sthOththiram paadiyaE pOtriduvaEn | ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
sthOththiram paadiyaE pOtriduvaEn
  தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
  dEvaathi dEvanai raajaathi raajanai
  வாழ்த்தி வணங்கிடுவேன் -2
  vaazhththi vaNangiduvaEn

அற்புதமான அன்பே – என்னில்
arputhamaana anbaE -ennil
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
porparan paaraattum thooya anbaE
  என்றும் மாறா தேவ அன்பே
  entrum maaraa dEva anbaE
  என்னுள்ளம் தங்கும் அன்பே -2– ஸ்தோத்திரம்
  ennuLLam thangum anbaE

ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
jOthiyaai vantha anbaE -poovil
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
jeevan thanthu ennai meetta anbaE
  தியாகமான தேவ அன்பே
  thiyaahamaana dEva anbaE
  திவ்விய மதுர அன்பே –2- ஸ்தோத்திரம்
  divya mathura anbaE

மாய உலக அன்பை – நம்பி
maaya ulaha anbai -nambi
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
maaNda ennai kaNdazhaiththa anbaE
  என்னை வென்ற தேவ அன்பே
  ennai ventra dEva anbaE
  என்னில் பொங்கும் பேரன்பே – 2-ஸ்தோத்திரம்
  ennil pongum pEranbaE

ஆதரவான அன்பே – நித்தம்
aatharavaana anbaE -niththam
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
annai pOl ennaiyum thaangum anbaE
  உன்னத மா தேவ அன்பே
  unnatha maa dEva anbaE
  உள்ளங் கவரும் அன்பே  -2– ஸ்தோத்திரம்
  uLLang kavarum anbaE

வாக்கு மாறாத அன்பே – திரு
vaakku maaraatha anbaE -thiru
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
vaarththai uraiththennai thEtrum anbaE
  சர்வ வல்ல தேவ அன்பே
  sarva valla dEv anbaE
  சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்
  santhatham Ongum anbaE 


Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)