மேக மீதில் இயேசு ராஜன்
mEha meethil yEsu raajan
வேகம் வாராரே -2
vEgam vaaraaraE
ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்க
aayaththamuLLOrai aahaayam sErka
அவரே வாராரே -2 -மேக மீதில்
avaraE vaaraaraE
ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
aaNdavar thaamaE aarpparippOdaE
அவனியில் வாராரே -2
avaniyil vaaraaraE
மீண்டவரோ மேலோகமே செல்ல
meeNdavarO mElOhamaE sella
மேதினியை விடுவார் -2– மேகமீதில்
mEthiniyai viduvaar
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம்
kirisththuvukkuLLaE mariththOrellaam
கிளம்பியே யெழும்பிடுவார் -2
kiLambiyaE yezhumbiduvaar
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
marikkaathirukkum parisuththarellaam
மறுரூபமாவாரே – -2-மேகமீதில்
maruroopamaavaaraE
பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே
paadu pattOrukku palanaLippaaraE
பாடுபட்டவர் தாமே -2
paadupattavar thaamaE
கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
koodum namakkO kuraivillaa palanaiyaE
கூவியே கொடுத்திடுவார் -2 – மேகமீதில்
kooviyaE koduththiduvaar
அவருரைத்த அடையாளங்களெல்லாம்
avaruraiththa adaiyaaLangaLellaam
தவறாமல் நடக்கின்றதே -2
thavaraamal nadakkintrathaE
அவர் வரும் வேளையை எவருமே அறியார்
avar varum vELaiyai yevarumaE ariyaar
ஆண்டவரே யறிவார் -2 – மேகமீதில்
aaNdavaraE arivaar
ஆயிரம் வருஷம் ஆளுகை செய்வார்
aayiram varusham aaLuhai seiyvaar
ஆண்டவர் இயேசு தாமே -2
aaNdavar yEsu thaamaE
நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
neethi samaathaanam nirainthaE irukkum
ஜோதியின் ஆளுகையில் -2– மேகமீதில்
jOthiyin aaLuhaiyil
அல்லேலூயா கீதமே பாடி
allEluyah keethamaE paadi
அகமகிழ்ந்தாடிடுவோம் -2
ahamahizhnthaadiduvOm
வல்லவர் வரும் வேளையுமிதோ
vallavar varum vELaiyumithO
மெல்லவே நெருங்கிற்றே -2 – மேகமீதில்
mellavaE nerungitraE