காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
kaalam panik kaalam vaanil oLik kOlam
ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்
oorin oru Oram iravin nadu nEram
பாலன் பிறந்தார் அன்று
paalan piranthaar antru
பாசத் திருநாள் இன்று
paasath thiru naaL intru
தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்
theepa sudar yEnthungaL paalan muham kaaNungaL
காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
kaalam panikkaalam vaanil oLik kOlam
பாசத் திருநாள் இன்று
paasath thirunaaL intru
பூக்களின் எழில் புன்னகை தனில்
pookkaLin ezhil punnahai thanil
இறைமகன் பாசம் காணலாம்
iraimahan paasam kaaNalaam
நீரலை எழும் நீள்கடல் தனில்
neeralai ezhum neeLkadal thanil
இறைமகன் நேசம் காணலாம்
iraimagan nEsam kaaNalaam
பகலிலே வேகமாய்
pahalilaE vEhamaai
இரவிலே தீபமாய்
iravilaE theepamaai
காக்கும் இறை நாமமே
kaakkum irai naamamaE
கலங்காதே நாம் வாழலாம் — காலம்
kalangaathaE naam vaazhalaam
காவியம் புகழ் பரமனின் அருள்
kaaviyam puhazh paramanin aruL
மழைத் தரும் மேகம் ஆகுமே
mazhai tharum mEham aahumaE
பாலகன் பதம் பணிந்திடும் மனம்
paalahan patham paNinthidum manam
ஒளி விடும் தீபம் ஆகுமே
oLi vidum theepam aahumaE
அமைதியை செல்வமாய்
amaithiyai selvamaai
அருளையே அமுதமாய்
aruLaiyaE amuthamaai
தாரும் இறை இயேசுவே
thaarum irai yEsuvaE
எம் வாழ்வு ஒளி வீசுமே — காலம்
em vaazhvu oLi veesumaE