கலங்கிடாதே நீ
kalangidaathaE nee
திகைத்திடாதே நான்
thihaiththidaathaE naan
காக்கும் தேவன் என்றாரே
kaakkum dEvan entaaraE
கலங்கிடாதே ...
kalangidaathaE
மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
manitharhaL anbu marainthu pOnaalum
மானிடத்தோர் உன்னை மறந்து போனாலும் -2
maanidaththOr unnai maranthu pOnaalum
மலைகள் விலகி அகன்று போனாலும்
malaihaL vilahi ahantru pOnaalum
மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே -2
maaridaathOr unthan aathaaram naanaE
அலைகள் மோதி படகு அசைந்தால்
alaihaL mOthi padahu asainthaal
அமைதி தரவே வந்திடுவேன்
amaithi tharavaE vanthiduvaEn
அமைதி தரவே வந்திடுவேன் -2-கலங்கிடாதே
amaithi tharavaE vanthiduvaEn
கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
kavalaiyaal uLLam kalangi pOnaalum
கண்ணீர் உந்தன் உணவானாலும் -2
kaNNeer unthan uNavaanaalum
கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
kashtangaL unnai soozhnthu koNdaalum
கரம் பிடித்தே உன்னை நடத்திடுவேனே -2 -அலைகள்
karam pidiththaE unnai nadaththiduvaEnaE
உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்
unthanin kaNNeer thuruththiyai kaNdaEn
உனக்காகவே மனம் உருகியே நின்றேன் -2
unakkaahavaE manam uruhiyaE nintraEn
உந்தனை எந்தன் கரமதில் வரைந்தேன்
unthanai enthan karamathil varainthaEn
உனக்காக யாவையும் செய்து முடிப்பேன் -2 -அலைகள்
unakkaaha yaavaiyum seiythu mudippaEn