Sunthara parama dEva mainthan yEsu kiristhuvukku | சுந்தரப் பரம தேவமைந்தன் இயேசு கிறிஸ்துவுக்கு

சுந்தரப் பரம தேவமைந்தன் இயேசு  கிறிஸ்துவுக்குத்
sunthara parama dEva mainthan yEsu kiristhuvukku
தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் -2
thOththiram puhazhchchi niththiya keerththanam entrum

அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து
antharam puviyum thanthu sontha jeevanaiyum eenthu
ஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் 
aatrinaar nami ontraai koottinaar 
அருள் முடி சூட்டினார்
aruL mudi soottinaar 
கிருபையால் தேற்றினாரே துதி -சுந்தரப் பரம 
kirubaiyaal thEtrinaaraE thuthi

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
paathaha pasaasaal vantha theethenum pavaththaal nontha
பாவிகளான நம்மை உசாவி மீட்டாரே
paavihaLaana nammai usaavi meettaaraE
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த
vEda pithaavuk kuhantha jaathiyaaha kootta vantha
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே
mEsiyaavai patrum visu vaasa veettaaraE
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
kOthaNuhaa neethiparan paathamathin aatharavil
கூடுங்கள் பவத்துயர் போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள்
koodungaL pavaththuyar pOdungaL jeyaththai koNdaadungaL
துதிசொல்லிப் பாடுங்கள் பாடுங்கள் என்றும்-சுந்தரப் பரம 
thuthi solli paadungaL paadungaL entrum


விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
viNNiluLLa jOthihaLum eNNadanga sEnaihaLum
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே
vinthaiyaai kiristhuvai paNinthu pOtravaE
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
maNNiluLLa jOthihaLum naNNum pala poruLkaLum
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே
vallaparan ena thuthi solli yEththavaE
அண்ணலாம் பிதாவுக் கொரே 
aNNalaam pithaavuk koraE 
புண்ணிய குமாரனைக் கொண் டாடிட 
puNNiyak kumaaranaik koN daadida 
அவர் பதம் தேடிட வெகு திரள் கூடிடத் 
avar patham thEdida vehu thiraL koodida
துதி புகழ் பாடிடப் பாடிட என்றும்-சுந்தரப் பரம 
thuthi solli paadidap paadida entrum

சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
saththiyath tharasarhaLum viththaha periyaarhaLum
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே
sangkaththOr haLung kirubai thangi vaazhavaE
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
yeththisai manitharhaLum pakthar visuvaasihaLum
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே
yEha mihum samaathaana maaha vaazhavaE
உத்தம போதகர்களும் சத்ய திருச் சபைகளும்
uththama pOthaharhaLum saththiya thiru sabaihaLum
உயர்ந்து வாழ தீயோன் பயந்து
uyarnthu vaazha theeyOn payanthu
தாழ மிக நயந்து
thaazha miha nayanthu
கிறிஸ்து வுக்கு ஜெயந்தான் நயந்தான் என்றும்-சுந்தரப் பரம 
kiristhuvukku jeyanthaan nayanthaan entrum

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)