Showing posts with label TPM. Show all posts
Showing posts with label TPM. Show all posts

Belamalithemai Puthu Vazhikalil | பெலமளித்தெமைப் புது வழிகளில்

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட
belamaLiththemmai puthu vazhihaLil nadaththida
தாரகம் நீரல்லவோ – 3
thaaraham neerallavO

தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்
thaaraNiyil emakku thayai purinthidum
இயேசு நாயகன் நீரல்லவோ
yEsu naayagan neerallavO

1. இருவரொருமித்தெம்மை வரவழைத்திடில் 
iruvar orumiththemmai vara vazhaiththidil
 திரு சமுகமளிப்பேன் என்றீரே – 3
 thiru samuhamaLippaEn enteeraE 
நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு
neerantri emakkEthu veeramulahiluNdu
விரைந்து எழுந்திடுவீரே
virainthu ezhunthiduveeraE

2. அதிசயமானவர் என்பதுமது பெயர்
athisayamaanavar enbathumathu peyar
அதிசயம் விளங்கச் செய்யுமே – 3
athisayam viLanga seiyumaE
இது சமயம் உமது இதயம் விரும்புவதை
ithu samayam umathu idhayam virumbuvathai
இறைவா விளங்கச் செய்யுமே
iraivaa viLanga seiyumaE

3. பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து
paavihaLumathaNdai sErum uNarvadainthu
தாகமுடன் அண்டிட – 3
thaahamudan aNdida
நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று
naavin arikkaiyinaal naveena idhayam petru
நாதனைப் பின் சென்றிட
naathanai pin sentrida



Azhaikkiraar azhaikkiraar ithO | அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

azhaikkiraar azhaikkiraar ithO

  நீயும் வா உந்தன் நேசர் 

  neeyum vaa unthan nEsar

  ஆவலாய் அழைக்கிறார் இதோ – 2

  aavalaai azhaikkiraar ithO 


பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர் -2

paavaththai yEtravar paliyaai maaNdavar

  கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே

  kalvaariyin mEttinil kaNkoLLaatha kaatchiyaE

கண்டிடும் வேண்டிடும் பாவபாரம் நீக்கிடும் -2 -அழைக்கிறார் 

kaNdidum vENdidum paava paaram neekkidum


நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர் -2

nOyaiyum yEtravar pEyaiyum ventravar

  நீதிபரன் உன் நோயை நிச்சயமாய்  தீர்த்தாரே -2

  neethiparan un nOyai nichchayamaai theerththaaraE

நோயுற்ற உன்னையே நேயமாய்  அழைக்கிறார் -2 -அழைக்கிறார் 

nOyutra unnaiyaE nEyamaai azhaikkiraar 


துன்பம் சகித்தவர் துயரடைந்தவர் -2

thunbam sahiththavar thuyaradainthavar

  இன்னலுற்ற உன்னையே அண்ணல் இயேசழைக்கிறார் -2

  innalutra unnaiyaE aNNal yEsazhaikkiraar

துன்புறும் நெஞ்சமே துரிதமாய்  நீ வாராயோ -2 -அழைக்கிறார் 

thunpurum nenjamaE thurithamaai nee vaaraayO


அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தொங்கினார் -2

anthak kEdadainthavar azhahatru thonginaar

  சொந்தமாக சேர்த்திட இந்தப் பாடடைந்தாரே -2

  sonthamaaha sErththida intha paadadainthaaraE

நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ! -2 -அழைக்கிறார் 

ninthikkum unnaiyum santhippaar neer vaaraayO



Anbil ennai parisuththanaakka | அன்பில் என்னை பரிசுத்தனாக்க

அன்பில் என்னை பரிசுத்தனாக்க

anbil ennai parisuththanaakka

உம்மைக் கொண்டு சகலத்தையும்

ummai koNdu sahalaththaiyum                

  உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ

  uruvaakkiyaE neer mutharpEraaneerO

  தந்தை நோக்கம் அநாதியன்றோ -2

  thanthai nOkkam anaathiyantrO


என் இயேசுவே நேசித்தீரோ

en yEsuvaE nEsiththeerO

எம்மாத்திரம் மண்ணான நான்

emmaaththiram maNNaana naan

  இன்னும் நன்றியுடன் துதிப்பேன் -2

  innum nantriyudan thuthippaEn


மரித்தோரில் முதல் எழுந்ததினால்

mariththOril muthal ezhunthathinaal

புது சிருஷ்டியின் தலையானீரே

puthu sirushtiyin thalaiyaaneeraE

  சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே

  sabaiyaam um sareeram seer porunthidavaE

  ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை -2– என்

  yeevaai aLiththeer appOsththalarai


முன்னறிந்தே என்னை அழைத்தீரே

munnarinthaE ennai azhaiththeeraE

முதற்பேராய் நீர் இருக்க

mutharpEraai neer irukka

  ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே

  aaviyaal abishEhiththeer ennaiyumaE

  உம் சாயலில் நான் வளர -2 – என்

  um saayalil naan vaLara


வருங்காலங்களில் முதற்பேராய்

varungkaalangaLil muthar pEraai

நீர் இருக்க நாம் சோதரராய் 

neer irukka naam sOthararaai

  உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி

  um kirubaiyin vaarththaiyai veLippaduththi

  ஆளுவோம் புது சிருஷ்டியிலே – என்

  aaLuvOm puthu sirushtiyilaE


நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே

nantriyaal en uLLam nirainthiduthaE

நான் எப்படி பதில் செய்குவேன் -2

naan eppadi pathil seihuvaEn

  உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட

  ummahaa nOkkam mutrumaai niraivErida

  என்னை தந்தேன் நடத்திடுமே – என்

  ennai thanthaEn nadaththidumaE



AaththumamaE en uLLamaE | ஆத்துமமே என் உள்ளமே

ஆத்துமமே என் உள்ளமே 
aaththumamaE en uLLamaE
ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்   (2)
aaNdavarai nee thinam thuthippaai
அன்பினால் உன்னை அழைத்தவரை 
anbinaal unnai azhaiththavarai

நாளொரு மேனியும் 
naaLoru mEniyum
பொழுதொரு வண்ணமாய் -2
pozhuthoru vaNNamaai
  நன்மைகள் ஈந்துன்னை வளர்த்தவரே -ஆத்துமமே
  nanmaihaL yeenthunnai vaLarththavaraE

ஜீவனை கொடுத்துன்னை மீட்டவரை  -தூதர் 
jeevanai koduththunnai meettavarai -thoothar
ஜீவ போஜனஞ் சொரிந் தீந்தவரை -2
jeeva pOjananj sorinth theenthavarai
  ஜீவனுள்ளோர்க்கு நீ சாட்சியாய் நின்றிட 
  jeevanuLLOrku nee saatchiyaai nintrida
  ஜீவனால் நிறைத்துன்னை காத்தவரை -2 -ஆத்துமமே
  jeevanaal niraiththunnai kaaththavarai

நடத்திய வழிகள் நோக்கிடுவாய் -அவர் 
nadaththiya vazhihaL nOkkiduvaai -avar
நல்கிய கிருபைகள் நினைத்திடுவாய் -2
nalhiya kirubaihaL ninaiththiduvaai
  ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் 
  aabaththil adaikkalam aaruthal innalil
  அளித்தவர் அருமை இயேசுவல்லோ -2 -ஆத்துமமே
  aLiththavar arumai yEsuvallO

பார்வோனின் சேனைகள் தொடர்ந்த போதும்  -உயர் 
paarvOnin sEnaihaL thodarntha pOthum -uyar
யோர்தானின் அலைகள் புரண்ட போதும் -2
yOrthaanin alaihaL puraNda pOthum
  அக்கினி மெகஸ்தம்பமாய் நின்றவர் 
  akkini mEhasthampamaai nintravar
  அரணும் கேடகமாயிருந்தார் -2 -ஆத்துமமே
  araNum kEdahamaayirunthaar

தூதரும் அறியாத தூதுகள் ஈந்துன்னை 
thootharum ariyaatha thoothuhaL yeenthunnai
தாசனாய் உயர்த்தினார் தாரணியில் -2
thaasanaai uyarththinaar thaaraNiyil
  பாதகனாய் அலைந்தே அழிந்த உன்னை 
  paathahamaai alainthaE azhintha unnai
  தேடியே கரம் தந்தார் வாழ்த்திடுவாய் -2 -ஆத்துமமே
  thEdiyaE karam thanthaar vaazhththiduvaai

ஆவியின் வரங்கள் ஜொலித்திடவே -புது 
aaviyin varangaL joliththidavaE -puthu
ஜீவனின் ஊற்றுகள் சுரந்திடவே -2
jeevanin ootruhaL suranthidavaE
  சுவிசேஷ தொனியும் பறந்திடவே 
  suvisEsha thoniyum paranthidavaE
  ஜெய தொனி கீதங்கள் முழங்கிடவே -2 -ஆத்துமமே
  jeya thoni keethangaL muzhangidavaE

  

AaNigaL paaintha karangaLai viriththaE | ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே -2
aaNihaL paaintha karangaLai viriththaE
  ஆவலாய் இயேசுன்னை  அழைக்கிறாரே -2
  aavalaai yEsunnai azhaikkiraaraE

பார் ! திருமேனி வாரடியேற்றவர்
paar thiru mEni vaaradi yEtravar
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே -2
paara siluvaithanai sumanthu sentranaraE
  பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
  paavamum saabamum sumanthaaraE unakkaai
  பயமின்றி வந்திடுவாய்  -2— ஆணிகள்
  bayamintri vanthiduvaai

மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
mayakkidumO innum maayaiyin inbam
நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே -2
nayaththaalaE unthanai naasamaakkidumO
  உணர்ந்திதையுடனே உன்னதரண்டை 
  uNarnthithai udanaE unnatharaNdai
  சரண்புகுவாய் இத்தருணம் -2— ஆணிகள்
  saraN puhuvaai iththaruNam

கிருபையின் வாசல் அடைந்திடு முன்னே
kirubaiyin vaasal adainthidumunnaE
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே -2
maraNaththin saayalil iNainthiduvaayaE
  உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
  uruvaakkiyaE puthu sirushtiyil vaLara
  கிருபையும் அளித்திடுவார் — -2-ஆணிகள்
  kirubaiyum aLiththiduvaar

பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
parisuththa aaviyaal paramanin anbinai
பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே -2
paharnthiduvaar unthan irudhayanthanilaE
  மறுரூப நாளின் அச்சாரமதுவே
  marurooba naaLin achchaaramathuvaE
  மகிமையும் அடைந்திடுவாய்  -2— ஆணிகள்
  mahimaiyum adainthiduvaai

இயேசுவல்லாது இரட்சிப்புத் தருவோர்
yEsuvallaathu ratchippu tharuvOr
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ -2
ratchagar vEru ihamathiluNdO
  அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
  avar vazhi saththiyam jeevanumaamaE
  அவரே உன் நாயகரே -2— ஆணிகள்
  avaraE un naayagaraE

Enakkoththaasai varum parvatham nEraai | எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்

எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் 
enakkoththaasai varum parvatham nEraai
என் கண்களை ஏறெடுப்பேன் -2
en kaNhaLai YEreduppaEn

வானமும்  பூமியும் படைத்த
vaanamum poomiyum padaiththa
வல்ல தேவனிடமிருந்தே
valla dEvanidamirunthaE
வானமும்  பூமியும் படைத்த
vaanamum poomiyum padaiththa
  எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
  eNNukkadangaa nanmaihaL varumaE
  என் கண்கள் ஏறெடுப்பேன் -ஆ..ஆ..ஆ..ஆ ஆ..-எனக்கொத்தாசை 
  en kaNhaL yEreduppaEn 

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
malaihaL peyarnthahantridinum
நிலைமாறி புவியகன்றிடினும்
nilai maari puvi ahantridinum
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
malaihaL peyarnthahantridinum
  மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் 
  maaridumO avar kirubai ennaaLum
  ஆறுதல் எனக்கவரே -ஆ..ஆ..ஆ..ஆ ஆ..-எனக்கொத்தாசை 
  aaruthal enakkavaraE

என் காலைத் தள்ளாடவொட்டார்
en kaalai thaLLaada vottaar
என்னைக் காக்கும் தேவன் உறங்கார் 
ennai kaakkum dEvan urangaar
என் காலைத் தள்ளாடவொட்டார்
en kaalai thaLLaada vottaar
  இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
  isravElai kaakkum nal dEvan
  ராப்பகல் உறங்காரே -ஆ..ஆ..ஆ..ஆ ஆ..-எனக்கொத்தாசை 
  raappahal urangaaraE

வலப்பக்கத்தில் நிழல் அவரே
valappakkaththil nizhal avaraE
வழுவாமல் காப்பவர் அவரே
vazhuvaamal kaappavar avaraE
வலப்பக்கத்தில் நிழல் அவரே
valappakkaththil nizhal avaraE
  சூரியன் பகலில் சந்திரன் இரவில்
  sooriyan pahalil santhiran iravil
  சேதப்படுத்தாதே -ஆ..ஆ..ஆ..ஆ ஆ..-எனக்கொத்தாசை 
  sEthappaduththaathaE

எத்தீங்கும் என்னை அணுகாமல்
yeththeengum ennai aNuhaamal
ஆத்துமாவைக் காக்கும் நல்  தேவன்
aaththumaavai kaakkum nal dEvan
எத்தீங்கும் என்னை அணுகாமல்
yeththeengum ennai aNuhaamal
  போக்கையும் வரத்தையும் பத்திரமாக
  pOkkaiyum varaththaiyum paththiramaaha
  காப்பாரே இது முதலாய்.-ஆ..ஆ..ஆ..ஆ ஆ..
  kaappaaraE ithu muthalaai





IdhO manusharin maththiyil |இதோ மனுஷரின் மத்தியில்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
ithO manusharin maththiyil dEvaathi dEvanaE
வாசம்  செய்கிறாரே -2
vaasam seiyhiraaraE


தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
dEvan thaabarikkum sthalamaE
தம் ஜனத்தாரின் மத்தியிலாம் -2
tham janaththaarin maththiyilaam
  தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
  dEvan thaan avarhaL dEvanaayirunthaE
  கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! — இதோ
  kaNNeer yaavaiyum thudaikkiraaraE

தேவ ஆலயமும் அவரே
dEva aalayamum avaraE
தூய ஒளி விளக்கும் அவரே -2
thooya oLi viLakkum avaraE
  ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
  jeevanaalaE than janangaLin thaagam theerkkum
  சுத்த ஜீவ நதியும் அவரே ! — இதோ
  suththa jeeva nathiyum avaraE

மகிமை நிறை பூரணமே
mahimai nirai pooraNamaE
மகா பரிசுத்த ஸ்தலமதுவே -2
maha parisuththa sthalamathuvaE
  என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
  entrum thuthiyudanaE athan vaasal uLLaE
  எங்கள் பாதங்கள் நிற்கிறதே -2 -இதோ
  engaL paathangaL nirkirathaE

சீயோனே உன் வாசல்களை
seeyOnaE un vaasalhaLai
ஜீவ தேவனே நேசிக்கிறார் -2
jeeva dEvanaE nEsikkiraar
  சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனை
  seer mihunthidum issuvisEshanthanai
  கூறி உயர்த்திடுவோம் என்றுமே -2 -இதோ
  koori uyarththiduvOm entrumaE

முன்னோடியாம் இயேசு பரன்
munnOdiyaam yEsu paran
மூலைக்கல்லாகி சீயோனிலே -2
moolaikkallaahi seeyOnilaE
  வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
  vaasam seiythidum unnatha siharamathai
  வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் -2 -இதோ
  vaanjaiyOdu naam naadiduvOm



Karththar en mEipparaai irukkiraaraE | கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
karththar en meipparaai irukkiraaraE
தாழ்ச்சி அடையேன் என்றுமே -2
thaazhchchi adaiyaEn entrumaE
  அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து
  avar ennai pulluLLa idangaLil mEiththu
  அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார் -2
  amarntha thaNNeeraNdai nadaththuhiraar

ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
aaththumaavai thEtrum nEsarennai
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே -2
aananthaththaal niraikkiraaraE
  மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
  mahimaiyin naamaththinimiththam avar
  தம் நீதியின் பாதையில் நடத்துகிறார் -2 -கர்த்தர் என் 
  tham neethiyin paathaiyil nadaththuhiraar

மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
maraNa paLLaththaakkil nadanthidinum
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன் -2
maa perum theengukkum anjaEn
  கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
  karththar ennOdentrum iruppathaalaE 
  அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே -2-கர்த்தர் என் 
  avar kOlum thadiyum ennai thEtridumaE

சத்துருக்கள் முன்பின் எனக்காகவே
saththurukkaL mun pin enakkaahavaE
அவர் பந்தியொன்றாயத்தஞ் செய்தார் -2
avar panthi ontraayaththam seiythaar
  என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
  ennai tham eNNaiyaal abishEhiththu
  என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார் -2 -கர்த்தர் என் 
  en paaththiram nirambiyaE vazhiya seiythaar

ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும்
jeevan ennil uLLa kaalam varaiyum
நன்மை கிருபை தொடரும் -2
nanmai kirubai thodarum
  கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
  karththarin veettil naan kaLippudan thuthiththu
  நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன் -2 -கர்த்தர் என் 
  niththiya naatkaLaai nilaiththiruppaEn


Kirubai irakkam niraintha Or | கிருபை இரக்கம் நிறைந்த ஓர்

கிருபை இரக்கம் நிறைந்த ஓர் 
kirubai irakkam nirainthaOr
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
kirubaasanam aa thOntriduthaE
 தருணமேதும் எங்கிலும் நல்ல
 tharuNamEthum engilum nalla
 சகாயம் பெற்றிட ஏற்றதுவே -2
 sahaayam petrida yEtrathuvaE

கிருபையே பெருகுதே
kirubaiyaE peruhuthaE
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
kalvaariynintrum paainthiduthaE
 என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
 ennuLLam nantriyaal pongi vazhiyuthaE
 என்ன என் பாக்கியமிதே -2
 enna en paakkiyamithaE

நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
nammai pOlavaE sOthikkappattum
நாதனோர் பாவமுமற்றவராய்
naathanOr paavamu matravaraai
 நாளும் நம் குறைகள் கண்டுருகும்
 naaLum nam kuraihaL kaNduruhum
 நல்ல ஆசாரியர் நமக்குண்டே -2-கிருபையே
 nalla aasaariyar namakkuNdaE

நம் பெலவீனத்தில் அவர் பெலன்
nam belaveenaththil avar belan
நல்கிடுவார் பரிபூரணமாய்
nalhiduvaar paripooraNamaai
 நாடுவோமே மாறா கிருபையை
 naaduvOmaE maaraa kirubaiyai
 நமக்காகவே அவர் ஜீவிப்பதால் -2 -கிருபையே
 namakkaahavaE avar jeevippathaal

வானங்களின் வழியாய்ப் பரத்தில்
vaanangaLin vazhiyaai paraththil
தானே சென்று இயேசுவா மெமது
thaanaE sentru yEsuvaam emathu
 மா பிரதான ஆசாரியரைப்
 maa pirathaana aasaariyarai
 பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை-2 -கிருபையே
 patriduvOm nOkki nambikkaiyai

பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
pithaavaNdai sErum suththar hatkaai
சதாபரிந்து பேசியே நிற்போர்
sathaa parinthu pEsiyaE nirpOr
 இதோ எம்மையே முற்றுமுடிய
 ithO ennaiyaE mutrumudiya
 இரட்சிக்க வல்லமையுள்ளவரே -2 -கிருபையே
 ratchikka vallamaiyuLLavaraE


KirubaiyaE unnai innaaL varaiyum | கிருபையே உன்னை இந்நாள் வரையும்

கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
kirubaiyaE unnai innaaL varaiyum kaaththathu
என் கிருபையே -கிருபையே
en kirubaiyaE -kirubaiyaE

பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
paathaiyil kashtam aNuhidum pOthu
பங்கம் வரா நான் உன்னைத் தாங்கினேன் -2
pangam varaa naan unnai thaanginaEn
  பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
  belan yeenthaEn karaththaal thookkinaEn unnai naan
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த -2— கிருபையே
enthan anbinaal unnai niruththa

சோதனையாலே சோர்ந்திடும்போது
sOthanaiyaalaE sOrnthidum pOthu
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன் -2
sonthamena naan unnai santhiththaEn
  ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
  jOthiyai un munnil joliththida seiythittaEn
ஜெயகீதங்கள் பாட வைத்திட்டேன் -2— கிருபையே
jeya keethangaL paada vaiththittaEn

ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
yEhanaai neeyum sanjalaththaalaE
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன் -2
yEngum pOthu un aNdai vanthittaEn
  ஏற்ற நல் துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
  yEtra nal thuNaiyai yeenthittaEn allO naan
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன்  -2— கிருபையே
entrum unnai en sonthamaakkinaEn

என்றென்றுமாக என் கிருபை காட்ட
entrentrummaaha en kirubai kaakka
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து -2
koNdaEn unnai immaNNil piriththu
  என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
  en arum mahanaE kaappaEnaE unnai naan
உன் தந்தை நான் உன்னை விடேனே — 2-கிருபையே
un thanthai naan unnai vidEnaE



KirubaiyithaE dEva kirubaiyithaE | கிருபையிதே தேவ கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே
kirubaiyithaE dEva kirubaiyithaE
தாங்கி நடத்தியதே
thaangi nadaththiyathaE
இயேசுவிலே பொன் நேசரிலே
yEsuvilaE pon nEsarilaE
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
ahamahizhnthaE naam aananthippOm

ஆருயிர் அன்பராய் எங்களுடனே
aaruyir anbaraai engaLudanaE
ஜீவிய பாதையிலே இயேசுபரன் -2
jeeviya paathaiyilaE yEsuparan
  அனுதினமும் வழி நடந்தே
  anudhinamum vazhi nadanthaE
  அவரது நாமத்தில் காத்தனரே -2— கிருபையிதே
  avarathu naamaththil kaaththanaraE

எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
eththanaiyO parisuththarhaL marainthaE
மகிமை சேர்ந்தனரே பூரணமாய்
mahimai sErnthanaraE pooraNamaai
  காத்தனரே கர்த்தர் எமை
  kaaththanaraE karththar emai
  கருணையினால் தூய சேவை செய்ய — கிருபையிதே
  karuNaiyinaal thooya sEvai seiyya

அன்பின் அகலமும் நீளம் உயரமும்
anbin ahalamum neeLam uyaramum
ஆழமும் அறிந்துணர  அனுக்கிரகித்தார் -2
aazhamum arinthuNara anukirahiththaar
  கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
  kirisththuvilaE oru manaiyaai
  சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் -2— கிருபையிதே
  sirushtiththaE niruththinaar avar sutharaai

நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
nalla pOraattam pOraadi jeyiththaE
நித்திய ஜீவனை நாம்  பெற்றிடவே -2
niththiya jeevanai naam petridavaE
  விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
  visuvaasaththil nilaiththiduvOm
  அசையாது அழைப்பினை காத்துக் கொள்வோம் -2— கிருபையிதே
  asaiyaathu azhaippinai kaaththuk koLvOm

ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
aaviyum maNavaattiyum aavaludan
வாருமென்றழைக்கின்றாரே வாருமென்பீர் -2
vaarumentrazhaikkintaaraE vaarumenbeer
  சீயோனே நீ பார் உனக்காய்
  seeyOnaE nee paar unakkaai
  நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் -2— கிருபையிதே
  naayahan yEsu thaam veLippaduvaar 

வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
vaarththaiyinaal avar theerththaar enthan
வியாதியும் வேதனையும் வைத்தியராய் -2
viyaathiyum vEthanaiyum vaiththiyaraai
  இயேசுவல்லால் சார்ந்திடவோ
  yEsuvallaal saarnthidavO
  இகமதில் வேறெமக் காருமில்லை  -2— கிருபையிதே
  ihamathil vEremak kaarumillai



Kaappaar unnai kaappaar | காப்பார் உன்னைக் காப்பார்

காப்பார் உன்னைக் காப்பார்,
kaappaar unnai kaappaar
காத்தவர் காப்பார், 
kaaththavar kaappaar
இன்னும் இனிமேலும், காத்திடுவார்
innum inimElum kaaththiduvaar
கலங்காதே மனமே காத்திடுவார்
kalangaathaE manamaE kaaththiduvaar

கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் – அவர்
kaNdunnai azhaiththavar karamathai paar -avar
கைவிடா திருப்பார்  -2
kaividaa thiruppaar
  ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
  aaNduhaL thOrum unakkavar aLiththa
  ஆசிகளை எண்ணிப்பார்
  aasihaLai eNNip paar
  எண்ணிப்பார், எண்ணிப்பார், எண்ணிப்பார்
  eNNippaar eNNippaar eNNippaar
என்றுமதை எண்ணிப்பார் -2 -காப்பார்
entrumathai eNNippaar

இஸ்ரவேலுக்கு வாக்குப்படி 
isravElukku vaakkup padi 
இன்பக் கானான் அளிக்கவில்லையோ? -2
inba kaanaan aLikkavillaiyO
  இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்றும்
  ippOthivarhaLai nirmoolam seiyvathentrum
  பின்னும் இரங்கவில்லையோ?
  pinnum irangavillaiyO
  இல்லையோ, இல்லையோ, இல்லையோ
  illaiyO illaiyO illaiyO
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ -2 -காப்பார்
manasthaabam koLLavillaiyO

வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
veezhchchiyil vizhiththunnai meetpavarum
இகழ்ந்து விடாது சேர்ப்பவரும்  -2
ihazhnthu vidaathu sErppavarum
  சிற்சில வேளையில்
  sirsila vElaiyil
  சிட்சையினா லுன்னைக் கிட்டியிழுப்பவரும் 
  sitchaiyinaa lunnai kittiyizhuppavarum
  ஜெயமும், கனமும், சுகமும் 
  jeyamum ganamum suhamum
உனக்கென்று   மளிப்பவரும் -2 -காப்பார்
unakkentrum aLippavarum




Meham meethil yEsu raajan | மேகமீதில் இயேசு ராஜன்

மேக மீதில் இயேசு ராஜன்
mEha meethil yEsu raajan
வேகம் வாராரே -2
vEgam vaaraaraE
  ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்க
  aayaththamuLLOrai aahaayam sErka
  அவரே வாராரே -2 -மேக மீதில் 
  avaraE vaaraaraE

ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
aaNdavar thaamaE aarpparippOdaE
அவனியில் வாராரே -2
avaniyil vaaraaraE
  மீண்டவரோ மேலோகமே செல்ல
  meeNdavarO mElOhamaE sella
  மேதினியை விடுவார்  -2– மேகமீதில்
  mEthiniyai viduvaar

கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
kirisththuvukkuLLaE mariththOrellaam
கிளம்பியே யெழும்பிடுவார் -2
kiLambiyaE yezhumbiduvaar
  மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
  marikkaathirukkum parisuththarellaam
  மறுரூபமாவாரே  – -2-மேகமீதில்
  maruroopamaavaaraE

பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே
paadu pattOrukku palanaLippaaraE
பாடுபட்டவர் தாமே -2
paadupattavar thaamaE
  கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
  koodum namakkO kuraivillaa palanaiyaE
  கூவியே கொடுத்திடுவார்  -2 – மேகமீதில்
  kooviyaE koduththiduvaar

அவருரைத்த அடையாளங்களெல்லாம்
avaruraiththa adaiyaaLangaLellaam
தவறாமல் நடக்கின்றதே -2
thavaraamal nadakkintrathaE
  அவர் வரும் வேளையை எவருமே அறியார்
  avar varum vELaiyai yevarumaE ariyaar
  ஆண்டவரே யறிவார் -2 – மேகமீதில்
  aaNdavaraE arivaar

ஆயிரம் வருஷம் ஆளுகை செய்வார்
aayiram varusham aaLuhai seiyvaar
ஆண்டவர் இயேசு தாமே -2
aaNdavar yEsu thaamaE
  நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
  neethi samaathaanam nirainthaE irukkum
  ஜோதியின் ஆளுகையில்  -2– மேகமீதில்
  jOthiyin aaLuhaiyil

அல்லேலூயா கீதமே பாடி
allEluyah keethamaE paadi
அகமகிழ்ந்தாடிடுவோம் -2
ahamahizhnthaadiduvOm
  வல்லவர் வரும் வேளையுமிதோ
  vallavar varum vELaiyumithO
  மெல்லவே நெருங்கிற்றே -2 – மேகமீதில்
  mellavaE nerungitraE


Maarida em maa nEsaraE | மாறிடா எம் மா நேசரே

மாறிடா எம் மா நேசரே – ஆ
maaridaa em maa nEsaraE -aa
மாறாதவர் அன்பெந் நாளுமே
maaraathavar anbennaaLumaE
கல்வாரி சிலுவை மீதிலே
kalvaari siluvai meethilaE
காணுதே இம் மா அன்பிதே 
kaaNuthaE Im maa anbithaE 

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
aa yEsuvin mahaa anbithaE
அதன் ஆழம் அறியலாகுமோ
athan aazham ariyalaahumO
இதற்கிணையேதும் வேறில்லையே
itharkiNaiyEthum vErillaiyaE
இணை ஏதும் வேறில்லையே
iNaiyEthum vErillaiyaE

பாவியாக இருக்கையிலே – அன்பால்
paaviyaaha irukkaiyilaE -anbaal
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
paaril unnai thEdi vanthaaraE
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
neesan entrennai thaLLaamalaE
நேசனாக மாற்றிடவே. — ஆ! 
nEsanaaha maatridavaE

உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
uLLaththaal avarai thaLLinum -tham
உள்ளம் போல் நேசித்ததினால்
uLLam pOl nEsiththathinaal
அல்லல் யாவும் அகற்றிடவே
allal yaavum ahatridavaE
ஆதி தேவன் பலியானாரே — ஆ! 
aathi dEvan baliyaanaaraE -

ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
aaviyaal anbai pahirnthida -thooya
தேவனின் விண் சாயல் அணிய
dEvanin viN saayal aNiya
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
aaviyaalaE anbai sorinthaar
ஆவலாய் அவரைச் சந்திக்க — ஆ! இயேசு
aavalaai avarai santhikka






Nantriyaal paadiduvOm | நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம் 
nantriyaal paadiduvOm
நன்றியால் பாடிடுவோம் 
nantriyaal paadiduvOm
  நல்லவர் இயேசு நல்கிய எல்லா
  nallavar yEsu nalhiya ellaa
  நன்மைகளை நினைத்தே -2
  nanmaihaLai ninaiththaE

செங்கடல் தனை நடுவாய் பிரித்த
sengadal thanai naduvaai piriththa
எங்கள் தேவனின் கரமே -2
engaL dEvanin karamaE
  தாங்கியே இந்நாள் வரையும்
  thaangiyaE innaaL varaiyum
தயவாய் மா தயவாய் -2 -நன்றியால் 
thayavaai maa thayavaai 

உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
uyirppiththaE uyarththinaar unnatham varai
உடன் சுதந்திரராய் இருக்க -2
udan suthanthiraraai irukka
  கிருபையின் மகா தானமது வருங்
  kirubaiyin mahaa thaanamathu varung
காலங்களில் விளங்க -2 -நன்றியால் 
kaalangaLil viLanga

ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
jeevanai thiyaahamaai vaiththa palar kadum
சேவையில் மறித்தார் -2
sEvaiyil mariththaar
  சேர்ந்து வந்து சேவை புரிந்து
  sErnthu vanthu sEvai purinthu
சோர்ந்திடாது நிற்போம் -2 -நன்றியால் 
sOrnthidaathu nirpOm

அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை
azhaikkappattOraE neer unnatha azhaippinai
அறிந்தே வந்திடுவீர் -2
arinthaE vanthiduveer
  அளவில்லா திரு ஆக்கமிதனை
  aLavillaa thiru aakkamithanai
அவனியோர்களிப்பீர்  -2 -நன்றியால் 
avaniyOrkkaLippeer
  
சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
seeyOnaip paNinthumaE kiristhEsu raajanaai
சீக்கிரம் வருவார் -2
seekkiram varuvaar
  சிந்தை வைப்போம் சந்திக்கவே
  sinthai vaippOm santhikkavaE
சீயோனின் இராஜனையே -2 -நன்றியால் 
seeyOnin raajanaiyaE



Song Arrangements - D
=========================

D
nantriyaal paadiduvOm
D              A
nantriyaal paadiduvOm
  G               D
  nallavar yEsu nalhiya ellaa
  Em         A         A
  nanmaihaLai ninaiththaE

D         F#m         D
sengadal thanai naduvaai piriththa
       C    G      D
engaL dEvanin karamaE
   G          D
  thaangiyaE innaaL varaiyum
         Em      A
thayavaai maa thayavaai

pOtruvOmaE pOtruvOmaE | போற்றுவோமே போற்றுவோமே

போற்றுவோமே போற்றுவோமே
pOtruvOmaE pOtruvOmaE
  எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே -2
  em dEvareerai ivvELaiyilaE nantriyudanaE
போற்றுவோமே 
pOtruvOmaE 

துங்கன் இயேசுவே தூயா உமக்கே 
thungan yEsuvaE thooya umakkaE
துதிகள் சாற்றிடுவேன் -2
thuthihaL saatriduvaEn
  மங்கா புகழும் மகிழ்ந்து போற்றி 
  namgaa puhazhum mahizhnthu pOtri
  எங்கும் துதித்திடுவேன் 
  engum thuthiththiduvaEn
கங்குல் அற எங்குமே ஒளி 
kangul ara engumaE oLi
மங்கிடாமலே தங்கிட வேணும் -2— போற்றுவோமே 
mangidaamalaE thangida vENum

ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே 
aazhntha sEtrinil amizhntha emmaiyaE
அணைத்து எடுத்தோனே -2
aNaiththu yeduththOnaE
  ஆழிதனி லெம்பாவ மெறிந்த 
  aazhithani lempaava merintha
  அன்னை உத்தமனே
  annai uththamanaE
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன் 
antrum intrum entrum thuthippaEn
மன்னவனையே மண்ணதினிலே  -2— போற்றுவோமே 
mannavanaiyaE maNNathinilaE

பாவம் போக்கியே கோபம் மாற்றியே 
paavam pOkkiyaE kObam maatriyaE
ரோகம் தொலைத்தோனே -2
rOham tholaiththOnaE
  துரோகி என்னையே சுத்திகரித்த 
  thurOhi ennaiyaE suththihariththa
  தூய வேந்தனே
  thooya vEnthanaE
தூயா நேயா காய மாற்றியே 
thooyaa nEyaa kaaya maatriyaE
கருணாநிதியே பரிகாரியே -2— போற்றுவோமே 
karuNanithiyaE parihaariyaE

பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே 
parilennaiyaE piriththeduththOnaE
தாவி வந்தோனே -2
thaavi vanthOnaE
  அகமதினிலே ஆவி ஈந்திட 
  ahamathinilaE aavi yeenthida
  அருள் நிறைந்தவனே
  aruL nirainthavanaE
தரிசனம் தந்த தேவனே
tharisanam thantha dEvanaE
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க  -2— போற்றுவோமே 
parisuththamaai paaril jeevikka

பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட 
pooraNar aahavaE poovil vaazhnthida
கிருபை அளித்தோனே -2
kirubai aLiththOnaE
  புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே 
  puhazhai virumbaEn mahizhvaEn thinamaE
  மகிமை செலுத்திடுவேன்
  mahimai seluththiduvaEn
கோனே தேனே கோதில்லாதோனே 
kOnaE thEnaE kOthillaathOnaE
கானம் பாடியே துதித்திடுவேன் -2— போற்றுவோமே 
kaanam paadiyaE thuthiththiduvaEn

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)