இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
immattum jeevan thantha karththaavai aththiyantha
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக
eNNamaai sthOththarippOmaaha
நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
nammai ratchikka vanthu thammai baliyaai thanthu
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் -2 -இம்மட்டும்
narsugam mEvavum arputhamaahavum
காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
kaalam sol pOl kazhiyum thaNNeeraip pOl vadiyum
கனாவைப் போலேயும் ஒழியும்
kanaavaip pOlaEyum ozhiyum
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
vaalibamum maraiyum seelam ellaam kuraiyum
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
maNNin vaazhvontrum nirka maattaathu
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
kOla pathumaikkum neer kumizhikkum puhaikkumaE
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்
koNda ulahaththil aNda paran emai
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்மட்டும்
kaNdu karuNaihaL viNdu thayavudan
பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
palavitha ikkattaiyum thihilhaLaiyum kadanthOm
பரம பாதையைத் தொடர்ந்தோம்
parama paathaiyai thodarnthOm
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
valiya theemaiyai ventrOm naliyum aasaiyai kontrOm
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
vanjar pahaikkum thappi nintrOm
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
kali entrathellaam viNdOm karththaavin meetpaik kaNdOm
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
kaaintha manathOdu paainthu vizhu kaNam
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்மட்டும்
saainthu kedavum aaraainthu neriyudan
சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
sana sEtham varuvikkum kEdukatkOr mudivu
தந்து நொறுங்கினதை கட்டிக்
thanthu norunginathai katti
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
gana sabaiyai aatharith thanbaai aaseervathiththuk
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
kaNNOkki ellaar mEl antrantru
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
thinamum aruL uthikka seiythu thamathu dEva
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
sinthai yinOdathi vinthaiyathaai uyir
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் – இம்மட்டும்
mainthanaal engaLai intha vinOthamaai