engum puhazh yEsu raajanukkaE
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
ezhil maatchimai vaLar vaalibaraE
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்
ungaLiayallavO uNmai vEtham kaakkum
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் — எங்கும்
uyar veerarena pakthar Othuhiraar
ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
aayiraththoruvar aaveer allO neerum
அதை அறிந்து துதி செய்குவீர் -2
athai arinthu thuthi seiyhuveer
தாயினும் மடங்குசதம் அன்புடைய
thayinum madangu satham anbudaiya
சாமி யேசுவிக்கிதயம் தந்திடுவீர் — எங்கும்
saami yEsuvukkithayam thanthiduveer
கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
kalvi katravarhaL kalvi kallaathOrku
கடன்பட்டவர்கள் கண்திறக்கவே -2
kadan pattavar kaN thirakkavaE
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
pal vazhi alaiyum paathai thappinOrai
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் — எங்கும்
parinthu thiruppa nitham paarththiduveer
தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
thaazhmai sarguNamum thayai kaaruNyamum
தழைப்பதல்லோ தகுந்த கல்வி? -2
thazhaippathallO thahuntha kalvi
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
paazhunthur guNamum paava seiyhai yaavum
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? — எங்கும்
paranthOdap paarppathungaL paaramantrO
சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
suththa suvisEsham thurithamaai sella
தூதர் நீங்களே தூயன்வீரரே -2
thoothar neengaLaE thooyan veeraraE
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்
karththarin paathaththil kaalai maalai thangi
கருணை நிறை வசனம் கற்றிடுவீர் — எங்கும்
karuNai nirai vasanam katriduveer