visuvaasamaE nam jeyamaE
விலைமதியாதோர் நல் பொக்கிஷமே
vilaimathiyaathOr nal pokkishamaE
விசுவாசமாம் கேடகம் தாங்கி
visuvaasamaam kEdaham thaangi
விசுவாச பாதையில் முன்னேறுவோம்
visuvaasa paathaiyil munnEruvOm
மலை போன்ற துன்பங்கள் நெருங்கிடினும்
malai pOntra thunbangaL nerungidinum
மலையாதே யாவும் அகன்றிடுமே
malaiyaathaE yaavum ahantridumaE
வியாதி வருத்தம் போராட்டம் வந்தும்
viyaathi varuththam pOraattam vanthum
விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம் -விசுவாசமே
visuvaasaththaal naamum jeyamadaivOm
எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே
yerihOvin mathilhaL thaharnthidavaE
ஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும்
yEhi sentraan bakththan yOsuvaavum
விசுவாசத்தாலே முன்னேறிய நாம்
visuvaasaththaalaE munnEriya naam
வல்லவர் பெலத்தால் வென்றிடுவோம் -விசுவாசமே
vallavar belaththaal ventriduvOm
விசுவாசம் காத்திட தம் ஜீவனை
visuvaasam kaaththida tham jeevanai
விசுவாச வீரர்கள் இழந்தனரே
visuvaasa veerarhaL izhanthanaraE
நல்ல போராட்டம் போராடிய நாம்
nalla pOraattam pOraadiya naam
விசுவாசத்தை என்றும் காத்துக் கொள்வோம் -விசுவாசமே
visuvaasaththai entrum kaaththu koLvOm
விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும்
visuvaasa nambikkai arikkaiyilum
திட்டமான மனதுடன் நிலைத்திருப்போம்
thittamaana manathudan nilaiththiruppOm
வாக்கு மாறாத கர்த்தரை நிதமும்
vaakku maaraatha karththarai nithamum
விசுவாசத்தோடு நாம் பின் செல்லுவோம் -விசுவாசமே
visuvaasaththOdu naam pin selluvOm
பாவங்கள் பாரங்கள் அகற்றிடவே நாம்
paavangaL paarangaL ahatridavaE naam
பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம்
parisuththar sinthaiyai aNinthiduvOm
இயேசுவை நோக்கி சீராக ஓடி
yEsuvai nOkki seeraaha Odi
விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம் -விசுவாசமே
visuvaasa Ottaththai mudiththiduvOm