என் உள்ளமே

ஆத்துமமே என் உள்ளமே 
aaththumamaE en uLLamaE
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்   (2)
aaNdavarai nee thinam thuthippaai
அன்பினால் உன்னை அழைத்தவரை 
anbinaal unnai azhaiththavarai

நாளொரு மேனியும் 
naaLoru mEniyum
பொழுதொரு வண்ணமாய் -2
pozhuthoru vaNNamaai
  நன்மைகள் ஈந்துன்னை வளர்த்தவரே -ஆத்துமமே
  nanmaihaL yeenthunnai vaLarththavaraE

ஜீவனை கொடுத்துன்னை மீட்டவரை  -தூதர் 
jeevanai koduththunnai meettavarai -thoothar
ஜீவ போஜனஞ் சொரிந் தீந்தவரை -2
jeeva pOjananj sorinth theenthavarai
  ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாய் நின்றிட 
  jeevanuLLOrku nee saatchiyaai nintrida
  ஜீவனால் நிறைத்துன்னை காத்தவரை -2 -ஆத்துமமே
  jeevanaal niraiththunnai kaaththavarai

நடத்திய வழிகள் நோக்கிடுவாய் -அவர் 
nadaththiya vazhihaL nOkkiduvaai -avar
நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய் -2
nalhiya kirubaihaL ninaiththiduvaai
  ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் 
  aabaththil adaikkalam aaruthal innalil
  அளித்தவர் அருமை இயேசுவல்லோ -2 -ஆத்துமமே
  aLiththavar arumai yEsuvallO

பார்வோனின் சேனைகள் தொடர்ந்த போதும்  -உயர் 
paarvOnin sEnaihaL thodarntha pOthum -uyar
யோர்தானின் அலைகள் புரண்ட போதும் -2
yOrthaanin alaihaL puraNda pOthum
  அக்கினி மெகஸ்தம்பமாய் நின்றவர் 
  akkini mEhasthampamaai nintravar
  அரணும் கேடகமாயிருந்தார் -2 -ஆத்துமமே
  araNum kEdahamaayirunthaar

தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னை 
thootharum ariyaatha thoothuhaL yeenthunnai
தாசனாய் உயர்த்தினார் தாரணியில் -2
thaasanaai uyarththinaar thaaraNiyil
  பாதகனாய் அலைந்தே அழிந்த உன்னை 
  paathahamaai alainthaE azhintha unnai
  தேடியே கரம் தந்தார் வாழ்த்திடுவாய் -2 -ஆத்துமமே
  thEdiyaE karam thanthaar vaazhththiduvaai

ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே -புது 
aaviyin varangaL joliththidavaE -puthu
ஜீவனின் ஊற்றுகள் சுரந்திடவே -2
jeevanin ootruhaL suranthidavaE
  சுவிசேஷ தொனியும் பறந்திடவே 
  suvisEsha thoniyum paranthidavaE
  ஜெய தொனி கீதங்கள் முழங்கிடவே -2 -ஆத்துமமே
  jeya thoni keethangaL muzhangidavaE

  

Aathi thiru vaarthai diviya | ஆதித் திருவார்த்தை திவ்விய

ஆதித் திருவார்த்தை திவ்விய 
aathi thiru vaarththai divya
அற்புதப் பாலனாகப் பிறந்தார் 
arputha paalanaahap piranthaar
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட 
aathanthan paavaththin saabaththai theerththida
ஆதிரையோரையீ டேற்றிட
aathiraiyOraiyee dEtrida

மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து
maasatra jOthi thiriththuva thOr vasthu
மரியாம் கன்னியிட முதித்து 
mariyaam kanniyidam uthiththu
மகிமையை மறந்து தமை வெறுத்து 
mahimaiyai maranthu thamai veruththu
மனுக்குமாரன் வேஷமாய்
manukkumaaran vEshamaai
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகி 
unna thahanjeer muhanjeer vaasahi
மின்னுச்சீர் வாசகி  மேனிநிறம் எழும்
minnunjeer vaasahi mEni niram ezhum
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
unnatha kaathalum porunthavaE sarva
நன்மைச் சொருபனார் ரஞ்சிதனார்
nanmai sorupanaar ranjithanaar

தாம் தாம் தன்னரர் வன்னரர்
thaam thaam thannarar vannarar
தீம் தீம் தீமையகற்றிட
theem theem theemai yahatrida
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
sangirtha sangirtha sangirtha santhO
ஷமென சோபனம்பாடவே
shamana sOpanam paadavaE
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
ingirtha ingirtha ingirtha namathu
  இருதயத்திலும் எங்கும் நிறைந்திட -2– ஆதி
  irudhayaththilum engum nirainthida

ஆதாம் ஓதி  ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து
aathaam Othi yEvinaar aabirahaam visuvaasaviththu
யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல் 
yuthar simmaasanaththaaLuhai sengkOl
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் -தாம் தாம்
yeesaai vangishathaanuthiththaar

பூலோகப் பாவ விமோசனர் பூரண கிருபையின் வாசனர்
poolOha paava vimOsanar pooraNa kirubaiyin vaasanar
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
mElOha raajaathi rajan simmaasanan
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் -தாம் தாம்
mEnmai mahimai pirathaapan vanthaar

அல்லேலூயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே
allEluyah sangeerththanam aanantha keethangaL paadavaE
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
allaihaL thollaihaL ellaam neengida
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் -தாம் தாம்
arputhan meiparan tharparanaar



aa ambara umbaramum puhazhunthiru | ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
aa ambara umparamum puhazhunthiru
ஆதிபன் பிறந்தார்
aathiban piranthaar

ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார்
aathiban piranthaar -amalaathiban piranthaar

அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! – நவ
anbaana paranaE -aruL mEvung kaaraNanaE -nava
அச்சய சச்சித – ரட்சகனாகிய
achchaya sachchitha ratchahanaahiya
உச்சிதவரனே! — ஆ! அம்பர
uchchitha varanaE 

ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, – அன்று
aatham pavamara neethan niraivEra antru
அல்லிராவினில் – தொல்லையிடையினில்
alli raavinil thollaiyidaiyinil
புல்லணையிற் பிறந்தார். — ஆ! அம்பர
pullaNaiyir piranthaar

ஞானியர் தேட , – வானவர் பாட , -மிக
gnaniyar thEda vaanavar paada miha
நன்னய , உன்னத – பன்னரும் ஏசையா
nannaya unnatha pannarum yEsaiyya
இந்நிலம் பிறந்தார். — ஆ! அம்பர
innilam piranthaar

கோனவர் நாட , – தானவா கொண்டாட – என்று
kOnavar naada thaanavaa koNdaada entru
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
kOththirar thOththiranj saatrida vE yutha
கோத்திரன் பிறந்தார். — ஆ! அம்பர
kOththiran piranthaar

விண்ணுடு தோண , – மன்னவர் பேண , – ஏரோது
viNNudu thONa mannavar pENa yErOthu
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
mainthanin sinthai yazhunthi kalangida
விந்தையாய்ப் பிறந்தார். — ஆ! அம்பர
vinthaiyaai piranthaar



Blessed assurance

Blessed assurance, Jesus is mine!      
O what a foretaste of glory divine!
Heir of salvation, purchase of God,
Born of His Spirit, washed in His blood.
 
This is my story, this is my song,
Praising my Savior all the day long;
This is my story, this is my song,
Praising my Savior all the day long.
 
 Perfect submission, perfect delight!
Visions of rapture now burst on my sight;
Angels descending bring from above
Echoes of mercy, whispers of love.
 
Perfect submission - all is at rest,
I in my Savior am happy and blest;
Watching and waiting, looking above,
Filled with His goodness, lost in His love.


Bless the Lord, O my soul


Bless the Lord, O my soul              
O my soul
Worship His Holy name
Sing like never before
O my soul
worship Your Holy name

When The sun comes up;
it's a new day dawning
It's time to sing Your song again
Whatever may pass and
whatever lies before me
Let me be singing when the evening comes

You're rich in love and
You're slow to anger
Your name is great and
Your heart is kind
For all Your goodness,
I will keep on singing
10,000 reasons for my heart to find

And on that day
when my strength is failing
The end draws near
and my time has come
Still my soul will sing
Your praise unending
10,000 years and then forever more


Come, Thou fount of every blessing,

Come, Thou fount of every blessing,
Tune my heart to sing Thy grace,
Streams of mercy, never ceasing,
Call for songs of loudest praise.
While the hope of endless glory
Fills my heart with joy and love,
Teach me ever to adore Thee,
May I still Thy goodness prove.

Here I raise my Ebenezer,
Hither by Thy help I've come,
And I hope, by Thy good pleasure,
Safely to arrive at home.
Jesus sought me when a stranger,
Wandering from the fold of God,
He, to rescue me from danger,
Interposed His precious blood.

Oh, to grace how great a debtor
Daily I'm constrained to be,
Let that grace now like a fetter
Bind my wandering heart to Thee:
Prone to wander, Lord, I feel it,
Prone to leave the God I love.
Here's my heart, oh, take and seal it,
Seal it for Thy courts above.

Oh, that day when freed from sinning,
I shall see Thy lovely face,
Clothed then in the blood washed linen
How I'll sing Thy wondrous grace!
Come, my Lord, no longer tarry,
Take my ransomed soul away,
Send Thine angels soon to carry
Me to realms of endless day.


dEvanaE ummai tharuhiraEn | தேவனே என்னைத் தருகிறேன்

தேவனே என்னைத் தருகிறேன்
dEvanaE ennai tharuhiraEn
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
um paathaththil ennai padaikkintraEn
யாவையும் நீர் தந்ததால்
yaavaiyum neer thanthathaal
உம்மிடம் திரும்ப தருகின்றேன்
ummidam thirumba tharuhiraEn

எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
enthan vaazhvin mEnmai ellaam
உந்தனுக்கே தருகிறேன் -2
unthanukkaE tharuhiraEn
  எங்கள் ஆராதனை உமக்கே
  engaL aaraathanai umakkaE
  எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே -2
  engaL vaazhnaaLellaam umakkaE

ஊழியம் நீர் தந்தது
oozhiyam neer thanthathu
உயர்வுகள் நீர் தந்தது
uyarvuhaL neer thanthathu
மேன்மைகள் நீர் தந்தது
mEnmaihaL neer thanthathu
செல்வமும் நீர் தந்தது -எந்தன் வாழ்வின்
selvamum neer thanthathu

தரிசனம் நீர் தந்தது
tharisanam neer thanthathu
தாகமும் நீர் தந்தது
thaahamum neer thanthathu
கிருபைகள் நீர் தந்தது
kirubaihaL neer thanthathu
அபிஷேகம் நீர் தந்தது -எந்தன் வாழ்வின்dE
 abishEham neer thanthathu


dEva pirasannamaE irangiyaE vanthiduthaE | தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே -2
dEva pirasannamaE irangiyaE vanthiduthaE

  தேவனின்  மகிமை  நம்மை எல்லாம்
  dEvanin mahimai nammai ellaam
  பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே -2 -தேவ
  parisuththa sthalaththil mooduthaE

தேவனின்  நல்ல  தூதர்கள்
dEvanin nalla thootharhaL
நம்மை  சுற்றில்லும்  இங்கு  நிற்கிறார் -2 - தேவனின்  
nammai sutrilum ingu nirkiraar

தேவனின்  தூய  அக்கினி  – இங்கு
dEvanin thooya akkini -ingu
நமக்குள்ளே  இறங்கி  வந்திடுதே -2 - தேவனின்  
namakkuLLaE irangi vanthiduthaE

வானத்தின் அபிஷேகமே  – இன்று
vaanaththin abishEhamaE -intru
நமக்குள்ளே நிரம்பி  வழியுதே -2-- தேவனின்  
namakkuLLaE nirambi vazhiyuthaE




dEva dEvanai thuthiththiduvOm | தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம்
dEva dEvanai thuthiththiduvOm
சபையில் தேவன் எழுந்தருள
sabaiyil dEvan ezhuntharuLa
  ஒரு மனதோடு அவர் நாமத்தை
  oru manathOdu avar naamaththai
  துதிகள் செலுத்திப் போற்றிடுவோம் -2
  thuthihaL seluththi pOtriduvOm

அல்லேலூயா தேவனுக்கே
allEluyah dEvanukkaE
அல்லேலூயா கர்த்தருக்கே
allEluyah karththarukkaE        (2)
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
allEluyah parisuththarkkaE
அல்லேலூயா இராஜனுக்கே
allEluyah raajanukkaE

எங்கள் காலடி வழுவிடாமல்
engaL kaaladi vazhuvidaamal
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
engaL nadaihaLai sthirappaduththum
  கண்மணிபோல காத்தருளும்
  kaNmaNi pOla kaaththaruLum
  கிருபையால் நிதம் வழி நடத்தும் -2 -அல்லேலூயா
  kirubaiyaal nitham vazhi nadaththum

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
jeevanuLLa naatkaLellaam
நன்மை கிருபை தொடர்ந்திடவே
nanmai kirubai thodarnthidavaE
  வேத  வசனம் கீழ்ப்படிவோம்
  vEtha vasanam keezhppadivOm
  தேவ சாயலாய் மாறிடுவோம் -2 -அல்லேலூயா
  dEva saayalaai maariduvOm

வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
vaanaththil adaiyaaLam thOntridavaE
இயேசு மேகத்தில் வந்திடுவார் -2
yEsu mEhaththil vanthiduvaar
  நாமும் அவருடன் சேர்ந்திடவே
  naamum avarudan sErnthidavaE
  நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம் -2 -அல்லேலூயா
  nammai aayaththamaakki koLvOm


Ezhunthaar iravan | எழுந்தார் இறைவன்

எழுந்தார் இறைவன் – ஜெயமே
ezhunthaar iraivan -jeyamae
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
jeyamenavaE ezhunthaar iraivan

விழுந்தவரைக் கறையேற்றப்
vizhunthavarai karaiyEtra
பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற
paava thamizhntha manukkulaththai maatra
விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற — எழுந்தார்
viNNulahukkezhunthu naam avaraiyaE pOtra 

செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
seththavar meeNdum pizhaikka -uyar
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
niththiya jeevanai aLikka -dEva
பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்
bakthar yaavarum  kaLikka  -ezhunthaar

கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
karuthiya kaariyam vaaikka -dEva
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
suruthi mozhihaLellaam kaakka -nam
இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்
iru thiraththaaraiyum sErkka

சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
saavin bayangaraththai ozhikka -ketta
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
aaviyin vallamaiyai azhikka -ip
பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்
poovin meethu sabai sezhikka 

ஏதுந்  வினை செய்யாத் தூயன்
yEthum vinai seyya thooyan
எப்போதுமே நன்மைபுரி நேயன் – தப்பாது
eppOthumaE nanmai puri nEyan -thappaathu
காத்திடும் நல்லாயன் — எழுந்தார்
kaaththidum nallaayan


En yEsu raja saarOnin rOja | என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
en yEsu raja sarOnin rOja
உம் கிருபை தந்தாலே போதும் -2
um kirubai thanthaalaE pOthum
  அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல
  alai mOthum vaazhvil alaiyaamal sella
  உம் கிருபை முன் செல்ல அருளும் -2
  um kirubai mun sella aruLum

கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்
kadal ennum vaazhvil kalangum en padahil
சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா -2
sukkaan pidiththu nadaththum en dEva
  கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ
  kadalinai kaNdiththa karththar neer allavO
  கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் -2 – என் இயேசு
  kadavaatha ellaiyai en vaazhvil thaarum

பிளவுண்ட மலையே புகலிடம் நீரே
piLavuNda malaiyaE puhalidam neeraE
புயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும் -2
puyal veesum vaazhvil paathukaaththaruLum
  பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாது
  paarinil kaariruL sEthangaL aNukaathu
  பரமனே என் முன் தீபமாய் வாரும் -2 – என் இயேசு
  paramanaE en munaE theepamaai vaarum

எதிர்க் காற்று வீச எதிர்ப்போரும் பேச
yethir kaatru veesa yethirpOrum pEsa
என்னோடிருப்பவர் பெரியவர் நீரே -2
ennOdiruppavar periyavar neeraE
  இயேசுவே யாத்திரையில் கரை சேர்க்கும் தேவன்
  yEsuvaE yaaththiraiyil karai sErkkum dEvan
  என் ஜீவ படகின் நங்கூரம் நீரே (2) – என் இயேசு
  en jeeva padahinil nangooram neeraE




En meetparaE en ratchaga | என் மீட்பரே என் இரட்சகா

என் மீட்பரே என் இரட்சகா
en meetparaE en ratchaga
என் தேவனே என் கேடகம்
en dEvanaE en kEdagam
நான் நம்பின என் கோட்டையும்
naan nambina en kOttaiyum
என் துருகமும் நீரே
en thuruhamum neeraE

துதிகளின் பாத்திரனே திருசித்தம் போல் நடத்தி
thuthihaLin paththiranaE thiru siththam pOl nadaththi
துர்ச்சனப் பிரவாகத்தில் தேற்றினீர் போற்றுவேனே -2
thurchana piravaahaththil thEtrineer pOtruvaEnaE
  சதி நாச மோசங்களில் சத்துருவின் பயங்களிலும் -2
  sathi naasa mOsangaLil saththuruvin payangaLilum
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே சரணம் சரணம் மேசியாவே -2 -என் மீட்பரே 
saarnthummai naan jeevippaEnaE saraNam saraNam mEssiyaavaE

தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான்
thinam thinam um aruLaal theemaihaL velluvaEn naan
கனமகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே -2
gana mahimai umakkaE seluththuvaEnaE
  உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன் -2
  ummaalaE oruvanaaga sEnaikkuL paainthiduvaEn
வாழ்நாள் எல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே -2-என் மீட்பரே 
vaazhnaaL ellaam neer en thanjam vazhi nadaththum mEssiyaavaE


dEvanaE naan umathaNdaiyil | தேவனே நான் உமதண்டையில்

தேவனே நான் உமதண்டையில்
dEvanaE naan umathaNdaiyil
இன்னும் நெருங்கிச்              (2)
innum nerungi
சேர்வதே என் ஆவல் பூமியில்
sErvathaE en aaval poomiyil

மாவலிய கோரமாக வன் சிலுவை
maa valiya kOramaaha van siluvai
மீதினில் நான்
meethinil naan
கோவே தொங்க நேரிடினும்
kOvaE thinga nEridinum
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
aavalaai ummaNdai sErvaEn

யாக்கோபைப் போல் போகும் பாதையில் பொழுது பட்டு
yaakkObai pOl pOhum paathaiyil pozhuthu pattu
இராவின்  இருள் வந்து மூடிட
raavin iruL vanthu moodida
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
thookkaththaal naan kallil saainthu
தூங்கினாலும் என் கனாவில்
thoonginaalum en kanaavil
நோக்கியும்மைக் கிட்டி சேர்வேன்
nOkkiyummai kitti sErvaEn
வாக்கடங்கா நல்ல நாதா -தேவனே நான் 
vaakkadangaa nalla naathaa

பரத்துக்கேறும் படிகள் போலவே
paraththukkErum padihaL pOlavaE
என் பாதை தோன்றப்
en paathai thOntra
பண்ணும் ஐயா என்றன்  தேவனே
paNNum iyyaa entran dEvanaE
கிருபையாக நீர் எனக்குத்
kirubaiyaaha neer enakku
தருவதெல்லாம் உமதண்டை
tharuvathellaam umathaNdai
அருமையாய் என்னையழைத்து
arumaiyaai ennaiyazhiththu
அன்பின் தூதனாக செய்யும்  -தேவனே நான் 
anbin thoothanaaha seiyyum

நித்திரையினின்று விழித்துக் காலை எழுந்து
niththiraiyinintru vizhiththu kaalai ezhunthu
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
karththaavaE naan ummai pOtruvaEn
இத்தரையில் உந்தன் வீடாய்
iththaraiyil unthan veedaai
என் துயர்க் கல் நாட்டுவேனே
en thuyark kal naattuvaEvaE
என்றன் துன்பத்தின் வழியாய்
entran thunbaththin vazhiyaai
இன்னும்  உம்மைக் கிட்டி சேர்வேன் -தேவனே நான் 
innum ummai kitti sErvaEn

ஆனந்தமாம் செட்டை விரித்துப் பரவசமாய்
aananthamaai settai viriththu paravasamaai
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
aahaayaththil yErip pOyinum
வான மண்டலங் கடந்து
vaana maNdalang kadanthu
பறந்து மேலே சென்றிடினும்
paranthu mElaE sentridinum
மகிழ்வுறு காலத்திலும் நான்
mahizhvuru kaalaththilum naan
மருவியும்மைக் கிட்டிக் சேர்வேன் -தேவனே நான் 
maruviyummai kitti sErvaEn




En dEva ummai paaduvaEn | என் தேவா உம்மை பாடுவேன்

என் தேவா உம்மை பாடுவேன் - இனி
en dEva ummai paaduvaEn -ini
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
entrentrum sthOththarippaEn
என்னுயிரே எந்தன் இயேசுவே -முழு
ennuyiraE enthan yEsuvaE -muzhu
மனதால் ஸ்தோத்தரிப்பேன்
manathaal sthOththarippaEn

எனது வலதுப்பக்கம் நீரே
enathu valathu pakkam neeraE
அசைக்கப்படுவதில்லை நானே
asaikkappaduvathillai naanaE
  ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் -2-என் தேவா
  sthOththiram sthOththiram

செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதே
seiytha nanmaihaL ulagam koLLaathaE
எந்தன் வாழ்வினிலே -2
enthan vaazhvinilaE
 நினைத்து நினைத்து நன்றி சொல்லத்தானே
 ninaiththu ninaiththu nantri sollaththaanaE
 ஆயுள் போதாதே -2
 aayuL pOthaathaE
மலர் போல் உதிர்கின்ற வாழ்வை
malar pOl uthirhintra vaazhvai
நன்றி சொல்லி கழித்திடுவேன்  -என் தேவா 
nantri solli kazzhiththiduvaEn

உண்மையாய் உம்மை கூப்பிடும் போது
uNmaiyaai ummai kooppidum pOthu
நெருங்கி அருகில் வந்தீர் -2
nerungi aruhil vantheer
 உருகி உருகி ஜெபித்திடும் போது
 uruhi uruhi jebiththidum pOthu
 உன்னத பெலன் அளித்தீர் -2
 unnatha belan aLiththeer
உலகத்தையே நான் மறந்து
ulahaththaiyaE naan maranthu
உம்மையே நினைத்திடுவேன் -என் தேவா 
ummaiyaE ninaiththiduvaEn

எந்த பக்கமும் நெருக்கப்பட்டும் நான்
entha pakkamum nerukkappattum naan
ஒடுங்கிப் போகவில்லை -2
odungi pOhavillai
 துன்பத்திலே நான் அமிழ்ந்திட்ட போதும்
 thunbaththilaE naan amizhnthitta pOthum
 கைவிடப்படவுமில்லை -2
 kaividappadavumillai
இயேசுவே என் பக்கபலமே
yEsuvaE en pakka palamaE
இயேசுவே என் துணையே -என் தேவா 
yEsuvaE en thuNaiyaE


Inba keetham thunba nEram | இன்ப கீதம் துன்ப நேரம்

இன்ப கீதம் துன்ப நேரம்
inba geetham thunba nEram
ஈந்தீரே என் இயேசுவே
yeentheeraE en yEsuvaE
  கொல்கொதா  பாதை சிலுவை சுமந்தே
  kolkotha paathai siluvai sumanthaE
  கர்த்தாவே உம்மண்டை வந்தேன் -2
  karththaavaE ummaNdai vanthaEn

பெரு வெள்ளத்தின் புகலிடம் நீரே
peru veLLaththin puhalidam neeraE
பெரும் கன்மலை நிழலே
perum kanmalai nizhalaE
வீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே 
veesidum koNdal kaatrukku othukkaE
வற்றாத நீரூற்றும் நீரே – இன்ப
vatraatha neerootrum neeraE

ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
ooLaiyidum Or paazhum nilaththil
ஊக்கமுடன் என்னைத் தேடி
ookkamudan ennaith thEdi
கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி
kaNdu uNarththi kai thaangi nadaththi
கண்ணின் மணிபோலக் காத்தீர் – இன்ப
kaNNin maNi pOla kaaththeer

போராட்டமான போன வாழ்நாளில்
pOraattamaana pOna vaazh naaLil
நீரோட்டம் மோதும் இன்னலில்
neerOttam mOthum innalil
முற்று முடிய வெற்றி அளித்தீர்
mutru mudiya vetri aLiththeer
குற்றம் குறை நீக்கி காத்தீர் – இன்ப
kutram kurai neekki kaaththeer

உந்தன் சரீர பெலவீன நேரம்
unthan sareera belaveena nEram
எந்தன் கிருபையே போதும்
enthan kirubaiyaE pOthum
என்று உரைத்து என்னை அணைத்து
entru uraiththu ennai aNaiththu
எத்தனையோ நன்மை செய்தீர் – இன்ப
eththanaiyO nanmai seiytheer

கல்வாரிப் பாதை தோல்வியில்லையே
kalvaarip paathai thOlvi illaiyaE
கர்த்தாவே முன்னோடி நீரே
karththaavaE munnOdi neeraE
உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே
um pin nadanthaE ummaith thodarnthaE
உன்னத வீட்டை அடைவேன் – இன்ப
unnatha veettai adaivaEn

அழைத்தவரே உண்மையுள்ளோரே
azhaiththavaraE uNmaiyuLLOraE 
அப்படியே ஜெயம் ஈவார்
appadiyaE jeyam yeevaar
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்
yEsuvaE ummaal jeyam aruLum
எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம் – இன்ப
engaL pithaavukku sthOththiram


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)