KirubaiyithaE dEva kirubaiyithaE | கிருபையிதே தேவ கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே
kirubaiyithaE dEva kirubaiyithaE
தாங்கி நடத்தியதே
thaangi nadaththiyathaE
இயேசுவிலே பொன் நேசரிலே
yEsuvilaE pon nEsarilaE
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
ahamahizhnthaE naam aananthippOm

ஆருயிர் அன்பராய் எங்களுடனே
aaruyir anbaraai engaLudanaE
ஜீவிய பாதையிலே இயேசுபரன் -2
jeeviya paathaiyilaE yEsuparan
  அனுதினமும் வழி நடந்தே
  anudhinamum vazhi nadanthaE
  அவரது நாமத்தில் காத்தனரே -2— கிருபையிதே
  avarathu naamaththil kaaththanaraE

எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
eththanaiyO parisuththarhaL marainthaE
மகிமை சேர்ந்தனரே பூரணமாய்
mahimai sErnthanaraE pooraNamaai
  காத்தனரே கர்த்தர் எமை
  kaaththanaraE karththar emai
  கருணையினால் தூய சேவை செய்ய — கிருபையிதே
  karuNaiyinaal thooya sEvai seiyya

அன்பின் அகலமும் நீளம் உயரமும்
anbin ahalamum neeLam uyaramum
ஆழமும் அறிந்துணர  அனுக்கிரகித்தார் -2
aazhamum arinthuNara anukirahiththaar
  கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
  kirisththuvilaE oru manaiyaai
  சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் -2— கிருபையிதே
  sirushtiththaE niruththinaar avar sutharaai

நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
nalla pOraattam pOraadi jeyiththaE
நித்திய ஜீவனை நாம்  பெற்றிடவே -2
niththiya jeevanai naam petridavaE
  விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
  visuvaasaththil nilaiththiduvOm
  அசையாது அழைப்பினை காத்துக் கொள்வோம் -2— கிருபையிதே
  asaiyaathu azhaippinai kaaththuk koLvOm

ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
aaviyum maNavaattiyum aavaludan
வாருமென்றழைக்கின்றாரே வாருமென்பீர் -2
vaarumentrazhaikkintaaraE vaarumenbeer
  சீயோனே நீ பார் உனக்காய்
  seeyOnaE nee paar unakkaai
  நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் -2— கிருபையிதே
  naayahan yEsu thaam veLippaduvaar 

வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
vaarththaiyinaal avar theerththaar enthan
வியாதியும் வேதனையும் வைத்தியராய் -2
viyaathiyum vEthanaiyum vaiththiyaraai
  இயேசுவல்லால் சார்ந்திடவோ
  yEsuvallaal saarnthidavO
  இகமதில் வேறெமக் காருமில்லை  -2— கிருபையிதே
  ihamathil vEremak kaarumillai



Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)