கறையேறி உமதண்டை
karai yEri umathaNdai
நிற்கும்போது ரட்சகா
nirkum pOthu ratchagaa
உதவாமல் பலனற்று
uthavaamal belanatru
வெட்கப்பட்டுப் போவேனோ
vetkappattu pOvEnO
ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்
aathma ontrum ratchikkaamal
வெட்கத்தோடு ஆண்டவா
vetkaththOdu aaNdavaa
வெறுங்கையனாக உம்மைக்
verungkaiyanaaha ummai
கண்டு கொள்ளல் ஆகுமா?
kaNdu koLLal aahumaa
ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
aaththumaakkaL pEril vaanjai
வைத்திடாமல் சோம்பலாய்க்
vaiththidaamal sOmbalaai
காலங்கழித்தோர் அந்நாளில்
kaalangkazhiththOr annaaLil
துக்கிப்பார் நிர்ப்பந்தராய் -ஆத்மா ஒன்றும்
thukkippaar nirppantharaai
தேவரீர் கை தாங்க சற்றும்
dEvareer kai thaanga satrum
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
saavukkanji kalangaEn
ஆயினும் நான் பெலன் காண
aayinum naan belan kaaNa
உழைக்காமற் போயினேன் -ஆத்மா ஒன்றும்
uzhaikkaamar pOyinaEn
வாணாள் எல்லாம் வீணாளாகச்
vaaNaaL ellaam veeNaaLaaha
சென்று போயிற்றே ஐயோ
sentru pOyitraE iyyO
மோசம் போனேன் விட்ட நன்மை
mOsam pOnaEn vitta nanmai
அழுதாலும் வருமோ? -ஆத்மா ஒன்றும்
azhuthaalum varumO
பக்தரே உற்சாகத்தோடு
bakththaraE urchaahaththOdu
எழும்பிப் பிரகாசிப்பீர்
ezhumbi pirahaasippeer
ஆத்துமாக்கள் யேசுவண்டை
aaththumaakkaL yEsuvaNdai
வந்துசேர உழைப்பீர் -ஆத்மா ஒன்றும்
vanthu sEra uzhappeer