எல்லாம் இயேசுவே, எனக்கெல்லாம் இயேசுவே
ellaam yEsuvaE enakkellaam yEsuvaE
தொல்லைமிகு இவ்வுலகில் துணை இயேசுவே
thollai mihu ivvulahil thuNai yEsuvaE
ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
aayanum sahaayanum nEyanum ubaayanum
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், -எல்லாம்
naayanum enakkanbaana gnana maNa vaaLanum
தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,
thanthai thaai inam janam panthuLLOr sinEhithar
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும், -எல்லாம்
santhOda sahala yOha sampooraNa paakkiyamum
கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,
kavalaiyil aaruthalum kangulilen jOthiyum
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், -எல்லாம்
kashta nOi padukkaiyilaE kai kaNda avizhthamum
போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
pOthaha pithaavumen pOkkinil varaththinil
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும், -எல்லாம்
aatharavu seiythidum koottaaLiyum en thOzhanum
அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
aNiyum aabaraNamum aasthiyum sambaaththiyamum
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் -எல்லாம்
piNaiyaaLiyum meetparumen piriya maththiyasthanum
ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
aana jeeva appamum aavalumen kaavalum
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும். -எல்லாம்
gnana keethamum sathurum naattamum koNdaattamum