Varuvaai tharuNamithuvaE | வருவாய் தருணமிதுவே

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
varuvaai tharuNamithuvaE azhaikkiraaraE
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை -2
valla aaNdavar yEsuvaNdai

வாழ்நாளெல்லாம் வீண்நாளாய்
vaazhnaaLellaam veeN naaLaai
வருத்தத்தோடே களிப்பது ஏன்
varuththaththOdaE kaLippathu yEn
வந்தவர் பாதம் சரணடைந்தால்
vanthavar paatham saraNadainthaal
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார்--வருவாய் 
vaazhviththu unnai sErththuk koLvaar

கட்டின வீடும் நிலம் பொருளும்
kattina veedum nilam poruLum
கண்டிடும் உற்றார் உறவினரும்
kaNdidum utraar uravinarum
கூடுவிட்டு உன் ஆவி போனால்
koodu vittu un aavi pOnaal
கூட உன்னோடு வருவதில்லை--வருவாய் 
kkoda unnOdu varuvathillai

அழகும் மாயை நிலைத்திடாதே
azhahum maayai nilaiththiduthaE
அதை நம்பாதே மயக்கிடுமே
athai nampaathaE mayakkidumaE 
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
maraNam Or naaL santhikkumaE
மறவாதே உன் ஆண்டவரை--வருவாய் 
maravaathaE un aaNdavarai

வானத்தின் கீழே பூமி மேலே
vaanaththin keezhaE poomi mElaE
வானவர் இயேசு நாமம் அல்லால்
vaanavar yEsu naamam allaal
இரட்சிப்படைய வழியில்லையே
ratchippadaiya vazhiyillaiyaE
இரட்சகர் இயேசு வழி அவரே-வருவாய் 
ratchahar yEsu vazhi avaraE

தீராத பாவம் வியாதியையும்
theeraatha paavam viyaathiyaiyum
மாறாத உந்தன் பெலவீனமும்
maaraatha unthan belaveenamum
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
kOra kurusil sumanthu theerththaar
காயங்களால் நீ குணமடைய--வருவாய் 
kaayangaLaal nee guNamadaiya

Labels

#Chords (65) #Spl-Dec25 (8) #Spl-Dec31 (8) #Spl-Dec5 (8) #sarr-ajoy (3) #sarr-alvin (3) #sarr-ebe (1) #sarr-eunice (4) #sarr-justin (2) #sarr-maria (3) #sarr-ronald (4) A (54) Am (8) B (3) Bb (1) Bm (4) C (70) Chistmas (3) Chorus (22) Christmas (66) Cm (28) D (160) Dm (57) E (59) Em (69) English (81) F (129) Fm (30) G (88) Gm (13) Grace (8) Holy Communion (3) Holy Spirit (9) Hope (19) Hymn (43) Palm Sunday (3) Praise (81) Prayer (29) Promise (10) Resurrection (8) Salvation (1) Sunday School (11) Tamil (885) Tamil/English (2) Thanksgiving (11) Wedding (8) Worship (101)